வாழ்க்கையில் நாம் உயர்வதும் தாழ்வதும் நாம் மேற்கொள்ளும் அணுகுமுறை ஒன்றிலே அடங்கியிருக்கிறது.

May 22, 2020

Brazil Legend Ronaldinho ரொனால்டினோ

உலக உதைப்பந்தாட வரலாற்றில் ‘ரொனால்டினோ’ என்ற பெயரைக் குறிப்பிடாமல் எழுதிவிட முடியாது. அட்டாக்கர், டிஃபண்டர், மிட்ஃபீல்டர் என உதைப்பந்தாட த்தில் எந்தப் பிரிவை எடுத்தாலும், அதனை மேம்படுத்தியதிலோ அல்லது சிதறடித்ததிலோ ரொனால்டினோவின் பெயர் இடம்பெற்றுவிடும். 

இவரது 13வது வயதில்  உள்ளூர் அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டியில் இவருடைய அணி  23-0 என்ற கணக்கில் வெற்றியை பெற்றது. அந்த 23 கோல்களையும் அணிக்காக அடித்தது இந்த ரொனால்டினோ என்ற அற்புதமான வீரர்தான் இதனால் இவரது பதிமூன்றாவது வயதில் ஊடகத்தின் பார்வைக்கு வந்தவர்.

உதைப்பந்தாடத்தில் தீவிர ரசிகர்களுக்கு மட்டும்மல்லாது எல்லோருக்கும் பரிட்சயமானவர் ரொனால்டினோ
தனது நெழிவு சுழிவான ஆடடத்துக்காகவும் தனது சிகை அலங்காரத்துக்காகவும் மிக முக்கியமாக என்ன நேர்ந்தாலும் புன்னகைக்கின்ற சுபவத்துக்காகவும் அனைவராலும் நேசிக்கப்பட்டவர் நான் அறிய உதைபந்தாட்ட வரலாற்றில் வெறுப்பாளர்கள் இல்லாத உதைபந்தாட்ட வீரர்களுல் மிகமுக்கியமானவர்

உலக கிண்ணம், FIFA Ballon d'or உட்பட உதைப்பந்தாடத்தின் உயரிய விருதுகளில் ஒன்றும்விடாமல் வென்றவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் அதிக சம்பளம் பெறும் வீரர்களில் முதன்மையானவராகவும் மரடோனா, பீலே, பெக்கம், ரொனால்டோ, மெஸ்ஸி, வரிசையில் உதைப்பந்தாடட வரிசையில் icon ஆக இருந்தவர்தான் இந்த ரொனால்டினோ

பிரேசில் அணிக்காக மட்டுமல்ல, ஏ.சி.மிலன், பார்சிலோனா, பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் போன்ற புகழ்பெற்ற கால்பந்து கிளப்புகளுக்காக விளையாடி, ரொனால்டினோ கோடி கோடியாக பணத்தைச் சம்பாதித்தவர்.

2003ல் பார்சிலோனா  ரொனால்டினோவை வாங்கும்போது 23 வயது பார்சிலோனா வரலாற்றில் எட்டப்பட்ட மகத்தான சாதனைகள் பலவும் ரொனால்டினோ பார்சிலோனாவில் விளையாடிய காலத்தில் நிகழ்த்தப்பட்டவைகளே பார்சிலோனாவில் மெஸ்ஸி இணையும்போது ரொனால்டினோவுக்கு வயது 26 அந்த காலங்களில் ரொனால்டினோவின் மாணவன் மெஸ்ஸி அதனை அவரே ஒருமுறை இவ்வாறு கூறினார்
"He is more then a team mate.
He is my teacher and mentor"

மேலும் 2002-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில், பிரேசில் அணி சாம்பியனாக முக்கிய காரணமாக இருந்தவர் . இதில், இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதியில் 35 மீட்டர் துாரத்தில் இருந்து 'பிரீ-கிக்' மூலம், இவர் அடித்த கோல் என்றும் மறக்க முடியாதது.  ரெனால்டினோவின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1,000 கோடிக்கு மேல் இருந்தது. தற்போது, இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு ரொனால்டினோ வெளியிட்டால் 1.50 லட்சம் டாலர்கள் வருவாயாக அவருக்குக் கிடைக்கிறது.   

மேலும் உலகின் முன்னணி உதைப்பந்தாட வீரர்கள் இவரைப்பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். அவற்றில் சில
“He is one of the greatest players I have ever seen.”
_Diego Maradona

“We wondered how it was possible there was so much talent in one body. It was unbelievable.”
_Kevin-Prince Boateng

“Ronaldinho is total class – a very, very great player.”
_Zinedine Zidane

“Ronaldinho was more talented than Messi and Cristiano Ronaldo. When we didn’t know what to do, he would create chances to score.”
_Deco

“The best player in history? Ronaldinho. Because when he was at his best nobody could compare. He always had a smile on his face as well. He had skill, scored fantastic goals and put magic into the game.”
_Nani

“I just can’t get enough of watching him play – he’s a delight for the eye.”
_Ruud van Nistelrooy

“I learned a lot from Ronaldinho and Robinho. Football is a tactical game and you sometimes have to be serious. But they taught me to always do it with a smile and have fun. I spent hours watching their clips on YouTube."
_Eden Hazard

இப்படியான மகத்தான வீரர் பின்நாட்களில்  பிரேசில் விரர்களுக்கே உரித்தான கேளிக்கை, குடி, கும்மாளம் ,என நிறுவாகத்துக்கு கட்டுப்படாமல் இருந்ததால் கிளப்பில் இருந்தும்  பின்நாட்களில் அணியில் இருந்தும் ஒதுக்கப்பட்டார். இதனால்
கடந்த 2018-ம் ஆண்டு அனைத்துவிதமான கால்பந்துப் போட்டிகளில் இருந்தும் மகத்தான வீரர் ரொனால்டினோ ஓய்வு பெற்றார்.

பின்னர்  2018-ம் ஆண்டு வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கிய ரொனால்டினோ மற்றும் அவரின் சகோதரரிடத்திலிருந்து பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதத்தில்தான் பாஸ்போர்ட் அவர்களிடத்தில் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும் 20 மாதங்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டது

பின்னர் பராகுவே நாட்டிற்குள் போலியான ஆவணங்களை பயன்படுத்தி நுழைய முயன்றதாக ரொனால்டினோ மற்றும் அவரது சகோதரர் ராபர்டோவும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்படடார்.

பராகுவே உள்துறை அமைச்சர், ``ரொனால்டினோவின் கால்பந்து ஆடும் திறமையை நான் மதிக்கிறேன் அற்புதமான வீரர். அதேபோல, சட்டமும் மதிக்கப்பட வேண்டும். நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால், சட்டத்தை மீறினால் தண்டனை நிச்சயம் கிடைக்கும்'' என்று தெரிவித்தார் 

கைவிலங்கு, கலங்கிய கண்கள்... போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சிறை சென்றார் ரொனால்டினோ!

No comments:

Post a Comment