கால்பந்தைத் தவிர்த்து வேறு எந்த விளையாட்டிலும் பிரசித்தி பெறாத தேசம் போர்ச்சுக்கல்,
இன்று போர்ச்சுகல் தேசமே ஒருவரை நெஞ்சில் வைத்துச் சுமந்து கொண்டிருக்கிறது.
என்றால் அது...கிறிஸ்டியானோ ரொனால்டோ என்னும் பெயரைத்தான்
நீங்கள் பார்க்கும் ரொனால்டோ இந்த உயரத்துக்கு அவ்வளவு எளிதில் வந்துவிடவில்லை. போர்ச்சுகல் வீதியில் பல கனவுகளோடு சுற்றித்திரிந்த சாதாரண இளைஞர்தான் ரொனால்டோ. தனது 15 வயதிலேயே சீரற்ற இதயத்துடிப்பால் பாதிக்கப்பட்டவர். எப்படிப்பட்ட விளையாட்டு வீரனையும் காலி செய்துவிடும் இப்பிரச்சனையை ரொனால்டோ வெல்லக் காரணம், அந்த இதயம் முழுவதையும் அவர் கால்பந்தால் நிரப்பியிருந்தார். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தனது கடும் உழைப்பின் மூலம் இந்த உயரத்தை அடைந்துள்ளார். அந்த நாள்களை ரொனால்டோ நேர்காணல் ஒன்றில் மெல்ல அசைபோட்டார்.
எனக்கு அப்போது 12 வயதாக இருக்கும். என் குடும்பம் ஏழ்மையான நிலையிலிருந்தது இருந்தது. நான் மிகச் சிறிய வீட்டில் வசித்து வந்தேன். அது கொஞ்சம் கடினமான காலம்தான். இரவு 10 மணிக்கு மேல் இருக்கும். நாங்கள் அனைவரும் பசியோடு இருந்தோம். அந்த குடியிருப்புக்குப் பக்கத்தில் சிறிய மெக்டொனால்ட் கடை இருந்தது. இரவில் அந்தக் கடையில் பின்பக்க கதவைத் தட்டி.. எதாவது பர்கர் மிச்சம் இருக்கா என்று கேட்டேன். 3 பெண்கள் அங்கு இருந்தார்கள். உதவினார்கள் அவர்கள் அற்புதமானவர்கள். அதற்குப் பின்பு அந்த பெண்களை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் எங்கிருந்தாலும் சரி, நான் வசிக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று விருந்து வைக்க வேண்டும்.
நான் போர்ச்சுகலில் பல இடங்களில் அந்தப்பெண்களைத் தேடினேன். அந்த மெக்டொனால்ட் கடையிலும் விசாரித்தேன் ஆனால், எந்த விவரமும் கிடைக்கவில்லை. இந்த நேர்காணல் அந்தப்பெண்களைக் கண்டுபிடிக்க உதவினால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
இந்த தலைமுறைக்கு எல்லாம் எளிதாகக் கிடைத்து விடுகிறது. அவர்களுக்கு கம்யூட்டர் கிடைத்து இருக்கிறது இந்த தலைமுறை பெரிதாக எதையும் தியாகம் செய்யவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. நான் வசித்த இடத்துக்கு எனது மகனை அழைத்துச் சென்றேன். நான் வசித்த அறையைக் காண்பித்தேன். நான் இங்கு தான் இருந்தேன் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. `நீங்கள் இங்கேயா இருந்தீங்கன்'னு ஆச்சரியத்தோடு கேட்டான் என உணர்ச்சிகரமாகப் பேசியுள்ளார்.
இந்தநிலையில் சிறுவயதில் ரொனால்டோவுக்கு உதவிய பெண்களில் ஒருவரை போர்ச்சுக்கல் வானொலி நிலையம் ஒன்று கண்டுபிடித்திருக்கிறது. அவரது பெயர் எட்னா என்பது தெரியவந்திருக்கிறது.
ரொனால்டோ, உசேன் போல்டும், மைக்கேல் ஜோர்டானும் கலந்த கலவை. எந்தவொரு தடுப்பாட்டக்காரரையும் மெர்சலாக்கிவிட்டு புயலாகப் பாயும் ரொனால்டோ, பந்தை தலையால் முட்ட 44 செ.மீ வரை காற்றில் பறப்பாராம். ஒரு சராசரி கூடைப்பந்தாட்ட வீரரால்கூட அவ்வளவு தூரம் குதிக்க முடியாது என்கின்றனர், மாடர்ன் டே ஐன்ஸ்டீன்கள்.
தனது ஸ்டைலான ஆட்டத்தால் மட்டுமின்றி, ஹேர் ஸ்டைல், சிக்ஸ் பேக் என்று ஒவ்வொரு தனித்திறமைக்கும் தனித்தனியாக ரசிகர்களைக் கொண்டிருக்கும் ரொனால்டோ, ஒவ்வொரு தடுப்பாட்டக்காரரும் வெறுக்கும் ஒரு கோல் மெஷின்.
ரொனால்டோவின் கால்களில் பந்து சிக்கினால், அதற்கே தலைசுற்றல் ஏற்பட்டுவிடும். அந்த அளவிற்கு சுழன்று, சுழற்றி ஆட்டம் காட்டுவார் ரொனால்டோ. பெனால்டி, ஃப்ரீ கிக், ஹெடிங், டிரிபிளிங் என கால்பந்தின் அனைத்து டிபார்ட்மென்டிலும் டிஸ்ட்ங்ஷன் அடித்தவர் CR7. இவரது ஃப்ரீ கிக்குகள் எல்லாம் 130 கி.மீ வேகத்தில் பாய்ந்து கோல் கீப்பருக்கு பீதி கிளப்பிவிடும்! கால்பந்து ஆட்டத்தின் 90 நிமிடங்களில் ஒவ்வொரு நிமிடத்திலும் கோல் அடித்த ஒரேயொரு வீரர் ரொனால்டோ தான்.
ஆனால் இடைப்பட்ட அந்தக்காலம் அவருக்கு மகிழ்ச்சி மட்டும் நிரம்பியதாக இல்லை. ஏகப்பட்ட சவால்கள் எத்தனையோ தூற்றல்கள், எண்ணற்ற பிரச்சனைகள். ஆனால் அனைத்தையும் தாண்டி தன்னை பலப்படுத்திக்கொண்டே இருந்தார் ரொனால்டோ. ஒவ்வொருவரின் வெற்றிக்கும் தூண்டுகோலாக பலரின் ஊக்கம் இருக்கும். ஆனால் ரொனால்டோவின் வெற்றிகள் தூற்றல்களால் தூண்டப்பட்டவை.
அதன்பின்னர்தான் ஒரு கோல் மெஷினாக மாறினார். தன்னை இழிவுபடுத்தும் ரசிகர்களுக்குத் தன் கால்களால் பதில் சொல்ல நினைத்தார்.
பாலன் டி ஓர் விருதுகள் பல, சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள் பல, ஐரோப்பிய கோல்டன் ஷூ விருதுகள் பல என எண்ணற்ற விருதுகள் வாங்கிய மகத்தான வீரர் இந்த CR7
எந்தத் தருணத்திலும் தன்னை நம்புபவர்களுக்காக எதையும் செய்ய வேண்டுமென நினைப்பவர்.
ஒருமுறை 2014 ல் 10வது முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்ல வேண்டுமென்ற ரியல் மாட்ரிட் ரசிகர்களின் 12 ஆண்டு காலக் கனவை நனவாக்க யாரும் செய்திடாத சாதனையான ஒரே தொடரில் 17 கோல்கள் அடித்து தன் அணியின் வெற்றிக்கு ஆணி வேராய் விளங்கினார் ரொனால்டோ.
அத்தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டாமென டாக்டர்கள் அறிவுறுத்தியும் “சில வெற்றிகளுக்காக சில தியாகங்கள் செய்துகொள்ள வேண்டும். சில வலிகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்” என்று அணிக்காக ரிஸ்க் எடுத்தவர்.
ஆனால் ரொனால்டோவின் இதயத்திற்குள் இருக்கும் ஈரம் இவ்வுலகம் முழுமையாக அறியாது. தன் தந்தை குடியால் இறந்தவர் என்பதால் இதுநாள் வரை மதுவைத் தொடாதவர் ரொனால்டோ. ஒவ்வொரு விளையாட்டு வீரனும் உடலெல்லாம் பச்சை குத்திக்கொள்ள, ‘பச்சை குத்தினால் சில மாதங்கள் ரத்த தானம் செய்ய முடியாது’ என்பதற்காகவே பச்சை குத்திக்கொள்ளாத ஒரு மகத்தான மனிதன் ரொனால்டோ.
தன் சொந்த ஊரில் புற்றுநோய் மருத்துவமனை, குழந்தைகளின் கல்விக்கு உதவுவது என்று சத்தமில்லாமல் இவர் செய்துவருவது எல்லாம் விளையாட்டையும் தாண்டி ஒரு மனிதநேயம் மிக்கவராய் அவரை நிலைநிறுத்தியுள்ளது.
மேலும் தனக்கு கிடைத்த தங்கப் பாதணியை ஏலம் விட்டு பலஸ்தீனக் குழந்தைகளுக்காக அன்பளிப்புச் செய்தவர்தான் இந்த CR7
காலங்கள் காலத்தால் கடந்து போகலாம். நினைவுகள் நில்லாமல் சிதைந்து போகலாம்.
அன்பு கொண்ட உன்னைப்போல் ஒரு வீரனை நெஞ்சம் ஒரு போதும் மறைந்து போவது இல்லை
No comments:
Post a Comment