இங்கு உழைக்காமல் வாழ்பவர்களை விட வாழாமல் உழைப்பவர்களே அதிகம்.
படிப்பினை குறிப்புக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படிப்பினை குறிப்புக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 ஆக., 2022

அவலட்சணமான கலாச்சாரம் என்றால் என்ன தெரியுமா?

அவலட்சணமான கலாச்சாரம் என்றால் என்ன தெரியுமா?


*அவன் என்னை விருந்துக்கு அழைக்காவிட்டால் நானும் அழைக்கமாட்டேன்.


*அவன் எனக்கு அன்பளிப்புக்கள் கொடுக்காவிட்டால் நானும் கொடுக்கமாட்டேன். 


*அவன் என் வீட்டுக்கு வராவிட்டால் நானும் போகமாட்டேன்.


*அவன் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளாவிட்டால் நானும் தொடர்பு கொள்ளமாட்டேன்.


*அவன் ஸலாம் சொல்லாவிட்டால் நானும் ஸலாம் சொல்ல மாட்டேன்.

*எந்த அளவுக்கென்றால் அவன் எங்கள் வீட்டு மரணத்துக்கு ஆறுதல் சொல்ல வராவிட்டால் நானும் அவன் வீட்டு மரணத்துக்கு போகமாட்டேன். 


❤மனித மனங்களை, உணர்வுகளை கொடுக்கல் வாங்கல் அடிப்படையில் நடத்தாதீர்கள்!

லாப நஷ்டம் என்ற அளவுகோலில் பார்க்காதீர்கள்!


❤பெருந்தன்மையோடும், 

தாராளமனதோடும் நடந்து கொள்ளுங்கள்!

உன்னை விருந்துக்கு அழைக்காதவனை நீ அழைத்துப் பார்!

உனக்கு அன்பளிப்பு தராதவனுக்கு நீ கொடுத்துப் பார்.


❤நாங்கள் இந்த பூமியில் ஒருமுறைதான் வாழப்போகிறோம். 

தவறு செய்தால், மன்னிப்பு கேளுங்கள், சுடுமூஞ்சுடன் இருக்காதீர்கள். 


❤உன்னை காண்போர் எல்லாம் உன்னைப் போன்று இருக்க ஆசைப்படும் அளவுக்கு நீ நடந்துகொள். 


❤உன்னை தெரிந்தவர்கள் எல்லாம் உனக்காக நல்லது நடக்க வேண்டும் என்று பிரார்த்திக்கும் நிலைக்கு உன்னை நீ ஆக்கிக்கொள். 


❤உன்னை கேள்விப்படுவோர் உன்னை கண்டு சந்திக்க விரும்பும் நிலைக்கு ஆக்கிக்கொள். 


❤நன்னடத்தை என்ற நறுமணத்தை நீ பூசிக்கொண்டால் மண்ணுக்கு அடியில் நீ சென்றாலும் உன் வாசம் வீசுவதை யாராலும் தடுக்க முடியாது. 


✍ அலி அல்-தந்தாவி / மறைந்த சிரிய நீதிபதி மற்றும் எழுத்தாளர் 

வாசித்துப் பாருங்கள்... நிச்சயம் உணர்வு பெறுவீர்கள்.

இறைவா! நீயே போதுமானவன். உனக்கே எல்லா புகழும்...

விபத்தொன்றின் காரணமாக முழு உடலும் இயக்கமற்றிருக்கும் சவூதியைச் சேர்ந்த பிரபல அழைப்பாளர் அப்துல்லா Bபானிஃமா அவர்களையே படங்களில் காண்கிறீர்கள்.


தலைப்பகுதி மட்டும்தான் இயங்குகின்றது. அவரால் நடக்கவோ எழும்பவோ கை, கால்களை அசைக்கவோ முடியாது. ஆனால் சோர்ந்து விடாது தன்னம்பிக்கையுடன் மார்க்கத்தைப் போதித்து வருகின்றார்.

ஒரு பேட்டியில் கீழ்வரும் தகவலை எம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:

"வாதம் ஏற்பட்டு என்னைப் போலவே பாதிக்கப்பட்டுள்ள எனது நண்பரொருவர் என்னிடம் கூறினார்: 

"உன்னையும் என்னையும் விட மோசமான நிலையில் இருக்கும் ஒருவர் பற்றிக் கூறவா" என்று கேட்டார்.

"எம்மை விட மோசமானவரா" என்று யோசிக்கும்போதே  நண்பர் தொடர்ந்தார்: 

"பிறப்பில் இருந்தே உடல் ரீதியாகவும்,உள ரீதியாகவும் பாதிக்கப்பட்ட எனது சாச்சாவின் மகன் ஒருவர் இருக்கின்றார். பிறந்தது முதல் படுக்கையிலேயே இருக்கின்றார். பால் அல்லது ஜூஸ்,தண்ணீர் இவைதான் அவரது உணவு. அதுவும் மூக்கின் ஊடாகவே.

ஒருநாளைக்கு மூன்று நேர உணவு.  அவரது நிலையை நினைத்துப் பாருங்கள்.


வழமைபோன்று ஒருநாள் காலை உணவைக் கொடுத்து விட்டு பகல் நேர உணவைக் கொடுக்க வந்தபோது படுக்கை முழுவதும் ரத்தம் பரவியிருந்ததை வீட்டார்கள் கண்டனர்.

எங்கிருந்து இரத்தம் வருகின்றது என்று பார்த்தபோது அவரது​ இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டிருப்பதைக் கண்டனர்.

என்னதான் நடந்தது?

அவரது அறைக்குள் நுழைந்த எலியொன்று அசைவற்றிருந்த அவரின் இரு விரல்களை கடித்திருக்கின்றது!

கடிக்கும்போது அவரால் தனது இடத்தில் இருந்து எழும்பவோ,நகரவோ உதவி கேட்கவோ முடியவில்லை!

பார்த்து கண்ணீர் வடிப்பதைத் தவிர அவரால் எதுவும் செய்ய முடியவில்லை" என்று கூறி முடித்தார்.


சகோதரா...

இரு கைகள், இரு கால்களுடன் நடமாடி, சிரித்துப் பேசி ஆரோக்கியமாக வாழும் நீ உன் மீதான இறைவனின் அருளின் பெறுமதியை உணர்ந்துள்ளாயா?

எத்தனை அருள்கள்!!!

அதற்காக நன்றி கூறுகின்றாயா?

உனது ஆரோக்கியமும் நீடிக்கும் என்பதற்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளாயா?

உன் வாழ்வை எப்படி கழிக்கின்றாய்? 

விழித்துக் கொள்.. 

பாவத்தில் இருந்து விடுபட்டு இறைவனின் பக்கம் திரும்பி விடு.

சிறுசிறு துன்பங்களை விடு...

உன்னிடமுள்ள அருள்களுக்காகவும் 

உன் ஆரோக்கியத்திற்காகவும் நன்றி கூறி அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்.

22 மே, 2020

வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா!!

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால்
அதுல பதிலை எழுதுங்க.
ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது.
ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது.
உங்களால முடியலேன்னா
அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க.
அதுவும் முடியலியா….
படிச்சிகிட்டே போங்க….
ரெடியா.....

1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்..

2. 2010 மற்றும் 2015 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்…

3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க….

4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த
ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க…..

5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்…

உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா?
இல்லே தானே?
நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ
அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை.
இத்தனைக்கும் இவங்களெல்லாம் சாதாரண சாதனையாளர்கள் அல்ல.
அந்தந்த துறையில் உச்சத்தை தொட்டவர்கள்.
மிகப் பெரிய சாதனையாளர்கள்.
ஆனால்……?
கைதட்டல்கள் காணாமல் போய்விடுகின்றன.
சாதனைகள் மறக்கப்பட்டுவிடுகின்றன.
விருதுகளும் பாராட்டுக்களும் அவர்களுடனேயே புதைந்து போய்விடுகின்றன.

இப்பொழுது இன்னொரு ஐந்து கேள்விகள் கேட்கிறேன்
பதில் உடனே கி்டைக்குதா என்று பாருங்கள்

1) உங்கள் பள்ளிக் காலத்தில்
மிகச் சிறப்பாக பாடம் நடத்திய மூன்று ஆசிரியர்கள் பெயரை சொல்லுங்கள்.

2) உங்களுக்கு ஆபத்தான நேரத்தில் உதவிய மூன்று நண்பர்களை சொல்லுங்கள்…

3) உங்களுக்கு வாழ்க்கையில் பயனுள்ளதை கற்றுக்கொடுத்த சிலர் பெயரை கூறுங்கள்…

4) உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றிய சிலரை கூறுங்கள்….

5) நீங்கள் யாருடன் அதிக நேரத்தை செலவழிக்க விரும்புகிறீர்களோ
அவர்கள் பெயர்களை சொல்லுங்கள்…

சில மணித்துளிகளில்
விடைகளை பட்டென்று எழுதி குவித்திருப்பீர்களே.......
இதிலிருந்து என்ன தெரிகிறது?
உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள்
பணக்காரர்களோ,
புகழ்பெற்றவர்களோ
அல்லது பாராட்டுக்களை குவித்தவர்களோ அல்ல.
உங்கள் மீது அக்கறை செலுத்துபவர்களே.
மற்றவர்களை மறக்கும் நீங்கள் இவர்களை மறப்பதில்லை.

பணம் பட்டம் பதவி
இவற்றின் மூலம் பெறும் புகழோ
வெற்றியோ நிலையானதல்ல.
பிறருக்கு உதவி செய்து,
பிறர் மீது அக்கறை கொண்டு
ஒருவர் பெறும் புகழே
வெற்றியே நிலையானது.
உங்கள் மாணவர்கள்
நண்பர்கள் மற்றும் உறவினர்கள்
சிலரிடம் இப்படி கேள்விகள் கேட்டு
அவர்கள் ஒருவராவது
விடையில் உங்கள் பெயரையும் சொல்லுவார்கள் என்றால்…
நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம்.
எனவே
அடுத்தவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்க வேண்டுமென்றால்
எப்போதும் நல்லதே நினையுங்கள்.
எல்லோருக்கும் நல்லதையே சொல்லுங்கள்.
நல்லதையே செய்யுங்கள்.

நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களின் மனசுல நமக்கு இடம் இருக்கான்னும் இல்லையா!!!

வயது என்பது வெறும் எண்ணிக்கையே அன்றி, மனதிற்கு வயது கிடையாது

அமெரிக்க  நாட்டு தொழிலதிபர், Warren Edward Buffett அவர்கள், தனது வணிகத்தை ஆரம்பிக்கும்போது அவரது வயது 11. ஆனால் Colonel Harland Sanders, என்பவர்,  தனது 65வது வயதிலேயே, KFC (Kentucky Fried Chicken) என்று அழைக்கப்படும், துரித உணவகத்தை ஆரம்பித்தார். இது, உலகிலுள்ள துரித உணவு உணவகங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2018ம் ஆண்டின் நிலவரப்படி, 136 நாடுகளில், 22,621 உணவக மையங்களைக் கொண்டிருக்கின்றது. 

Henry Ford அவர்கள், தனது 45 வயதுவரை வெறும் தோல்விகளை மட்டுமே சந்தித்தவர்.

Hary Potter நூலை எழுதிய J.K.Rowling என்பவர், தனது 30 வயதுவரை உணவுக்கே வழியில்லாமல் இருந்தவர். 

பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்தின் கூட்டமைப்பான அலிபாபா குழுமத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான சீன தொழிலதிபர் ஜாக் மா (Jack Ma) அவர்கள், தனது 35வது வயதுவரை வெறும் பத்து டாலரை ஊதியமாகப் பெற்றவர். 

எனவே,
வாழ்வில் வெற்றிக்கனியை எட்டுவதற்கு வயது ஒரு தடையே அல்ல. வெற்றி என்பது நம்மில் பிறப்பது. அமெரிக்க இணையதள கோடீஸ்வரரான Drew Houston என்பவர் சொல்கிறார் –
" நீங்கள் எந்த வயதில் இருந்தாலும், எந்த நிலைமையில் இருந்தாலும், உங்களிடம் இன்னும் நேரமிருக்கிறது. தயங்காது முயற்சி செய்யுங்கள் "என்று. 
இவர், ஏறத்தாழ 220 கோடி டாலர் மதிப்புள்ள தொழில் அமைப்பைக் கொண்டிருப்பவர் என, Forbes இதழ் கூறியுள்ளது.

எனவே வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை இல்லாமல் இல்லை. பலர், அதற்காகச் சோர்வடையாமல், அவற்றை எதிர்கொண்டு வெற்றியடைந்து கொண்டுதான் உள்ளனர். மாற்றுத்திறன் கொண்டவர்களும் சாதித்துத்தான் வருகின்றனர். ஒவ்வொருவருக்கும் குறைந்தது ஒரு திறமையாவது உள்ளது. அதைக் கண்டுபிடித்து அதில் வெற்றியடை முயற்சி செய்ய வேண்டும். மனதிற்குப் பிடித்ததைச் செய்யவும், அதை விருப்பத்தோடும், ஈடுபாட்டோடும் செய்ய வேண்டும். நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தைப் பார். ஓடுவது முள் அல்ல. உன் வாழ்க்கை என்று சொல்கின்றனர். நீங்கள் பந்தயத்தில் ஓடவில்லை. ஒரு தனி வழியில் பயணிக்கிறீர்கள். எனவே மனமுடைந்து போகாதீர்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள். நேரம் வரும்போது வெற்றி நிச்சயம் உங்களை வந்தடையும். வெற்றிக்கு அருகே செல்ல மின்தூக்கிகள் கிடையாது. படிக்கட்டுகளைத்தான் பயன்படுத்த வேண்டும். அதுவும் ஒவ்வொரு படியாக.. என்றெல்லாம் பெரியோர் சொல்கின்றனர். எனவே,  வாழ்வில் வெற்றிபெறுவதற்கு வயதோ, கல்வித் தகுதியோ, ஏழ்மையோ, மாற்றுத்திறனோ எதுவுமே தடையில்லை. முயற்சிப்போம்.

படித்ததில் பிடித்தது

வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது.
அதை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது.
அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.
அந்த பறவைக்கு தனி பாதுகாவலர், தனி உணவு அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது.
கோடை காலத்தை சமாளிக்க தனியாக குளிர் அறையும் அமைக்கப்பட்டது.
பறவை இனம் பெருகியது.

பின்னர் வெளி உலகத்துக்கு சுதந்திரமாக பறக்க விடப்பட்டது.
அதற்கு தன் எதிரிகள் யார் என்று தெரியவில்லை. அதனால்
எதிரிகளுக்கு உணவானது
மின் கம்பங்களில் எப்படி அமர்வது என்று தெரியவில்லை.
பறவைகள் அழிய தொடங்கின எதிரிகளுக்கு உணவாகி, மின் கம்பங்களில் கருகி, வண்டிகளில் மோதியும்
எந்த இனம் அழிய கூடாது என்று முயற்சி எடுக்கப்பட்டதோ, அந்த இனம் அழிய காரணமானது.

அதே போல் தான் நாம், நமக்கு கிடைக்காதவைகளை, நம் பிள்ளைகளுக்கு கிடைக்கட்டு மென்று கொடுத்து அழகு பார்க்கிறோம். அழிவுக்கு உறுதுணையாய் இருக்கிறோம்.

பூங்காவில் இருக்கும் விலங்குக்கு வேட்டையாட தெரியாது.
அதே போல் தான் அதிகம் செல்லம் கொடுக்கும் பிள்ளைகளால் தோல்விகளை தாங்க முடியாது.
பிள்ளைகளை வெளி உலகத்தை தானாக உணர வழி விடுங்கள்.
நல்லது கெட்டதை தானாக காற்றுக் கொள்ளட்டும்.
நம் பிள்ளைகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து விட்டோம், அவன்/அவள் வெளி உலகத்தை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற ஐயம் உங்களுக்கு வேண்டாம்.
நீங்கள் கற்று கொடுக்க மறந்த பாடத்தை, இந்த சமூகம் மற்றும் இயற்கை கற்றுக் கொடுக்கும். எப்படி எனக்கும், என்னை போல் பலருக்கும் கற்றுக் கொடுத்ததோ அதே போல.
இதை தான் ஆங்கிலத்தில்
"survival of fittest" 
என்று சொல்லுகிறோம்
அதை நோக்கித் தான் எல்லா மானிட பிறவிகளும் ஓடிக்கொண்டு இருக்கின்றன.

"முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”

"முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?
-வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார்.

”முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப்படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”. என்றான் ஒரு மாணவன்.

”ஒரு தாவரம் பற்றிப்படர இடமின்றி தவித்தால்கூட அதனை கண்டு மனம்துடித்த அரசனொருவன் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது”- இன்னொரு மாணவன்.

”இதென்ன பைத்தியக்காரத்தனம்?
, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா? 

முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது” – சொல்லிவிட்டு நக்கலாய் சிரித்தான் வேறொரு மாணவன்.

”தான்பயணித்த தேரை ஒரு முல்லைகொடிக்காக விட்டுவிட்டு தான் நடந்து செல்ல துணிந்த அரசன்தான் எவ்வளவு பெரிய வள்ளல்!”…
-ஒரு மாணவி.

”முதலில் தேர் செய்ததே மரத்தில்தான், மரத்தை வெட்டி தேர் செய்துவிட்டு கொடியை காப்பது அறிவுடைமையா? தேர் செய்ய மரம் வெட்டுவதை நிறுத்தவேண்டும் என சொல்லியிருக்கவேண்டும் அந்த அரசன்”- இன்னொரு மாணவியின் பதிலிது.

செயல் ஒன்றுதான்… 

எத்தனை எத்தனை பார்வை. 

எத்தனை எத்தனை கண்ணோட்டம்..

ஒரு விஷயத்தில் எல்லோருக்கும் ஒரே கண்ணோட்டம் இருக்க எப்போதும் சாத்தியமில்லை.

அவரவர் பார்வை…

அவரவர் கண்ணோட்டம்.....

இப்படித்தான் நமது செயல்களைப்பற்றி நாம் நன்மையே செய்தாலும் ஆயிரம் விமர்சனங்கள் வரலாம்.

அதனாலெல்லாம் மனம் சோர்ந்துவிடாமல், மற்றவர்க்கு தீங்கு இல்லையெனில் நமக்கு சரியென்று தோன்றுவதை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பதே சிறப்பு..

"NO MATTER WHAT HAPPENS, TRY TO BE YOURSELF.."

வறுமைதான் வென்றது

நான் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தப் போது...
அமெரிக்காவில் இருந்து,
நான் பிறந்த
லண்டன் மாநகருக்கு சென்றேன்...
நான் இளமையில் பசியுடன், கிழிந்த சட்டையுடன், நடந்து சென்ற அந்த
லண்டன் வீதி தெருக்களில் தான் இப்போது...
என்னை காண இலட்சக் கணக்கில்
மக்கள் திரண்டனர்..

ஆனால் நான் பிச்சைகாரனாய் இருந்த போது  என்னை நேசித்த என் காதலியை தேடினேன்....
அவள் இல்லை....
அன்று வறுமை எங்களை பிரித்தது...
இன்று திரையில் என்னை இலட்சக்கணக்கில் கண்கள்
காண்கின்றன...
நான் தேடுவதெல்லாம் வீதிகளில்
ஏழையாய் நடந்து சென்ற போது என்னை ஜன்னல் வழியாக பார்த்து சிரித்த அந்த கண்களை தான்...!!!

பணம் நமக்கு எல்லாவற்றையும்
கொடுக்கலாம், ஆனால்
வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றை பணத்தால் திருப்பி தர
முடியாது...
#இப்போதும்_வறுமை_தான்_வென்றது...!!!
-சார்லி சாப்லின்..

முதல் காதல் வரும்போது நம்மிடம் எந்த தகுதியும் இருப்பதில்லை
எல்லா தகுதியும் இருக்கும் போது முதல் காதல் வருவதில்லை

நினைவுகளுடன்
கடந்து செல்லும்
ஒவ்வொரு இடங்களிலும்..
மழை நின்றபின்னும்
தூறிக்கொண்டிருக்கிறது
சிலரது ஞாபகங்கள் மட்டும் பலருக்கு...

படித்ததில் பிடித்தது

முன்பு ஜெர்மனி நாடு பிளவுபட்டிருந்தபோது பெர்லின் நகரத்தை கிழக்காகவும் மேற்காகவும் பெரிய மதில் சுவர் பிரித்தது.
ஒருநாள் கிழக்கு பெர்லினை சேர்ந்த சிலர், ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டுவந்து மதில் தாண்டி மேற்கு பெர்லின் பக்கம் கொட்டினார்கள்...
அவ்வளவு குரோதம்...!

மேற்கு பெர்லினை சேர்ந்த மக்களும் அதே மாதிரி செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. மாறாக ஒரு லாரி நிறைய உணவு பொருட்கள், ரொட்டிகள், பால் பொருட்கள் மற்றும் மளிகை சாமான்களை கொண்டுவந்து மதில் தாண்டி இந்த கிழக்கு பெர்லின் பக்கம் அழகாக அடுக்கி வைத்துவிட்டு போனார்கள்.
மேலும் அதன் மீது இவ்வாறு எழுதி வைத்து விட்டு போனார்கள் :
"ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்"
"EACH GIVES WHAT HE HAS"..
எவ்வளவு நிதர்சனமான உண்மை....! உங்களிடம் இருப்பதைதான் உங்களால் கொடுக்க முடியும்.

உங்களுக்கு 'உள்ளே' என்ன இருக்கிறது...?
அன்பா - பகையா...?
அமைதியா - வன்முறையா...?
வாழ்வா - சாவா...?
உங்கள் திறமை, பலம் அழிவுப்பாதையை நோக்கியா - வளர்ச்சிப்பாதையை நோக்கியா...?
இத்தனை காலங்களில் நீங்கள் அடைந்தது என்ன..?
"ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்
எல்லாவற்றையும் விட அனைவருக்கும் பொருந்தும்!
எதை கொடுப்பது என்று என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்..

உங்கள் வகுப்பிலும் அவன் இருக்கலாம்....

வழமையான ஓர் வார இறுதிக்குபின் திங்கட்கிழமை காலை வகுப்பினுள் நுழைகிறார் மிஸஸ் தொம்ஸன். அவருக்கு ஒரு வழக்கம்  இருந்தது. அதுதான்  வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப்பார்த்து
'Love you all!' 
என்று சொல்வது. அவர் பொய் சொல்கிறார் என்று அவருக்கே தெரியும். ஏனெனில் அந்த வகுப்பிலுள்ள ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்கமுடியவில்லை. ஒழுங்காய் உடுத்தாத, எதிலுமே ஒழுங்காய் இல்லாமல் சுட்டிக்காட்டுவதற்கு எந்தவொரு பொசிடிவ் அட்டிடியூடும் இல்லாத 'டெடி'என்கிற தியோடர்! அவனுடன் மட்டும் மிஸஸ் தொம்ஸன் நடந்துகொள்ளும் விதம் வித்தியாசமானது! எந்தவொரு தவறான விடயத்திற்கும் அவனையே உதாரணம் காட்டினார்.எந்த நல்ல விடயத்திற்கும் அவனை நிராகரித்தார்.

அவ்வாண்டிற்கான காலாண்டு பரீட்சை வந்தது. முன்னேற்ற அறிக்கைகள் வகுப்பாசிரியர்களிடமிருந்து தலைமை ஆசிரியரின் ஒப்பதிற்காக அனுப்பப்பட்டது. ரிப்போர்ட்களை ,மேற்பார்வை செய்து கையொப்பமிடுத்துக்கொண்டிருந்த தலைமை ஆசிரியர் மிஸஸ் தொம்ஸனுக்கு அழைப்பு விடுத்தார். அவர் வந்ததும், 'முன்னேற்ற அறிக்கை என்பது ஒரு பிள்ளையின் முன்னேற்றத்தை அறிவிக்கவேண்டும். தன் பிள்ளைக்கும் ஓர் எதிர்காலம் உண்டென்ற நம்பிக்கையை பெற்றோருக்கு தரவேண்டும்! நீங்கள் எழுதியிருப்பதை பார்க்கும்போது  பெற்றோர் அவன்மீது நம்பிக்கை இழந்துவிடுவார்கள்!’ என்று கேள்விக்குறியுடன் டெடியின் முன்னேற்ற அறிக்கையை காட்டிக்கேட்டார். உடனே மிஸஸ் தொம்ஸன் 'என்னால் ஒன்றுமே செய்யமுடியாது. அவனைப்பற்றி எழுதுவதற்கு என்னிடம் ஒரு நல்ல விடயம்கூட இல்லை!' என்றார்.

உடனே தலைமை ஆசிரியர் அங்குள்ள நிர்வாக ஊழியர் ஒருவரிடம் கடந்த ஆண்டுகளுக்கான டெடியின் முன்னேற்ற அறிக்கைகளை மிஸஸ் தொம்ஸனுக்கு கொடுக்குமாறு பணித்தார். அறிக்கைகள் வருகிறது. ஒவ்வொரு ஆண்டாய் விரித்துப்படிக்கிறார் மிஸஸ் தொம்ஸன்.

மூன்றாம் வகுப்பறிக்கை சொன்னது ' வகுப்பின் மிகத்திறமையான மாணவன் டெடி'. தான் வாசித்ததை நம்பமுடியாமல் அதிர்ச்சியில் உறைந்துபோனார் மிஸஸ் தொம்ஸன்.

நான்காம் ஆண்டறிக்கை சொன்னது. ' டெடியின் தாய் இறுதிநிலை கென்சர் நோயால்  பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் டெடி மீது முன்னர்போல அவரால் கவனம் செலுத்தமுடியவில்லை. அதன் விளைவு அவன் பெறுபேறுகளில் தெரிய ஆரம்பித்திருக்கிறது. '

ஐந்தாம் ஆண்டின் அறிக்கை இவ்வாறு சொன்னது, "டெடியின் தாயார் இறந்துவிட்டார்.அவனுக்கு அவசரமாய்  வழிகாட்டல் தேவைப்படுகிறது. இல்லையேல் நாம் அந்தக்குழந்தையை இழந்துவிடுவோம்.!'
கண்களில் கண்ணீருடன் மிஸஸ் தொம்ஸன் தலைமை ஆசிரியரைப்பார்த்து  சொன்னார். 'என்ன செய்யவேண்டுமென்று எனக்கு தெரியும்.'

அடுத்த திங்கள் காலை மிஸஸ் தொம்ஸன் வகுப்புக்கு சென்று பிள்ளைகளை பார்த்து வழக்கம்போல் 'Love you all 'என்றார். இம்முறையும் அவர் பொய் சொல்கிறார் என்று அவருக்குத்தெரியும். ஏனென்றால், தற்போது மற்றக்குழந்தைகளைவிட டெடி மீதிருக்கும் அவரது  அன்பு அளவுகடந்திருந்தது... டெடியுடனான தன் அணுகுமுறையை உடனே மாற்றுவதென்று அவர் தீர்மானித்திருந்தார். அதன் பின்னர் ஒவ்வொரு நல்ல விடயத்திற்கும் டெடியின் பெயர் உச்சரிக்கப்பட்டது. ஒவ்வொரு தவறான உதாரணங்களின்போதும் அவன் பெயர் கவனமாய் தவிர்க்கப்பட்டது…

அவ்வாண்டின் பாடசாலை இறுதிநாள் வந்தது. எல்லா மாணவர்களும் தம் ஆசிரியருக்கென  பரிசுகள் கொண்டுவந்திருந்தார்கள். அதற்குள் ஒரு பொதி மட்டும் ஓர் பழைய செய்தித்தாளால் சுற்றப்பட்டிருந்தது. மிஸஸ் தொம்ஸனுக்கு அதை பார்த்ததுமே அது டெடியிடமிருந்துதான் வந்திருக்கவேண்டுமென உள்ளுணர்வு சொல்லியது. முதலில் அதையே பிரித்தார். பிரித்ததும், அதனுள் பாதி உபயோகித்த சென்ட் போத்தல் ஒன்றும், சில கற்கள் கழன்று விழுந்த பிரேஸ்லெட் ஒன்றும் இருந்தது. அது டெடியினது என்று புரிந்துகொண்ட முழு வகுப்பறையுமே சிரித்தது. ஒன்றுமே சொல்லாமல் மிஸஸ் தொம்ஸன் அந்த வாசனைத்திரவியத்தை தன்மீது பூசிக்கொண்டார். அந்த பிரேஸ்லெட்டை எடுத்து கையில் அணிந்துகொண்டார்.

மெல்லியதாய் ஒரு கால்வாசி புன்னகையுடன் டெடி  சொன்னான்.'' இப்போது உங்களிடம் என் தாயின் வாசம் வருகிறது. இறக்குமுன் அவர் இறுதியாய் பாவித்த சென்ட்  இதுதான். இந்த பிரேஸ்லெட்தான் பெட்டியுள் வைக்குமுன் அவர் உடலில் இருந்து அகற்றப்பட்டது!”

ஓராண்டு கழிந்தது. மிஸஸ் தொம்ஸனின் மேசையில் ஓர் கடிதம் கிடந்தது. ''
‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy.

ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஒரு கடிதம் கிடைத்தது. அதே வரிகளுடன்…
‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy.

ஆண்டுகள் பல வேகமாய் உருண்டன. அவர்களுக்கிடையேயான தொடர்பு எப்படியோ அறுந்துபோனது. மிஸஸ் தொம்ஸன் ஓய்வுபெற்றிருந்தார். பல ஆண்டுகளின் பின்னர் அவருக்கு ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. கடிதம் டொக்டர் தியோடரிடமிருந்து...

Mrs. Thomson,
‘I have seen many more people in my life. But you are the best teacher I have ever seen’, I am getting married. I cannot dream of getting married without your presence.
This is your Teddy.
Dr. Theodore PhD.

அத்துடன் போய்வர விமான டிக்கட்டுக்களும் இணைக்கப்பட்டிருந்தன. மிஸஸ் தொம்ஸனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவரிடம் அந்த சென்ட் போத்தல் தற்போது இல்லை. பிரேஸ்லெட் பாதுகாப்பாய் இருந்தது. அதை அணிந்துகொண்டு church இற்குப்புறப்பட்டார். அங்கு சென்று பின் இருக்கையொன்றில் அமர முற்பட்டபோது அங்கிருந்த ஊழியர்கள் அவரை எப்படியோ அடையாளம் கண்டுகொண்டு முன் வரிசையில் இருந்த ஆசனம் ஒன்றை நோக்கி அழைத்து சென்றனர். அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் எழுதப்பட்டிருந்தது ''MOTHER ".

திருமணம் முடிந்தது. தியோடர் தன் புது மனைவியிடம் மிஸஸ் தொம்ஸனை அறிமுகம் செய்துவைத்தார். ''இவர் மட்டும் இல்லையென்றால் நான் இன்று இந்த இடத்தில் நின்றிருக்கவே முடியாது' தியோடரின் கண்களில் கண்ணீர்.

மிஸஸ் தொம்சன் பெண்ணைப்பார்த்து சொன்னார்
' டெடி இல்லையென்றால், ஒரு ஆசியர் தன் மாணவர்களுக்கு முதலில் ஒரு தாயாய் இருக்கவேண்டுமென்பதை நான் அறிந்திருக்கவே முடியாது!''
.
உங்கள் வகுப்பிலும் ஒரு டெடி இருக்கிறான். உங்கள் உதவிக்காக காத்துக்கொண்டிருக்கிறான். உங்களாலும் அந்த மிஸஸ் தொம்ஸனாய் இருக்கமுடியும்!
இனி அடுத்த திங்கட்கிழமை காலை வகுப்பறைக்குள் நுழையும்போது ஒரு ஆசிரியராய் இல்லாமல் தாயாய் நுழைந்துபாருங்கள்! எம்மாலும் ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் நல்லதோர் திருப்புமுனையாய் இருக்கமுடியும்.

இதயம் தொட்ட ஒரு காணொளியிலிருந்து உங்களுக்காக....

நம் கண் முன்னே தெரியும் ஓட்டைகளை கவனமாக அடைப்போம்

படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு  ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார்.

பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை அவதானித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார்.

வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்த பெயின்டரின் வீடு தேடி வந்து ஒரு பெறுமதிமிக்க காசோலையை கொடுத்தார். அது அவர் ஏற்கனவே கூலியாக வழங்கிய தொகையைப் பார்க்கிலும் பன் மடங்கு அதிகமானது.

பெயின்டருக்கோ அதிர்ச்சி. " நீங்கள் தான் ஏற்கனவே பேசிய கூலியைத் தந்துவிட்டீர்களே? எதற்காக மீண்டும் இவ்வளவு பணம் தருகிறீர்கள்? என்று கேட்டார் பெயின்டர்.

" இல்லை. இது பெயின்ட் அடித்ததற்கான கூலி அல்ல. படகில் இருந்த ஓட்டையை அடைத்ததற்கான பரிசு" என்றார் படகின் உரிமையாளர்.

" இல்லை சேர்... அது ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகைப் பணத்தை தருவதெல்லாம் நியாயமாகாது. தயவு செய்து காசோலையை கொண்டு செல்லுங்கள்" என்றார் பெயின்டர்.

" நண்பரே... உங்களுக்கு விடயம் புரியவில்லை. நடந்த விடயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று சொல்லி விட்டு படகு உரிமையாளர் தொடர்ந்தார்.

" நான் உங்களை படகுக்கு பெயின்ட் அடிக்கச் சொல்லும் போது அதில் இருந்த ஓட்டை பற்றிச் சொல்ல மறத்துவிட்டேன்.

பெயின்ட் அடித்துவிட்டு நீங்களும் போய்விட்டீர்கள். அது காய்ந்த பிறகு எனது பிள்ளைகள் படகை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள்.

படகில் ஓட்டை இருந்த விடயம் அவர்களுக்குத் தெரியாது. நான் அந்த நேரத்தில் அங்கு  இருக்கவுமில்லை.

நான் வந்து பார்த்த போது படகைக் காணவில்லை. படகில் ஓட்டை இருந்த விடயம் அப்போதுதான் நினைவுக்கு வர நான் பதறிப் போய்விட்டேன்.

கரையை நோக்கி ஓடினேன். ஆனால் எனது பிள்ளைகளோ மீன் பிடித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கணம் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் அளவேயில்லை.

உடனே படகில் ஏறி ஓட்டையைப் பார்த்தேன். அது நேர்த்தியாக அடைக்கப்பட்டிருந்தது. இப்போது சொல்லுங்கள். நீங்கள் செய்தது பெறுமதியற்ற சிறியதொரு வேலையா?  

நீங்கள் என்னுடைய பிள்ளைகளின் விலைமதிக்க முடியாத உயிர்களையல்லவா காப்பாற்றியிருக்கிறீர்கள்?  உங்களது இந்தச் 'சிறிய' நற்செயலுக்காக நான் எவ்வளவுதான் பணம் தந்தாலும் ஈடாகாது." என்றார்.

நண்பர்களே...
இதிலிருந்து என்ன புரிகிறது. யாருக்கு எங்கே எப்போது எப்படி என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரதிபலன் பாராது உதவுவோம். பிறரின் கண்ணீரைத் துடைப்போம்.

நம் கண் முன்னே தெரியும் ஓட்டைகளை கவனமாக அடைப்போம். அப்போதுதான் நமது ஓட்டைகளை அடைப்பதற்கான மனிதர்களை இறைவன் அறியாப் புறத்திலிருந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பான்.

சில நேரங்களில் சில மனிதர்களின் அறிவு

ஒரு பெரிய கார் கம்பெனியில் ஒரு இளைஞன் வேலைக்கு சேர்ந்தான். படுசுட்டி மட்டுமல்ல புத்திசாலியும் கூட..
சில காலம் கழித்து அவன் தானே ஒரு காரை வடிவமைத்தான்.. அதை அவனின் மேலாளரிடம் காண்பித்தான்..
அற்புதம் என்றார் மேலாளர்..
இது போல் எந்த கம்பெனியும் தயாரிக்கவில்லை.. உடனே காரை உருவாக்குவோம் என்று அந்த கம்பெனி முதலாளியின் அனுமதியோடு காரை தயாரித்தனர்..

முதலாளிக்கு மிகுந்த சந்தோஷம்.. முதல்கார் கண்ணை கொள்ளை கொண்டது.. அனைவருக்கும் மகிழ்ச்சி..
காரை மார்க்கெட்டிங் பிரிவுக்கு எடுத்து செல்ல முற்படும் போது தான் தெரிந்தது..
காரின் உயரம் வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் அதிகம்..
ஆஹா..
இளைஞன் சோர்ந்தான்.. தன்னையே நொந்து கொண்டான்..
ஆளாளுக்கு ஐடியா கொடுக்க ஆரம்பித்தனர்..
வாயிலின் மேற்பகுதியை உடைத்துவிட்டு காரை வெளியே எடுத்துவிடலாம்.. பின்னர் சரிசெய்யலாம் என்றார் மேலாளர்..
காரை கஷ்டப்பட்டு இருக்கும் வாயில் வழியே எடுத்து செல்லலாம்.. மேற்பகுதியில் கீறல்கள் ஆகும்.. அதை பெயிண்டிங் மூலம் சரிசெய்யலாம் என்றார் பெயிண்டர்..
முதலாளிக்கு மனது ஒப்பவில்லை.. புது காரின் மீது கீறல்களை நினைக்கவே அவருக்கு முடியலை..

அனைவருக்கும் குழப்பம்.. முகத்தில் ஏமாற்றமும் வெறுமையும் ..
இவ்வளவு அழகான புது வடிவமைப்புடன் உருவாக்கிய காரை வெளியே கொண்டு செல்ல முடியலையே..
இதை அனைத்தையும் கவனித்து கொண்டு இருந்த வயதான வாட்ச்மேன் தயங்கி தயங்கி முதலாளியிடம் "ஐயா.. நான் ஒன்று சொன்னால் கேட்பீர்களா? அனுமதி உண்டா?" என்றார்..
அனைவருக்கும் ஆச்சரியம்.. இந்த கிழவன் என்ன சொல்லப்போகிறான் என்று..
ம்..ம்..ம்.. சொல்லு.. சொல்லு..
வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் தான் கார் உயரம் அதிகம்.. காரின் நான்கு டயர்களின் காற்றை இறக்கி விட்டால் காரை சுலபமாக வெளியே எடுத்துவிடலாம்.. பின்பு காற்றை நிரப்பிக்கொள்ளலாம்..
அடடே.. எவ்வளவு சுலபமான வழி.. எந்த சேதமும் இன்றி..
வாழ்க்கை மிக சுலபமானது.. வாழ்வது ஒரு முறை.. அதை அனுபவியுங்கள்..
ஒரு இன்ச் உயரம் போலவே ஒரு இன்ச் ஈகோ & ஒரு இன்ச் கோபம் என எல்லாவற்றையும் டயரிலிருந்து காற்றை கழட்டி விடுவதைப்போல் கழட்டி எறியலாம் தானே..

அமெரிக்க விஞ்ஞானி John Bardeen (ஜான் பார்ட்டீன்) வரலாற்று குறிப்பில் இருந்து

அமெரிக்க விஞ்ஞானி John Bardeen (ஜான் பார்ட்டீன்). டிரான்சிஸ்டரைக் கண்டு பிடித்த மாமேதை. இந்தக் கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
குடும்பத்துடன் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கபட்டது.
தன்னுடைய மகன்கள் இருவர் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார்கள்.
படித்துக்கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்ய இவர் விரும்பவில்லை.
அதனால் மூன்றாவது மகனை மட்டும் நோபல் பரிசு பெற விழாவுக்கு அழைத்து சென்றார்.
விழாவிற்கு தன்னுடைய ஒரு மகனை மட்டும் அழைத்து வந்ததால்,
 "குடும்பத்துடன் வரவில்லையா?"
 என சுவீடன் நாட்டு மன்னர் குவோஸ்டா ஜான்பார்டினை அன்பாக கடிந்து கொண்டார்.

"அடுத்த முறை விழாவுக்கு வரும்போது நிச்சயம் அவர்களை அழைத்துவருகிறேன். இப்போது அவர்கள் படித்துக் கொண்டு இருப்பதால் தொந்தரவு செய்ய வேண்டாம் என அழைத்து வரவில்லை" என்றார் ஜான்பார்டீன்.
மன்னருக்கோ ஆச்சர்யம்.. ஒரு முறை நோபல் பரிசு பெறுவதே மிகப்பெரிய சாதனை.. கடினமாக உழைக்க வேண்டும். இவர் மீண்டும் வருகிறேன் என்கிறாரே.. என்று ஆச்சர்யப்பட்டார்.

1972 ம் வருடம். மீண்டும் அதே நோபல் பரிசு கொடுக்கும் விழா.. ஜான்பார்டன் தனது மகன்களுடன் விழாவில் கலந்துகொண்டார்.. நோபல் பரிசு வழங்கப்பட்டது..
யாருக்கு? நம் ஜான்பார்டன் விஞ்ஞானிக்குத்தான். இரண்டாம் முறை மீண்டும் நோபல் பரிசு பெறுகிறார்.
எதற்கு?
மின்சாரக் கடத்திகளைப் பற்றிய உண்மைகளை இவர் கண்டுப்பிடித்திருந்தார். விழாவில் மன்னர் திக்குமுக்காடிப் போனார்.
சொன்ன சொல்லை நிறைவேற்றுவதற்கு அவர் எடுத்துக்கொண்ட காலம் பதினைந்து வருடங்கள்..எப்படி இது இவருக்கு மட்டும் சாத்தியம் ஆகியது?

தளராத தன்னம்பிக்கை. மன உறுதி.. எடுத்துக்கொண்ட செயலில் முழு கவனம். வெற்றிப் பெற்றே தீருவேன் என்ற உறுதிதான்.....

ஆம்., நண்பர்களே..,
கடினமான உழைப்புக்கு என்றுமே தோல்வி
கிடையாது.
இவ்வாறு நீங்கள் விரும்பும் துறை எதுவாயினும் அதற்குத் தேவையான, முறையான பயிற்சி மற்றும்விடா முயற்சி, எடுத்த செயலை செயல்படுத்துதல் ஆகிய இம்மூன்றும் தேவை.
இவைகளை தொடர்ச்சியாக பின்பற்றும்போது, நிச்சயம் உங்கள் குறிக்கோளில் வெற்றிப்பெறுவது திண்ணம்.
நீங்கள் நினைப்பது எதுவாக இருப்பினும் உங்களை வெற்றி தேடிவரும்.

பசித்த ஏழைகளுக்கு ஒரு கிலோ மாவு

டெல்லியில் ஏழைகள் வசிக்கின்ற பகுதிக்கு 23/4/2020 இரவில் ஒரு லாரி வந்தது

அந்த லாரியில் கோதுமை மாவு ஒரு கிலோ பாக்கெட்டுகள் நிறைய இருந்தது வந்தவர்கள் இஸ்லாமிய சகோதரர்கள்

எல்லோரும் வாங்க ஒரு பாக்கெட் மாவு இலவசமாக தருகிறோம் என்று கூறினார்

ஒரு கிலோதானே என்று கொஞ்சம் வசதியானவர்கள் வந்து வரிசையில் நிற்கவில்லை

ஆனால் பசி கொண்ட ஏழைகள் இரவு நேரம் என்பதால் வாங்கி சென்று வீட்டில் வைத்து உறங்கிவிட்டனர்

மறுநாள் காலையில் சமைப்பதற்காக மாவு பாக்கெட்டை பிரித்தபோது 
காத்திருந்த அதிர்ச்சி
பாக்கெட்டுக்குள் ரூபாய் 15000 இருந்தது

பசித்த ஏழைகளுக்கு ஒரு கிலோ மாவு பெரிதென

இந்த திட்டத்தை செயல்படுத்தியவர் வேறு யாருமில்லை நடிகர் அமீர்கான்.

நடிகர் அமிர்கானுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

Who will cry when you die? என்ற புத்தகத்தில் உள்ள அற்புதமான கருத்துக்கள் சில..

ராபின் சர்மா கனடாவைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர், வழக்கறிஞர் மற்றும் தலைமைத்துவ பேச்சாளர் ஆவார்.

மேலும்..
நைக், மைக்ரோசாப்ட், HP,  ஜெனரல் மோட்டார்ஸ்,  ஐபிஎம் மற்றும் பெட்எக்ஸ் போன்ற புகழ்பெற்ற பல நிறுவனங்களின் முக்கிய பேச்சாளராகவும் இருந்துள்ளார்.

"Who will cry when you die?"
என்ற இவரது புத்தகம் விற்பனையில் பெரும் சாதனை புரிந்ததோடு, இவருக்கு பெரும் புகழையும் பெற்றுத்தந்தது.

அதாவது,
"நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...

“நீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...
நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்...

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழ பழகுங்கள்.
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.
எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.

11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.

13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.

15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!

"ஆணவம் ஆயுளை குறைக்கும்..."

https://m.facebook.com/story.php?story_fbid=2755516114685542&id=100006815413868

மகத்தான வீரர் ரொனால்டோ "CR7"

கால்பந்தைத் தவிர்த்து வேறு எந்த விளையாட்டிலும் பிரசித்தி பெறாத தேசம் போர்ச்சுக்கல், 
இன்று   போர்ச்சுகல் தேசமே ஒருவரை நெஞ்சில் வைத்துச் சுமந்து  கொண்டிருக்கிறது.
என்றால் அது...கிறிஸ்டியானோ ரொனால்டோ என்னும் பெயரைத்தான் 
நீங்கள் பார்க்கும் ரொனால்டோ இந்த உயரத்துக்கு அவ்வளவு எளிதில் வந்துவிடவில்லை. போர்ச்சுகல் வீதியில் பல கனவுகளோடு சுற்றித்திரிந்த சாதாரண இளைஞர்தான் ரொனால்டோ. தனது 15 வயதிலேயே சீரற்ற இதயத்துடிப்பால் பாதிக்கப்பட்டவர். எப்படிப்பட்ட விளையாட்டு வீரனையும் காலி செய்துவிடும் இப்பிரச்சனையை ரொனால்டோ வெல்லக் காரணம், அந்த இதயம் முழுவதையும் அவர் கால்பந்தால் நிரப்பியிருந்தார். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தனது கடும் உழைப்பின் மூலம் இந்த உயரத்தை அடைந்துள்ளார். அந்த நாள்களை ரொனால்டோ நேர்காணல் ஒன்றில் மெல்ல அசைபோட்டார்.

எனக்கு அப்போது 12 வயதாக இருக்கும். என் குடும்பம் ஏழ்மையான நிலையிலிருந்தது இருந்தது. நான் மிகச் சிறிய வீட்டில் வசித்து வந்தேன். அது கொஞ்சம் கடினமான காலம்தான். இரவு 10 மணிக்கு மேல் இருக்கும். நாங்கள் அனைவரும் பசியோடு இருந்தோம். அந்த குடியிருப்புக்குப் பக்கத்தில் சிறிய மெக்டொனால்ட் கடை இருந்தது. இரவில் அந்தக் கடையில் பின்பக்க கதவைத் தட்டி.. எதாவது பர்கர் மிச்சம் இருக்கா என்று கேட்டேன்.  3 பெண்கள் அங்கு இருந்தார்கள். உதவினார்கள் அவர்கள் அற்புதமானவர்கள். அதற்குப் பின்பு அந்த பெண்களை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் எங்கிருந்தாலும் சரி, நான் வசிக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று விருந்து வைக்க வேண்டும்.

நான் போர்ச்சுகலில் பல இடங்களில் அந்தப்பெண்களைத் தேடினேன். அந்த மெக்டொனால்ட் கடையிலும் விசாரித்தேன் ஆனால், எந்த விவரமும் கிடைக்கவில்லை. இந்த நேர்காணல் அந்தப்பெண்களைக் கண்டுபிடிக்க உதவினால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். 

இந்த தலைமுறைக்கு எல்லாம் எளிதாகக் கிடைத்து விடுகிறது. அவர்களுக்கு கம்யூட்டர் கிடைத்து இருக்கிறது இந்த தலைமுறை பெரிதாக எதையும் தியாகம் செய்யவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. நான் வசித்த இடத்துக்கு எனது மகனை அழைத்துச் சென்றேன். நான் வசித்த அறையைக் காண்பித்தேன். நான் இங்கு தான் இருந்தேன் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. `நீங்கள் இங்கேயா இருந்தீங்கன்'னு ஆச்சரியத்தோடு கேட்டான் என உணர்ச்சிகரமாகப் பேசியுள்ளார்.

இந்தநிலையில் சிறுவயதில் ரொனால்டோவுக்கு உதவிய பெண்களில் ஒருவரை போர்ச்சுக்கல் வானொலி நிலையம் ஒன்று கண்டுபிடித்திருக்கிறது. அவரது பெயர் எட்னா என்பது தெரியவந்திருக்கிறது.

ரொனால்டோ, உசேன் போல்டும், மைக்கேல் ஜோர்டானும் கலந்த கலவை. எந்தவொரு தடுப்பாட்டக்காரரையும் மெர்சலாக்கிவிட்டு புயலாகப் பாயும் ரொனால்டோ, பந்தை தலையால் முட்ட 44 செ.மீ வரை காற்றில் பறப்பாராம். ஒரு சராசரி கூடைப்பந்தாட்ட வீரரால்கூட அவ்வளவு தூரம் குதிக்க முடியாது என்கின்றனர், மாடர்ன் டே ஐன்ஸ்டீன்கள்.

தனது ஸ்டைலான ஆட்டத்தால் மட்டுமின்றி, ஹேர் ஸ்டைல், சிக்ஸ் பேக் என்று ஒவ்வொரு தனித்திறமைக்கும் தனித்தனியாக ரசிகர்களைக் கொண்டிருக்கும் ரொனால்டோ, ஒவ்வொரு தடுப்பாட்டக்காரரும் வெறுக்கும் ஒரு கோல் மெஷின்.

ரொனால்டோவின் கால்களில் பந்து சிக்கினால், அதற்கே தலைசுற்றல் ஏற்பட்டுவிடும். அந்த அளவிற்கு சுழன்று, சுழற்றி ஆட்டம் காட்டுவார் ரொனால்டோ. பெனால்டி, ஃப்ரீ கிக், ஹெடிங், டிரிபிளிங் என கால்பந்தின் அனைத்து டிபார்ட்மென்டிலும் டிஸ்ட்ங்ஷன் அடித்தவர் CR7. இவரது ஃப்ரீ கிக்குகள் எல்லாம் 130 கி.மீ வேகத்தில் பாய்ந்து கோல் கீப்பருக்கு பீதி கிளப்பிவிடும்! கால்பந்து ஆட்டத்தின் 90 நிமிடங்களில் ஒவ்வொரு நிமிடத்திலும் கோல் அடித்த ஒரேயொரு வீரர் ரொனால்டோ தான்.

ஆனால் இடைப்பட்ட அந்தக்காலம் அவருக்கு மகிழ்ச்சி மட்டும் நிரம்பியதாக இல்லை. ஏகப்பட்ட சவால்கள் எத்தனையோ தூற்றல்கள், எண்ணற்ற பிரச்சனைகள். ஆனால் அனைத்தையும் தாண்டி தன்னை பலப்படுத்திக்கொண்டே இருந்தார் ரொனால்டோ. ஒவ்வொருவரின் வெற்றிக்கும் தூண்டுகோலாக பலரின் ஊக்கம் இருக்கும். ஆனால் ரொனால்டோவின் வெற்றிகள் தூற்றல்களால் தூண்டப்பட்டவை.
அதன்பின்னர்தான் ஒரு கோல் மெஷினாக மாறினார். தன்னை இழிவுபடுத்தும் ரசிகர்களுக்குத் தன் கால்களால் பதில் சொல்ல நினைத்தார்.

பாலன் டி ஓர் விருதுகள் பல,  சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள் பல,  ஐரோப்பிய கோல்டன் ஷூ விருதுகள் பல என எண்ணற்ற விருதுகள் வாங்கிய மகத்தான வீரர் இந்த CR7

எந்தத் தருணத்திலும் தன்னை நம்புபவர்களுக்காக எதையும் செய்ய வேண்டுமென நினைப்பவர். 
ஒருமுறை 2014 ல் 10வது முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்ல வேண்டுமென்ற ரியல் மாட்ரிட் ரசிகர்களின் 12 ஆண்டு காலக் கனவை  நனவாக்க யாரும் செய்திடாத சாதனையான ஒரே தொடரில் 17 கோல்கள் அடித்து தன் அணியின் வெற்றிக்கு ஆணி வேராய் விளங்கினார் ரொனால்டோ.
அத்தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டாமென டாக்டர்கள் அறிவுறுத்தியும் “சில வெற்றிகளுக்காக சில தியாகங்கள் செய்துகொள்ள வேண்டும். சில வலிகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்” என்று அணிக்காக ரிஸ்க் எடுத்தவர்.

ஆனால் ரொனால்டோவின் இதயத்திற்குள் இருக்கும் ஈரம் இவ்வுலகம் முழுமையாக அறியாது. தன் தந்தை குடியால் இறந்தவர் என்பதால் இதுநாள் வரை மதுவைத் தொடாதவர் ரொனால்டோ. ஒவ்வொரு விளையாட்டு வீரனும் உடலெல்லாம் பச்சை குத்திக்கொள்ள, ‘பச்சை குத்தினால் சில மாதங்கள் ரத்த தானம் செய்ய முடியாது’ என்பதற்காகவே பச்சை குத்திக்கொள்ளாத ஒரு மகத்தான மனிதன் ரொனால்டோ.

தன் சொந்த ஊரில் புற்றுநோய் மருத்துவமனை, குழந்தைகளின் கல்விக்கு உதவுவது என்று சத்தமில்லாமல் இவர் செய்துவருவது எல்லாம் விளையாட்டையும் தாண்டி ஒரு மனிதநேயம் மிக்கவராய் அவரை நிலைநிறுத்தியுள்ளது.
மேலும் தனக்கு கிடைத்த தங்கப் பாதணியை ஏலம் விட்டு பலஸ்தீனக் குழந்தைகளுக்காக அன்பளிப்புச் செய்தவர்தான் இந்த CR7

காலங்கள் காலத்தால் கடந்து போகலாம். நினைவுகள் நில்லாமல் சிதைந்து போகலாம். 
அன்பு கொண்ட உன்னைப்போல் ஒரு வீரனை நெஞ்சம் ஒரு போதும் மறைந்து போவது இல்லை

நம்மை நாமே உரசிப்பார்த்துக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

நம்மை நாமே தனிமையில் உரசிப்பார்த்துக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:

1- சொந்த காலில் நிற்க வேண்டும்:-

தந்தை, தாய், சகோதரர், சொந்தம், நண்பர்கள் என மற்றவர்களிடம் எந்த வித உதவியும், தயவும் இல்லாமல்,
உங்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற்கு நீங்கள் நல்ல நிலையை அடைந்திருக்க வேண்டும்.
உங்களிடம் பணிபுரியும் ஊழியர்கள்,
உங்களுக்கு செய்வது, தயவோ, உதவியோ, ஒத்தாசையோ அல்ல.
அது, அவர்கள் உழைத்துப் பெரும் ஊதியத்துக்கான ஊழியம்.
இறைவன் ஒருவனைத் தவிர,
யாருடைய உதவியும் இன்றி வாழ்வது என்பதே ஓர் பெரிய கெளரவம் தான்.

2- இறைவனின் அளப்பரிய படைப்புக்களை செலவு செய்து, பயணம் செய்து அறிந்து கொள்ளுங்கள்:-

குறைந்தபட்சம் பக்கத்தில் இருக்கும்,
இந்தியா, மாலத் தீவு, சிங்கப்பூர், மலேஷியா, சீனா, இலங்கை சென்று பார்த்து வர வேண்டும். புது இடம், புதிய கலாச்சாரம், உங்களை நீங்களே மெருகேற்றிக் கொள்ள, புத்துணர்ச்சி அடைய பெரிய அளவு அது  உதவும்.

3- ஆர்வம்:-

ஆர்வம் என்பது உங்களின் வேலையை குறிப்பது.
ஆரம்பத்தில், வேலை வேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு வேலையில் நீங்கள் நிர்பந்தத்தால் சேர்ந்திருக்கலாம்.
ஆனால், 30 வயதுக்குள்ளாகவாவது உங்களுக்கு பிடித்த துறையில், வேலையில், தொழிலில் சேர்ந்து விட வேண்டும்.

4- தோல்வி:-

தோல்வியில் கற்காத பாடத்தை நீங்கள், வேறு எங்கும் கற்றுக் கொள்ளவே முடியாது.
தோல்வி என்பது உங்களை ஒழுங்கு படுத்தும் மிகச் சிறந்த ஆசான்.
வாழ்வில் ஒரு முறையாவது,
ஒரு தோல்வியையாவது நீங்கள் கண்டிப்பாக சந்தித்து இருக்க வேண்டும். இல்லையேல், 
30 வயதை கடந்த வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை சரியான முறையில் கையாள முடியாமல் தவிக்கும் நிலை உங்களுக்கு ஏற்படலாம்.

5- முதலீடு:-

சம்பாதித்த பணத்தை, வருமானம் ஈட்டும் வகையில்,வட்டி சம்பந்தப்பட்டது இல்லாமல், வேறு ஏதாவது ஒன்றில் முதலீடு செய்து வைத்து விட வேண்டும்.
அதை செலவு செய்யாமல், வருங்காலத்திற்காக சேமிக்க வேண்டும்.

அடுத்தவர்களுக்கு அவசியத்திற்கும், அவசரத்திற்கும், பிரதி உபகாரத்தை எதிர் பார்க்காமல், உதவுவது கூட மிகப் பெரிய சேமிப்பாகும். இது உங்களுடைய கடமையும் கூட.

6- தீய பழக்கங்கள்:-

கெட்டப் பழக்கங்கள் சிறு வயதிலும், பிராயத்திலும், சுற்றி இருப்பவர்களால் ஏற்படுவது இயற்கை. அவைகளை கண்டறிந்து 30 வயதுக்குள் கண்டிப்பாக நிறுத்தி  விட வேண்டும்.
கேலி, கிண்டல், குத்தல், நக்கல், வசவு, நையாண்டி எல்லாம் ஏற்படத்தான் செய்யும்.
ஏனெனில், தூய்மையான நல்லவர்களை இந்த உலகம் கேலி கிண்டல் தான் செய்யும்.

7- உண்மையான நட்பு:-

எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும்,
எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும்,
உங்கள் அருகில் நின்று தோள் கொடுக்க ஓர் தோழமை அவசியம்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத,
உண்மையான தோழமை,
அமைத்துக் கொள்ள வேண்டும்.

8- பிடிக்காவிட்டால் பிரிந்து விடுங்கள்:-

ஓர் நபருடன் பழகுவது பிடிக்கவில்லையா?
உங்களை சுற்றி இருப்பவர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும்,
சகித்துக் கொண்டு,
பொருத்துக் கொண்டு,
விட்டுக் கொடுத்துக் கொண்டு, இருக்கிறீர்களா?
வேண்டவே வேண்டாம்.
முற்றிலுமாக பிரிந்து விடுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு நல்லது நினைக்கும் நபர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு,  இனி நீங்கள் பயணம் செய்வது தான் உங்களுக்கும் நல்லது.
உங்களின் குடும்ப வாழ்வுக்கும் நல்லது.

சதா சர்வ காலமும் உங்களோடு நட்போடு இருப்பதாக காட்டிக் கொண்டு, எப்போதுமே குத்திக்காட்டி, பேசுபவரை இனம் கண்டு ஒதுங்கி விடுங்கள்.
அவர்களின் உள்ளத்தில், உங்களை பற்றி, வஞ்சகமும், பொறாமையும், சூதும் குடி கொண்டிருக்கும்.
அவர்களின் நிலையை, அவர்கள் அறிய மாட்டார்கள்.

இறைவன் உங்களுக்கு அவர்களை எந்த வகையிலாவது அடையாளப் படுத்தி விடுவான். அவர்களிடம் எச்சரிக்கை உணர்வுடன் பழகுவதை விட, ஒதுங்கி விடுவதே சாலச் சிறந்ததாகும்.
நம்மை நழ்வழியில் ,
முன்னேற்றப் பாதையில்
நம்பிக்கை ஊட்டக்கூடிய,
தோழமையும் எப்போதும் அவசியம்.

9- கைதேர்ந்தவர் என்ற நல்ல பெயர்:-

நீங்கள் எந்த பணி செய்தாலும், அந்தப்  பணியில் நீங்கள் கைதேர்ந்தவர் என்ற நற்பெயருடன் விளங்க வேண்டும்.
அட, அவரு கிட்ட இந்த வேலைய கொடுங்க, சரியா செய்வார் என நான்கு பேர் கூற வேண்டும்.

10- ஆராய்ந்து செயல்படுதல்:-

கனிமங்களை ஆராய தெரிந்தவர்கள் தான் ஆராய்ச்சியாளர்கள் என்றில்லை.
மனிதர்களை ஆராய்ந்து, பகுத்தறிந்து செயல் படுபவர்களும் மிகச் சிறந்த ஆராய்ச்சியாளரே. 

11- நேரம் பொன் போன்றது:-

நேரத்தை கணக்கிட்டு செலவு செய்ய வேண்டும்.
30 வயதுக்கு மேல் நேரத்தை வீண் விரயம் செய்வது என்பது,
உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரும் இழப்பாக அமையும்.

12- ஒற்றுமை:-

ஊரோடு ஒத்து வாழ் என்பார்கள்.
ஆம், 30 வயதுக்கு மேல் நீங்கள் ஓர் நெட்வர்க் போல,
பணியிடம், மற்றும் வாழ்விடத்தில் ஒற்றுமையாக வாழ வேண்டும். இது உங்களை பல நிலைகளில் உயர்த்த உதவும்.

13- நீங்கள் நீங்களாகவே இருங்கள்:-

மற்றவர்களுக்காக உங்களை மாற்றி அமைத்துக் கொண்டு வாழ தேவையில்லை. நீங்கள் நீங்களாக மட்டுமே வாழ வேண்டிய தருணம் இது.

14- படிப்பில் அல்லது அனுபவத்தில் உயரம்:-

உங்கள் துறை சார்ந்த படிப்பில்,
அல்லது அனுபவத்தில், நீங்கள்
முழுமை அடைந்திருக்க வேண்டும்.
பி.எச்.டி முடித்தால்தான் முழுமை அடைந்து விட்டோம் என்றில்லை.
இன்றைய காலத்துக்கு ஏற்ப அப்டேட் என்ன என்று அறிந்து வைத்திருந்தாலே போதுமானது.        
                 
உரசிப் பார்த்து விட்டீர்களா??
அடிக்கடி இதை செய்யுங்கள்..

மொபைல் போனுக்கு சார்ஜ் செய்வது போல எப்போதும் உங்கள் நிலை இறங்காமல் பார்த்து வாழுங்கள்..

மகிழ்ச்சியான வாழ்வு,
நோய் நொடி இல்லாத வாழ்வுதான்..

சிரிங்க.. சிரிங்க..
குறைந்த பட்சம் புன்முறுவலாவது பூத்திருங்கள்..

Brazil Legend Ronaldinho ரொனால்டினோ

உலக உதைப்பந்தாட வரலாற்றில் ‘ரொனால்டினோ’ என்ற பெயரைக் குறிப்பிடாமல் எழுதிவிட முடியாது. அட்டாக்கர், டிஃபண்டர், மிட்ஃபீல்டர் என உதைப்பந்தாட த்தில் எந்தப் பிரிவை எடுத்தாலும், அதனை மேம்படுத்தியதிலோ அல்லது சிதறடித்ததிலோ ரொனால்டினோவின் பெயர் இடம்பெற்றுவிடும். 

இவரது 13வது வயதில்  உள்ளூர் அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டியில் இவருடைய அணி  23-0 என்ற கணக்கில் வெற்றியை பெற்றது. அந்த 23 கோல்களையும் அணிக்காக அடித்தது இந்த ரொனால்டினோ என்ற அற்புதமான வீரர்தான் இதனால் இவரது பதிமூன்றாவது வயதில் ஊடகத்தின் பார்வைக்கு வந்தவர்.

உதைப்பந்தாடத்தில் தீவிர ரசிகர்களுக்கு மட்டும்மல்லாது எல்லோருக்கும் பரிட்சயமானவர் ரொனால்டினோ
தனது நெழிவு சுழிவான ஆடடத்துக்காகவும் தனது சிகை அலங்காரத்துக்காகவும் மிக முக்கியமாக என்ன நேர்ந்தாலும் புன்னகைக்கின்ற சுபவத்துக்காகவும் அனைவராலும் நேசிக்கப்பட்டவர் நான் அறிய உதைபந்தாட்ட வரலாற்றில் வெறுப்பாளர்கள் இல்லாத உதைபந்தாட்ட வீரர்களுல் மிகமுக்கியமானவர்

உலக கிண்ணம், FIFA Ballon d'or உட்பட உதைப்பந்தாடத்தின் உயரிய விருதுகளில் ஒன்றும்விடாமல் வென்றவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் அதிக சம்பளம் பெறும் வீரர்களில் முதன்மையானவராகவும் மரடோனா, பீலே, பெக்கம், ரொனால்டோ, மெஸ்ஸி, வரிசையில் உதைப்பந்தாடட வரிசையில் icon ஆக இருந்தவர்தான் இந்த ரொனால்டினோ

பிரேசில் அணிக்காக மட்டுமல்ல, ஏ.சி.மிலன், பார்சிலோனா, பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் போன்ற புகழ்பெற்ற கால்பந்து கிளப்புகளுக்காக விளையாடி, ரொனால்டினோ கோடி கோடியாக பணத்தைச் சம்பாதித்தவர்.

2003ல் பார்சிலோனா  ரொனால்டினோவை வாங்கும்போது 23 வயது பார்சிலோனா வரலாற்றில் எட்டப்பட்ட மகத்தான சாதனைகள் பலவும் ரொனால்டினோ பார்சிலோனாவில் விளையாடிய காலத்தில் நிகழ்த்தப்பட்டவைகளே பார்சிலோனாவில் மெஸ்ஸி இணையும்போது ரொனால்டினோவுக்கு வயது 26 அந்த காலங்களில் ரொனால்டினோவின் மாணவன் மெஸ்ஸி அதனை அவரே ஒருமுறை இவ்வாறு கூறினார்
"He is more then a team mate.
He is my teacher and mentor"

மேலும் 2002-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில், பிரேசில் அணி சாம்பியனாக முக்கிய காரணமாக இருந்தவர் . இதில், இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதியில் 35 மீட்டர் துாரத்தில் இருந்து 'பிரீ-கிக்' மூலம், இவர் அடித்த கோல் என்றும் மறக்க முடியாதது.  ரெனால்டினோவின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1,000 கோடிக்கு மேல் இருந்தது. தற்போது, இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு ரொனால்டினோ வெளியிட்டால் 1.50 லட்சம் டாலர்கள் வருவாயாக அவருக்குக் கிடைக்கிறது.   

மேலும் உலகின் முன்னணி உதைப்பந்தாட வீரர்கள் இவரைப்பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். அவற்றில் சில
“He is one of the greatest players I have ever seen.”
_Diego Maradona

“We wondered how it was possible there was so much talent in one body. It was unbelievable.”
_Kevin-Prince Boateng

“Ronaldinho is total class – a very, very great player.”
_Zinedine Zidane

“Ronaldinho was more talented than Messi and Cristiano Ronaldo. When we didn’t know what to do, he would create chances to score.”
_Deco

“The best player in history? Ronaldinho. Because when he was at his best nobody could compare. He always had a smile on his face as well. He had skill, scored fantastic goals and put magic into the game.”
_Nani

“I just can’t get enough of watching him play – he’s a delight for the eye.”
_Ruud van Nistelrooy

“I learned a lot from Ronaldinho and Robinho. Football is a tactical game and you sometimes have to be serious. But they taught me to always do it with a smile and have fun. I spent hours watching their clips on YouTube."
_Eden Hazard

இப்படியான மகத்தான வீரர் பின்நாட்களில்  பிரேசில் விரர்களுக்கே உரித்தான கேளிக்கை, குடி, கும்மாளம் ,என நிறுவாகத்துக்கு கட்டுப்படாமல் இருந்ததால் கிளப்பில் இருந்தும்  பின்நாட்களில் அணியில் இருந்தும் ஒதுக்கப்பட்டார். இதனால்
கடந்த 2018-ம் ஆண்டு அனைத்துவிதமான கால்பந்துப் போட்டிகளில் இருந்தும் மகத்தான வீரர் ரொனால்டினோ ஓய்வு பெற்றார்.

பின்னர்  2018-ம் ஆண்டு வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கிய ரொனால்டினோ மற்றும் அவரின் சகோதரரிடத்திலிருந்து பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதத்தில்தான் பாஸ்போர்ட் அவர்களிடத்தில் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும் 20 மாதங்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டது

பின்னர் பராகுவே நாட்டிற்குள் போலியான ஆவணங்களை பயன்படுத்தி நுழைய முயன்றதாக ரொனால்டினோ மற்றும் அவரது சகோதரர் ராபர்டோவும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்படடார்.

பராகுவே உள்துறை அமைச்சர், ``ரொனால்டினோவின் கால்பந்து ஆடும் திறமையை நான் மதிக்கிறேன் அற்புதமான வீரர். அதேபோல, சட்டமும் மதிக்கப்பட வேண்டும். நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால், சட்டத்தை மீறினால் தண்டனை நிச்சயம் கிடைக்கும்'' என்று தெரிவித்தார் 

கைவிலங்கு, கலங்கிய கண்கள்... போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சிறை சென்றார் ரொனால்டினோ!

நீங்கள் சொன்ன வார்த்தைகளும் திரும்பப் பெறவே முடியாதவை.

அந்த முதியவர் பணி ஓய்வு பெற்றவர். வீட்டில் தனிமையில் இருந்தார். படித்தவர்,  மனைவி பிள்ளைகள் இல்லை. 
ஆனால்,
"கொஞ்சம் துடுக்குத்தனம் நிறைந்தவர்".....!!
"மற்றவர்களை எளிதாகக் குறைகூறுபவர்".....!!
அவருடைய பக்கத்து வீட்டுக்கு புதிதாக ஒருவன் குடிவந்தான்.
அவனுக்கு `ஆக்டிங் டிரைவர்’ வேலை.
யாராவது தங்கள் காரை ஓட்ட டிரைவர் வேண்டும் என்று அழைக்கும்போது போவான்.
  மற்ற நேரங்களில் வீட்டிலிருப்பான்.
"இவருக்கு அவன் மேல் சந்தேகம்".....!!
"திடீரென்று நள்ளிரவில் கிளம்பிப் போகிறான்".......!!
"காலை 8 மணிக்கு வீடு திரும்புகிறான்"......!!
"சில நாள்களில் மாலையில் போகிறான்".......!!
"இரவில் வீடு திரும்புகிறான்"......!!
  "ஒருவேளை அவன் திருடனாக இருப்பானோ".....!!
என நினைத்தார்....!!
"இந்த எண்ணம் நாளாக நாளாக வலுப்பெற்றது".......!!
"தன் நண்பர்களிடம் அவனைப் பற்றிச் சொன்னார்".......!!
காய்கறி, பழம் விற்க வருபவர்களிடம் தன் சந்தேகத்தைச் சொன்னார்.
`அந்த ஆள் திருடன்’ என்கிற வதந்தி மெள்ளப் பரவியது.
ஒருகட்டத்தில்,
    "போலீஸாரே அவனை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்"......!!
ஆனால்,
'அவன் அப்பாவி'......,
  "அவன் ஒரு டிரைவர்தான் என்பது நிருபணம் ஆனதும்".....,
"அவனை விடுவித்து விட்டார்கள்".....!!
ஆனால்,
   "அந்த டிரைவருக்கு மன உளைச்சல் அதிகமானது"......!!
  'நான் என்ன திருடனா'....? "என்னைப் போய் கைது செய்து விட்டார்களே".....!!
எல்லாம் 'இந்தப் பக்கத்துவீட்டு பெரியவரால் தானே நடந்தது’ என்கிற.....
" கோபமும் ஆற்றாமையும் எழுந்தது"......!!
அவன்,
"முதியவரின் மேல் மானநஷ்ட வழக்குத் தொடுத்தான்"......!!
வழக்கு விசாரணைக்கு வந்தது.
நீதிபதியிடம் முதியவர்  சொன்னார்...
  "நான் யாரையும் காயப்படுத்தவில்லை".....!
"வாய் வார்த்தையாக எதையோ சொன்னேன்"......!! 
" அவ்வளவு தான் ".....!!
டிரைவரோ,
   "போலீஸால் தான் அலைக்கழிக்கப்பட்டதை" .....,
  அந்த அவமானத்தால் மனது  பாதித்ததை.....,
  "பெரியவர் பரப்பிய வதந்தியால் தான் " என்பதை எடுத்துச் சொன்னான்.
"நீதிபதிக்கு டிரைவரின் நிலையும்".......,
"பெரியவரின் வீம்பும்  புரிந்தது".......!!
முதியவரை அழைத்து ...,
" நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள்"......!!
  உங்கள் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றி நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களையும்
ஒரு காகிதத்தில் எழுதி....,
அந்த பேப்பரை துண்டு, துண்டாக கிழித்து....,
போகிற வழியெல்லாம்.....,
" ஒவ்வொரு துண்டாகப் போட்டுக் கொண்டே செல்லுங்கள்"......!!
"நாளை காலையில் வாருங்கள்’’ என்றார்.....!!
அடுத்த நாள் அந்த முதியவர், டிரைவர் இருவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள்.
நீதிபதி...,
முதியவரை அழைத்தார். "நான் சொன்னதுபோலச் செய்தீர்களா".......?
ஆமாம் ஐயா.’’
நேற்று "நீங்கள் வீசியெறிந்த காகிதத் துண்டுகள் அனைத்தையும் சேகரித்துக் கொண்டு வாருங்கள்"......!!
"அதன் பிறகு தீர்ப்பு சொல்கிறேன் ’’.....!!
"அது எப்படி ஐயா முடியும்"....?
"அந்தக் காகிதத் துண்டுகள் காற்றில் பறந்து சிதறி இருக்கும்"......!!
"அதைப் போய் எப்படிக் கண்டுபிடிப்பது"....?
  "முடியாதில்லையா".....!!
அப்படித் தான்...
" நீங்கள் சொன்ன வார்த்தைகளும் திரும்பப் பெறவே முடியாதவை"......!!
"ஒருவரின் வாழ்க்கையையே பாதிக்கும்  ஆற்றல் கொண்டவை".....!!
"நம் வாய்க்கு நாம்தான் எஜமானனாக இருக்க வேண்டும்"....!!
அப்போது தான் நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு....,
" நாம் அடிமைகளாக மாறாமல் இருப்போம்"......!!
உண்மையில்,
"வதந்தி என்பது ஒரு திருடனை விட மோசமானது"......!!
ஏனென்றால்,
அது ஒரு மனிதனின் மதிப்பு,
    மரியாதை,
         கண்ணியம்,
             நல்ல குணம்
                 அனைத்தையும்
                   களவாடிவிடுகிறது.
"அவற்றை அந்த மனிதருக்கு யாராலும் திரும்பத் தர முடியாது".......!!
இந்த வழக்கின் தீர்ப்பு எப்படியும் இருக்கட்டும்.....!!
நீதிபதி முதியவருக்குச் சொன்ன அறிவுரை....
இன்றைய சூழலில் அனைவரும் பின்பற்ற வேண்டிய பாடம்..

20 மே, 2020

"தனது பொக்கிஷத்தை விற்ற துறவி" "The Monk Who Sold His Ferrari"

உலகின் முன்னணி தலைமைப்பண்பு நிபுணர்களில் ஒருவராக அறியப்படுபவர் ராபின் ஷர்மா. 1998-ம் ஆண்டு வெளியான இவரது
"தனது பொக்கிஷத்தை விற்ற துறவி" "The Monk Who Sold His Ferrari"
புத்தகம், இன்றளவும் தன்னிறைவான வாழ்க்கைக்கான வழிகாட்டியாகத் திகழ்கிறது. இன்றைய அவசரகதியான வாழ்க்கைமுறையில் இலக்குகளை அடைவதற்காகவும் பணத்தைத் தேடியும் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
இதனால், நம்மில் பெரும்பாலானோர் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, தன்னிறைவுடன் இருக்கிறோமா என்பதை அறிந்துகொள்வதற்குகூட
முயல்வதில்லை..அப்படி ஓய்வில்லாமல் வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருப் பவர்களை மனத்தில்வைத்து அவர்களுக்கு வழிகாட்டுவதற்காக எழுதப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம். அதில் இருந்து சில சிறந்த கருத்துக்கள்.
#தலைமைத்துவம் என்பது ஒரு தலைப்போ அல்லது ஒரு பதவியோ அல்ல. அது தாக்கம், செல்வாக்கு மற்றும் உத்வேகம் பற்றியது.
#கடின உழைப்பு கதவுகளைத் திறந்து இந்த உலகத்தை நமக்கு காட்டுகின்றது.
#முதலில் நீங்கள் உங்களை வழிநடத்தக் கற்றுக்கொள்ளும்வரை உங்களால் மற்றவர்களை வழிநடத்த முடியாது.
# ஒவ்வொருவரும் அவர்களை சுற்றியுள்ள மக்களிடம் ஏதோவொரு வழியில் செல்வாக்கு செலுத்துகின்றனர்.
#ஆரோக்கியமாக இருப்பது என்பது உங்களை மேலும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் செயல்.
#பேஸ்புக்கில் பல நண்பர்களைக் கொண்டிருக்கும் ஒரு உலகில் நாம் வாழ்கிறோம், ஆனால் மனித உறவுகளை இழந்துவிட்டோம்.
#யாரும் தோல்வியடைய விரும்பவில்லை. எனவே நம்மில் பெரும்பாலானோர் முயற்சி கூட செய்வதில்லை.
#அதிகாலை நேரமாக எழுவது என்பது எனக்கு நானே கொடுத்துக்கொள்ளக்கூடிய பரிசுகளில் ஒன்று.
#காலநேரத்திற்கு எதிரான போராட்டமே உண்மையான போராட்டம் என்பதை தலைவர்கள் புரிந்துள்ளார்கள்.
#அனைத்தும் இருமுறை உருவாக்கப்படுகின்றது. முதலில் மனதில், பிறகு உண்மையில்.
#மிகச்சிறிய செயல்கள் என்பவை உன்னதமான எண்ணங்களை விட எப்போதும் சிறந்தவை.
#மாற்றம் என்பது தொடக்கத்தில் கடினமானதாகவும், நடுவில் குழப்பமானதாகவும், இறுதியில் சிறந்ததாகவும் உள்ளது.
#மனம் என்பது ஒரு அற்புதமான வேலைக்காரன், ஆனால் ஒரு பயங்கரமான எஜமான்.
#மகிழ்ச்சி என்பது ஒரு பயணம், அது இலக்கல்ல.