உங்கள் எண்ணங்களையும் வாழ்க்கையையும் மாற்றுவதற்கான வழிகளைப் பற்றி எழுதுகிறேன். சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை மன அமைதி மற்றும் பொதுஅறிவு பற்றி தெரிந்துகொள்ள, தொடர்ந்து என்னை பின்தொடருங்கள்.
Labels
- படிப்பினை குறிப்புக்கள் (66)
- வரலாறு (31)
- சிந்தனை துளிகள் (27)
- விந்தை உலகம் (17)
- பொதுஅறிவு (16)
- மருத்துவம் (13)
- தொழில்நுட்பம் (10)
- இஸ்லாம் (9)
- மின் புத்தகங்கள் (7)
- தமிழ் ஆடியோ புத்தகங்கள் (3)
விந்தை உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விந்தை உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
19 நவ., 2015
ராபின் ஹூட் என்று சொல்லப்படும் என்றிக் டூரன் (Enric Duran ) யார் இவர்??
மேலே உள்ள படத்தில் இருப்பவர் நடிகரோ, இல்லை விளையாட்டு வீரரோ இல்லை. உண்மையை சொல்ல போனால் இவர் பல கொடிகளால் சுருட்டிய மோசடி பேர்வழி. அப்புறோம் எதுக்கு இவரை ராபின் ஹூட்னு சொல்ற....இப்படி நீங்கள் கேட்கலாம். மேலும் படியுங்கள்.
இவர் ஸ்பெயினை சேர்ந்த என்றிக் டூரன் (Enric Duran ). பார்செலோனா நகரை சேர்ந்த பிரபல முதலாளித்துவ எதிர்ப்பு போராளி. நாடு முழுவதும் பேசப் படும் அளவு புகழ் பெற அவன் செய்த காரியம் ஒன்றே ஒன்று தான்.
ஸ்பெயின் வங்கிகளில் பெரிய தொகை கடன்களை எடுத்தார். 39 வங்கிகளில் சுமார் அரை மில்லியன் யூரோக்கள் கடனாக எடுத்த போதிலும், அதை திருப்பிச் செலுத்தும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. தான் எடுத்த பணத்தை ஏழைகளுக்கும், பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் குடும்பங்களுக்கும் பகிர்ந்து கொடுத்தான். மிகுதியை முதலாளித்துவத்தை எதிர்த்து போராடும் அமைப்பிற்கு வழங்கினான். ஒரு வருடம் தலைமறைவாக இருந்து விட்டு நாடு திரும்பிய போது, காவல்துறை கைது செய்தது. ஆனால் மக்கள் ஆதரவு அவன் பக்கம் இருந்தது. நீதிபதிகளும் செயலின் நியாயத் தன்மை கருதி விடுதலை செய்ய நேர்ந்தது. "உண்மையில் வங்கிகள் அன்றாடம் மக்களை கொள்ளையடித்து வருகின்றன. நான் மக்களின் பணத்தை மக்களுக்கே திருப்பிக் கொடுத்தேன்." இவ்வாறு கூறுகிறார் Enric Duran.
ஸ்பெயினுக்கு வெளியே ஒரு சிலரே அறிந்த "முதலாளித்துவ எதிர்ப்பு வங்கிக் கொள்ளை" பற்றி சர்வதேச ஊடகங்கள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்துள்ளன. உலக மக்கள் எல்லாம் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி அல்லல் படும் நேரம், ஸ்பெயின் உதாரணத்தை பிறரும் பின்பற்றக் கூடாது என்பதில் அவ்வளவு அக்கறை. இருப்பினும் ஸ்பெயின் தொலைக்காட்சி ஒன்று Enric Duran னை, லட்சக்கணக்கான பார்வையாளர் முன்னிலையில் பேட்டி கண்டது. நெதர்லாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியும் அதனை மறு ஒளிப்பரப்பு செய்திருந்தது. என்றிக் டூரன் வழங்கிய நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:
- நீ வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய மொத்த தொகை 5000000 யூரோக்கள். இந்த விபரம் சரியா?
- ஆமாம்
- அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்கப் போகிறாயா?
- இல்லை
(பார்வையாளர்கள் மத்தியில் இருந்து பலத்த கரகோஷம்!)
- உன்னை ஒரு ராபின் ஹூட் ஆக கருதிக் கொள்கிறாயா?
- இல்லை. நான் நானாகவே இருக்கிறேன்.
இப்போது புரிகிறதா? நான் ஏன் இவரை நவீன ராபின் ஹூட் என்று கூறியதன் பொருள்?
15 நவ., 2015
வினோதமான குறிப்புக்கள் சில
* அமெரிக்காவின் லாஸ் வேகாஸிலுள்ள ஒரு
ஓட்டலின் பிரகாசமான விளக்கின் ஒளியை,
400 கிலோமீட்டர் தொலைவிலுள்ள
விமானத்திலிருந்தும் காண
முடியும்!.
* இங்கிலாந்திலுள்ள ஒரு நூலகத்தில் 288 ஆண்டுகள் கழித்து, அபராதம் செலுத்தி, ஒரு புத்தகம் திருப்பியளிக்கப்பட்டது. இது கின்னஸ் சாதனையாகவும் பதிவானது.
* ‘ஸ்டார் வார்ஸ்’ படங்களில் இடம்பெறும் ‘யோடா’ கதாபாத்திரம், விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
* தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் அதிகாரபூர்வமான பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் 167 எழுத்துகள் வரும்!
* நியூயார்க் நகரத்திலுள்ள எம்பயர் ஸ்டேட் பில்டிங் கட்டுமானத்தில் 1 கோடி செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
* 7 டிரக்குகளில் எடுத்துச் செல்லக்கூடிய அளவு எடையுள்ள ‘சாக்லெட் சிப் குக்கீ’ என்ற பிரமாண்ட பிஸ்கெட்டை, அமெரிக்காவிலுள்ள ஒரு பேக்கரி தயாரித்துள்ளது.
* கனடாவிலுள்ள ஒரு பாட்டில் வாட்டர் கம்பெனி 12 ஆயிரம் - 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பனிப்பாறைகளிலிருந்து தண்ணீர் எடுக்கிறது.
* ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக வெள்ளியே உள்ளது.
* ஜப்பானின் ஒசாகாவிலுள்ள ஒரு அலுவலகக் கட்டிடத்தின் நடுவே நெடுஞ்சாலை செல்கிறது!
* அமெரிக்க ராணுவத்தில் 2020ம் ஆண்டுக்குள் மொத்த வீரர்களில் 30% வரை ரோபோக்களைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆப்கானிஸ்தான் போரில் கூட ரோபோக்கள் களமிறக்கப்பட்டன.
* மேப் ஓவியர்கள் தங்கள் வரைபடங்களை பிறர் காபி செய்து பயன்படுத்துவதை அறிவதற்காக, வேண்டுமென்றே சில தவறுகளைச் செய்வது வழக்கம். உதாரணமாக, கற்பனையாக சில சாலைகள்!
* உலக மக்கள் தொகையில் 10% பேர் இடக்கை பழக்கம் உடையவர்கள்.
* நியூசிலாந்திலுள்ள ஜிஸ்போர்ன் ஏர்போர்ட் ஓடு தளத்திலேயே ஒரு ரயில் பாதையும் இயங்குகிறது!
* ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் விலங்குகள் விமானத்தில் பறக்கின்றன.
* 7,240 கிலோமீட்டர் தொலைவுக்கு விரிந்துள்ள சீனப்பெருஞ்சுவர், கிட்டத்தட்ட ஆப்ரிக்கா கண்டம் அளவு நீளமுள்ளது.
* நீல் ஆர்ம்ஸ்ட்ராங் தனது ‘ஸ்பேஸ் பூட்ஸ்’ காலணியை நிலவிலேயே விட்டு வந்து விட்டார்!
* இங்கிலாந்தின் மக்கள்தொகையை விட, அமெரிக்காவில் டி.விக்களின் எண்ணிக்கை அதிகம்.
* இத்தாலியிலுள்ள ஒரு எரிமலை 2 ஆயிரம் ஆண்டுகளாக புகைந்துகொண்டே இருக்கிறது.
* ஒரே ஒரு ‘டீ பேக்’ விலை 12 ஆயிரம் அமெரிக்க டாலராம்... இதைத் தயாரித்த பிரிட்டிஷ் ஜுவல்லரி 280 வைரங்களால் அதை அலங்கரித்ததே இந்த விலைக்குக் காரணம்!

* ஒரு அமெரிக்கர் 30 நிமிடங்களில் 427 ஆம்லெட்கள் தயாரித்து சாதனை படைத்திருக்கிறார். நம்ம ஊர் ரோட்டோர
புரோட்டா கடைகளில் சாதனை வேகம்
எவ்வளவு?
* சராசரி குழந்தை வளரும் அதே வேகத்தில் தொடர்ந்து ஒருவர் வளர்ந்துகொண்டே இருந்தால், 10 வயதில் 1,87,469 கிலோ எடையை எட்டி விடுவார். நல்லவேளை!
* சராசரி குழந்தை வளரும் அதே வேகத்தில் தொடர்ந்து ஒருவர் வளர்ந்துகொண்டே இருந்தால், 10 வயதில் 1,87,469 கிலோ எடையை எட்டி விடுவார். நல்லவேளை!
* வட அமெரிக்காவின் மிக வெப்பமான பகுதி
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது.
அவ்விடத்துக்கு மரணப்
பள்ளத்தாக்கு எனும் பொருள்படும் ‘டெத் வேலி’ என்ற பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
* உலகிலேயே மிகப்பெரிய பாறை ஆஸ்திரேலியாவில்
உள்ளது. ‘உலுறு’ என்ற இப்பிரமாண்ட பாறை 114
மாடிக் கட்டிடத்தை விடவும்
உயரமானது.
* ஈபிள் டவரின் 1665 படிகளில் ஒருவர் ஒருமுறை சைக்கிள் ஓட்டிச்
சென்றிருக்கிறார்.
* கடலில் இதுவரை பொங்கிய அலைகளில் மிகப்பெரியது எம்பயர் ஸ்டேட் பில்டிங்கை விட உயரமானதாக இருந்தது.
* கடலில் இதுவரை பொங்கிய அலைகளில் மிகப்பெரியது எம்பயர் ஸ்டேட் பில்டிங்கை விட உயரமானதாக இருந்தது.
* லெபனான் நாட்டில் ஒரு
விவசாயி 11 கிலோ எடையுள்ள
உருளைக்கிழங்கை அறுவடை செய்திருக்கிறார்.
* உருகி வழிவது போன்ற
தோற்றத்தில் இத்தாலியில் ஒரு கட்டிடம் உள்ளது
* கார்கள் தயாரிக்கப்படுவதற்கு
முன்பே டிராஃபிக் லைட் கண்டறியப்பட்டு விட்டது.
* ஐரோப்பா மற்றும்
ஆசியாவின் சில பகுதிகளில் செம்மழை பொழிந்திருக்கிறது.
* டீன் ஏஜிலேயே எகிப்து
ராணியாகி விட்டார் கிளியோபாட்ரா.
* பாட்டிலில் வளர்க்கப்பட்ட ஒரு கோல்டு ஃபிஷ், இங்கிலாந்தில் 43 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறது!
* பாட்டிலில் வளர்க்கப்பட்ட ஒரு கோல்டு ஃபிஷ், இங்கிலாந்தில் 43 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறது!
* ஒரு மனிதனின் தலையை விடவும் பெரியதும் எடை அதிகமானதுமான வெங்காயம் ஒருமுறை அறுவடையாகியுள்ளது
* ராய் சல்லிவன் என்ற அமெரிக்கரை 7 வெவ்வேறு முறைகள் மின்னல் தாக்கிய பிறகும், அவர் உயிர் பிழைத் திருந்தார்!
* பிரமாண்டமான
ஹம்பர்கர் போன்ற வடிவில் இருக்கும்படிதான் ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் பைக் முதலில்
வடிவமைக்கப்பட்டது..
* துபாயில் பனை மர வடிவில் ஒரு தீவு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுவே செயற்கைத் தீவுகளில் மிகப்பெரியது..
* ஒரு நாய் கழுத்துப்பட்டை 3 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டிருக்கிறது. காரணம் அதிலிருக்கும் வைரம்!
* துபாயில் பனை மர வடிவில் ஒரு தீவு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுவே செயற்கைத் தீவுகளில் மிகப்பெரியது..
* ஒரு நாய் கழுத்துப்பட்டை 3 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டிருக்கிறது. காரணம் அதிலிருக்கும் வைரம்!
* நியூசிலாந்து நாட்டு
மக்கள்தொகையை விட, அங்குள்ள செம்மறி
ஆடுகளின் எண்ணிக்கை அதிகம்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)