இங்கு உழைக்காமல் வாழ்பவர்களை விட வாழாமல் உழைப்பவர்களே அதிகம்.
மின் புத்தகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மின் புத்தகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

8 ஜூன், 2020

Motivational சுயமுன்னேற்ற 'மின் புத்தகங்கள்'-E-Books


             


                                                   


                                                     


                                                       


22 மே, 2020

தொலையுணர்வு _ ஜோசப் மர்ஃபி

.                  download pdf book
நூல்:- தொலையுணர்வு
நூல் ஆசிரியர்:- ஜோசப் மர்ஃபி
தமிழில் : நாகலட்சுமி சண்முகம்
ஆழ்மனத்தின் அற்புத சக்தி” நூலாசிரியரிடமிருந்து
இன்னுமொரு வெற்றிப் படைப்பு
தொலையுணர்வு எனும் அதிசய சக்தி நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. நம்முள் மறைந்து கிடக்கும் இந்த சக்தியை எப்படி வெளிக்கொண்டு வருவது என்பதையும், அதைப் பயன்படுத்தி எவ்வாறு நம்முடைய வாழ்க்கையை அதி அற்புதமான ஒன்றாக மாற்றியமைத்துக் கொள்வது என்பதையும் இப்புத்தகத்தில் ஜோசப் மர்ஃபி தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறார்,அன்றாட வாழ்வின் சவால்களையும் இன்னல்களையும் பிரச்சனைகளையும் சோதனைகளையும் எதிர்கொண்டு அவற்றிலிருந்து வெற்றிகரமாக மீள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும். உங்களுக்குள் இருக்கின்ற அசாதாரணமான சக்திகளை உடனடியாக முடுக்கிவிடுவதற்குத் தேவையான சிறப்பு உத்திகளை இது உங்களுக்கு வழங்கும், உங்கள் ஆழ்மனத்தின் சக்தியைக் கைவசப்படுத்துவதற்கான நடைமுறைச் சாத்தியம் கொண்ட எளிய உத்திகளும், நீங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும், அவற்றை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதற்கான விளக்கங்களும் இப்புத்தகத்தின் ஒவ்வோர் அத்தியாயத்திலும், இடம்பெற்றிருக்கின்றன.
.

21 மே, 2020

சோம வள்ளியப்பன் புத்தகங்கள்.

சோம வள்ளியப்பன் தமிழகத்தின் அனைத்து முன்னணிப் பத்திரிக்கைகளிலும் இதழ்களிலும் தொடர்கள் கட்டுரைகள் எழுதுபவர். தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மனித வளம், பொருளாதாரம், பணம் மற்றும் பங்குச் சந்தை பற்றி கருத்துக்கள் சொல்பவர்.
தமிழகம் முழுவதுமிருந்தும் பல்வேறு கல்லூரிகள், அமைப்புகள் நிறுவனங்களால் பேச, பயிற்சிகொடுக்க அழைக்கப்படுபவர். நிர்வாகம், உறவுகள், சுயமுன்னேற்றம், பணம், பங்குச் சந்தை, ஆளுமைகள் பற்றி இதுவரை 40 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

கீழே பங்குசந்தை தொடர்பான நான்கு புத்தகங்கள் உள்ளது விரும்பியவர்கள் தரவிரக்கம் செய்துகொள்ளுங்கள்.













20 மே, 2020

“Rich Dad, Poor Dad” புத்தகம் சொல்லும் 10 பாடங்கள் - புத்தகம் ஒரு பார்வை .!




பெரும்பாலான மனிதர்கள் ஒரு நாளில் பல மணி நேரங்கள் உழைப்பார்கள். கிட்டத்தட்ட 10 மணி நேரம் உழைப்பவர்கள் கூட உண்டு. ஆனால் அவர்கள் சொல்லிக்கொள்ளும் அளவு எதையும் சாதித்திருக்கவோ, சேமித்திருக்கவோ மாட்டார்கள். ரிச் டாட், புவர் டாட் (Rich Dad, Poor Dad) என்ற நூலின் ஆசிரியர் “ராபர்ட் கியோஸ்கி”, இந்த எலிஓட்டத்திலிருந்து தப்பிக்க பல சாமர்த்தியமான வழிகளை சொல்கிறார். அவற்றிலிருந்து 20 முக்கிய பாடங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
1. பெரும்பாலான மனிதர்களுக்கு அவர்களுடைய தொழில் தான் அவர்களின் வருமானம். அவ்வேலையின் மூலம் அவர்கள் ஈட்டும் பொருளே அவர்களின் வாழ்வாதாரம். ஆனால் பணம் படைத்தவர்களுக்கு இது வேறுபடும். அவர்கள் நிர்வாகிக்கிற சொத்துக்களும் உடமைகளுமே அவர்களின் வாழ்வாதாரம். அவர்களின் முதலீடே வருமானம்.
2. நாம் எதையாவது வாங்க வேண்டுமெனில், அந்த செலவுகளை ஈடு செய்வதற்கான பணப்புழக்கத்தை முதலில் உருவாக்க வேண்டும். எப்போதும் செளகரியங்களும், ஆடம்பரங்களும் இறுதி பட்டியலிலேயே இருக்க வேண்டும்.

3. எப்போது நம் சொத்தின் மூலமாக எதிர்பார்த்ததை விட அதிகமான லாபம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அந்த அதிக லாபத்தை வேறொரு சொத்தில் முதலீடு செய்யவேண்டும்.
4. எப்போதும் வருமானத்தை இலக்காக வரிக்காதீர்கள். மதிப்புமிக்க பல சொத்துக்களை உருவாக்குங்கள். இந்த சுழற்சி தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.
5. செலவுகளை, கடன்களை குறைத்து கொள்ளுங்கள்.

6. உங்கள் சொத்துக்களை பாதுகாக்கவும், வரிச்செலவுகளை குறைக்கவும் முறையான நிறுவனத்தை அணுகுங்கள். பணியாளர் சம்பாதிப்பது, முறையாக வரி செலுத்துவது. மீதமிருப்பதை செலவு செய்வது என்பதே சரியான படிநிலை.
7. நம்மை சுற்றி விரிந்திருக்கும் பல துறை சார்ந்த சிறிய அறிவையேனும் வளர்த்துக்கொள்ளுங்கள். கணக்கியல், முதலீடு, சந்தைப்படுத்தல், சட்டம், விற்பனை, வியாபரம், தலைமைபண்பு, எழுத்தாற்றல், பேச்சாற்றல், மற்றும் தொடர்புகளை வலுப்படுத்தல். எங்கெல்லாம் சாத்தியங்கள் உள்ளனவோ அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள்.
இதே கருத்தை தான் உலகளவில் கோலோச்சும் பில் கேட்ஸ் உட்பட அனைத்து ஜாம்பவன்களும் நமக்கு சொல்லி வருகிறார்கள்.

8. எப்போதும் கற்றுக்கொள்வதற்காக வேலை செய்யுங்கள். வருமானத்திற்க்காக அல்ல. உங்களுக்கு தெரிந்த ஒன்றை விட எங்கு அதிகம கற்றுக்கொள்ளலாமோ அந்த இடத்தில் உங்கள் வேலையை தேடுங்கள். அலிபாபா நிறுவனத்தின் “ஜாக் மா” அவர்கள் சொல்வதும் இதை தான்.
9. வெறுமனே முதலீடுகளை வாங்காதீர்கள். முதலில் முதலீடுகளை எப்படி செய்ய வேணும் என்பதை கற்று கொள்ளுங்கள். உங்களை விட யாரும் சிறப்பாக செய்து விடாத வண்ணம் இருப்பதாக பார்த்து கொள்ளுங்கள்.
10. நீங்கள் எதை கற்கிறீர்களோ, அதுவாகவே ஆவீர்கள். எனவே நீங்கள் கற்க தேர்வு செய்யபவற்றில் கவனமாக இருங்கள். தொடர்ந்து வாசித்து கொண்டேயிருங்கள்

காலை எழுந்தவுடன் தவளை Eat That Frog - பிரெயின் ட்ரெய்சியின் புத்தகம் ஒரு பார்வை.!




இந்த வேலையை நாளை செய்து கொள்ளலாம். இன்று நேரமில்லை. கொஞ்சம் வேலைபளு அதிகமாக உள்ளது. இந்த வேலையை அடுத்த வாரம் செய்து கொள்ளலாம். அய்யோ! இது மிக பெரிய வேலை ஆயிற்றே… இதை முடிக்க இன்னும் ஒரு மாதம் அவகாசமிருக்கிறதே.. கடைசி வாரத்தில் செய்து கொள்ளலாம். இது போன்ற சூழ்நிலைகள் நம்மில் பலருக்கு வருவதும் நாம் வரவழைப்பதும் இயல்பே! இதை procrastination என நேர மேலாண்மையில் அதீத முக்கியத்துவம் கொடுத்து பேசுகிறார்கள்.


அதாவது வேலையை ‘ஒத்தி போடுதல்’. தலைவலி, காய்ச்சலை போல நம்மில் பெரும்பாலானோர் இந்த ஒத்திபோடுதல் என்கிற விஷயத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறோம். மேலை நாட்டு எழுத்தாளர் பிரையன் ட்ரைசியின் ஒத்தி போடுதல் குறித்த புத்தகமான “Eat That Frog” விற்பனையில் சக்கை போடு போடுகிறது.

தலைப்பை போலவே வெகு சுவரஸ்யமான புத்தகம். ஒரு தவளையை தின்பதென்பது எவ்வளவு கடினமான விஷயம். அந்த கடினத்தை முதலில் எதிர்கொள்ளுங்கள் என்பதே சித்தாந்தம். ஒருவேளை உங்கள் முன் இரண்டு தவளைகள் இருந்தால் அதில் எது பெரிய தவளையோ அதை முதலில் உண்ணுங்கள் என்கிற இந்த புத்தகம்.
இங்கே தவளை என்பது ஒரு குறீயிடு மட்டுமே. அதாவது எது அதீத கடினமானதோ அதை முதலில் செய்வதன் மூலம் பெறும் நிறைவும், உத்வேகமும் அடுத்து வரிசையிலுள்ள வேலைகளை எளிதில் முடிக்க உதவும். எனவே எதை உங்கள் மனம் அதிகம் நிராகரிக்கிறதோ, எது ஆகப்பெரிய இலக்கோ, நீங்கள் செய்யும் செயலில் நீங்கள் செய்ய வேண்டிய அடுத்த முக்கிய பணி எதுவோ அதை முதலில் செய்து முடியுங்கள்.
வேலை பளூ, குறைவான நேரம், உங்கள் மூளையில் அதிகம் இடம்பிடித்து கிடப்பது என எதுவேண்டுமானலும் அந்த ‘கடினத்தை எதிர்கொள்ள’ சவாலாக இருக்கலாம். இந்த வேலையை செய்து முடிக்க வேண்டுமே என்கிற அச்சம். வேலை முடிக்க வேண்டுமே என்கிற பொறுப்புணர்வு கூட சில நேரத்தில் அழுத்தமாக மாறி அந்த வேலையை துவங்க நம்மை தயக்கமுற செய்யலாம். இந்த அச்சமும், அழுத்தமும் அந்த தவளைக்கு உணவாக மாறி நம் கண் முன் இன்னும் பெரிதாக வளர்ந்து நிற்குமே தவிர. அது மறைவதற்கான ஒரே வழி அதை உண்பது, அதாவது அந்த கடினமான வேலையை உடனடியாக செய்து முடிப்பது.
“ஒத்திபோடுதல்’ என்ற இயல்பிலிருந்து வெளியேற சில குறிப்புகள்…
கடினமான சவால் நிறைந்த அழைப்புகள், மின்னஞ்சல்கள் போன்றவைகளை முதலில் கையாளுங்கள்.
எதைபற்றியும் அச்சமுறாமல் உடனடியாக துவங்கிவிடுங்கள்.. அந்த வேலையின் பிடி உங்கள் கைகளுக்கு அகப்பட்டுவிட்டால், வேலையின் அலைவரிசை உங்களுக்கு கைவசப்பட்டுவிட்டால்… இத்தனை எளிதானதா இந்த வேலையென நீங்கள் ஆச்சர்யம் கொள்வீர்கள்
உங்கள் பணி சூழலில் இருக்கும் அனைத்து கவனசிதறல்களையும் அப்புறப்படுத்துங்கள். உங்கள் கவனத்தை சிதைக்கும் எதுவும் வேலையை ஒத்திபோட உங்களை ஊக்குவிக்கலாம், அது உங்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும்
சரியான நேரத்தில் உண்டு, உறங்கி முக்கியமாக உடற்பயிற்சி செய்யுங்கள். உளவியல் ரீதியாக அரோக்கியமான உடல்நிலையும் மனநிலையும் ‘ஒத்திபோடுதல்’ என்கிற விஷயத்தை ஒருபோதும் ஆதரிக்காது. நம் மந்ததன்மையும், பசி மற்றும் தூக்க உணர்வுகள் நம்மை ‘ஒத்தி போடுதலுக்கு’ இழுத்து செல்லும் முக்கிய காரணிகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டு வேலைகளை இணையாக செய்கிற போது, ஒரு வேலைக்கும் மற்ற வேலைக்கு இடையே ஒரு வித்தியாசம், புத்துணர்வு, கிடைக்கும். மேலும் ஒரே வேலை செய்கிறோம் என்ற சலிப்பு ஏற்படாது.
எப்போதும் எல்லாம் நம் மனம் ஒத்தி போடுதல் பற்றி எண்ணுகிறதோ.. அப்போது முதலில் இதை துவங்குவோம்.. பின்பு ஒத்தி போடுதல் குறித்து சிந்திப்போம் என்கிற நேர்மறை சிந்தனையை நமக்குள் வளர்த்து கொள்ளுதல் அவசியம். காரணம் ஒருமுறை செய்ய துவங்கிவிட்டால் பின்பு அந்த வேலையே நம்மை வழிநடத்த துவங்கிவிடும். எனவே பெரிய வேலைகளை சிறு சிறு பகுதிகளாக பிரித்து திட்டமிட்டு கொள்ளுங்கள்.
நாம் நினைவில் கொள்ள வேண்டியது இந்த கடினம் என்கிற தவளை ஒரே இரவில் தோன்றியதல்ல அதே சமயத்தில் இது ஒரே சமயத்தில் தீர்ந்துவிட கூடியதும் அல்ல. எனவே அந்த தவளையை(கடினத்தை) எதிர்கொள்வதை புதிய பழக்கமாக கடைபிடியுங்கள்.
இந்த தவளையை நீங்கள் உண்டால், அது உங்களுக்கு அளப்பறிய ஆற்றலையும், சவால்களை, கடினங்களை சந்திக்கிற வல்லமையையும் கொடுக்கும்.
என்ன நண்பர்களே தவளையை உண்ண தயார் தானே?

அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள் "The 7 Habits of Highly Effective People"


அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள், இந்த புத்தகத்தை எழுதியவர் ஸ்டீபன் கவே.  ஆங்கிலத்தில் ‘The 7 Habits of Highly Effective People’ என்ற பெயரில் வெளியான இந்த புத்தகத்தை தமிழிலில் மொழி பெயர்த்துள்ளனர்.  சுமார் இரண்டு கோடி பிரதிகளுக்கும் மேலாக விற்றுள்ள சுய முன்னேற்ற புத்தகம்.  ஆண்டுகள் பல ஆன பிறகும் இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளும் உத்திகளும் இன்றும் தொழில் முனைவோர் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
தேவையானவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.