இங்கு உழைக்காமல் வாழ்பவர்களை விட வாழாமல் உழைப்பவர்களே அதிகம்.
சிந்தனை துளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிந்தனை துளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 ஆக., 2022

குறுகிய இந்த உலக வாழ்க்கையில்...

குறுகிய இந்த உலக வாழ்க்கையில்... 

*குழப்பமும், கவலையுமான நேரத்தில் ஒரு குட்டி தூக்கம் போடுங்கள்...

*மனசு சரியில்லை என்றால் குழந்தைகளிடம் பேசுங்க...

*திருமணம் ஆகிவிட்டால் உங்கள் குடும்பத்தை நேசியுங்கள், திருமணம் ஆகவில்லை என்றால் பெண்களை நேசியுங்கள், அவர்களை மதியுங்கள்.,.

*ஆசைப்பட்டது கிடைக்க சில தியாகங்கள் செய்ய நினைத்திடுங்க...

*பொறுமை, நேர்மை, உழைப்பு, இது மூன்றும் வெற்றிக்காண வழி அதை நிலை நிறுத்துங்க...

*கிடைத்த வேலையை ஆசையுடன் செய்து பழக நினைத்திடுங்க...

*உங்களை மதிக்காத இடத்தில் உங்களின் நிழலை கூட நிற்க அனுமதிக்காதீக...

*உங்களை மதிக்கும் இடத்தில் உண்மையுடனும், நேர்மையுடன் நடந்திடுங்க...

*இவ்வுலகில் பணம்தான் எல்லாம் ஆகிவிட்டது, திருமணம் ஆகிவிட்டாலும் திருமணம் ஆகாவிட்டாலும், சேமிக்கும் பழக்கத்தை கைவிடாதீங்க...

*சேமிக்கும் பழக்கத்தை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்க...

*உதவி, மற்றும் தர்மம் செய்வதை மறக்காதீங்க...

*உதவியின் பலனையும், தர்மத்தின் சிறப்பையும் உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து வளர்த்திடுங்க...

*வறுமானத்திற்கு மீறிய செலவை விரும்பாதீங்க...

*இரண்டு வழியில் வருமானம் கிடைக்கும் வகையில் தொழில் அல்லது வேலையை செய்திடுங்க...

*உங்களுடைய ஆசையையும் உங்களின் மனைவி மக்களின் ஆசைகளையும், அவர்களின் தேவைகளையும் அவ்வப்போது நிறைவேற்றிடுங்க அதில் கஞ்சத்தனம் காட்டாதீங்க...

*மகிழ்ச்சியில் யோசிக்காமல் எந்த வாக்குகளையும் கொடுத்துடாதீங்க,

*வாக்கு கொடுத்தால், அதை கண்டிப்பாக நிறைவேற்றிவிடுங்க, அப்போதுதான் நீங்கள் அவர்களிடத்தில் மதிக்கப்படுவீங்க...

*கோபமும், பேராசையும், ஒரு கொடிய நோய், முடிந்தவரை அதை மனக்கட்டுக்குள் கொண்டு வர முயற்சியுங்கள்...

*பெண்கள் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள்...

*பெண்களிடமும், குழந்தைகளிடமும், கவனமாக பேசுங்கள்...

*உலகத்தை நேசியுங்கள், மனிதர்களை மதியுங்கள்...


"இருக்கும் இந்த ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும், வாழ பழகிக்கொள்ளுங்கள். அல்லது வாழ முயற்சி செய்யுங்கள்...

22 மே, 2020

எதற்காக இந்த ஓட்டம்

எல்லோரும் அதிவேகமாக..
ஓடுகிறார்கள்.

நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில்

ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்களை உதறித் தள்ளி விட்டு
வேகமாக ஓடினார்கள்..

பந்தயம் கடினமாக இருந்த போது..

வேகத்தை மேலும் கூட்ட தாய்மொழி தடையாக இருக்கவே அதையும் ஒதுக்கிவைத்து
ஓடினார்கள்..

பின்னர் தர்மசிந்தனைகள்,

கடமை, கண்ணியம் கூட சுமைகளாகிப் போயின..
எனவே அவை

அனைத்தையும் உதறித்
தள்ளிவிட்டு ஓட்டத்தைத்
தொடர்ந்தனர்..

உறவுகள் சுமையாக தொந்தரவாக அவர்களுக்குத் தோன்றின..
எனவே அவற்றையும் விட்டுத் தள்ளினார்கள்  அல்லது வில(க்)கி ஓடினார்கள்..

இந்த நவீன மனிதர்களுக்குப் பொருளாதார வசதி புகழ்  வெற்றிகரமான வாழ்க்கை என்ற அடங்காத வெறி மட்டுமே எஞ்சி
உள்ளதால்

பந்தயத்தில் வேக வேகமாக ஒடிக் கொண்டிருக்கிறார்கள்..

இனி அவர்கள் வீசி எறிய
எதுவுமில்லை!..

குடும்பங்கள் சிதறிக் கிடக்கின்றன...

மடிக்கணினித் திரை வழியாக பேரப்பிள்ளைகளைக் கொஞ்சும் பெரியவர்களை பெற்றெடுத்திருக்கிறார்கள், பந்தயத்தில் ஓடும் பிள்ளைகள்!...

பிறந்த குழந்தையின் பசிக்கு பாலூட்டவும் குளிப்பாட்டவும்  நேரம் இல்லாத
இளம் அம்மாக்களும் உருவாகிவிட்டார்கள்..

மனைவி வலியால் துடித்தாலும் அரவணைத்து மருந்து கொடுத்து அக்கறையும் பாசமும் காட்ட நேரம் இல்லாத.
கணவர்களும் மலிந்து போனார்கள்...

என்றாலும் எல்லோரும் ஒடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

பல பெரியவர்களுக்குப் பிள்ளைகளைப் பார்க்காத ஏக்கத்தில் மாரடைப்பு வருகிறது..

சிலருக்கு அவர்கள் படும் பாட்டை நினைத்தவாரே உயிர் பிரிகின்றது..

மருத்துவச் செலவுக்கு அனுப்பும் பணம் கூட  அவரவர் கணக்குகளில் வங்கிகளில் நிரம்பி வழிகின்றன..

மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லவும் முடிவதில்லை...

எல்லோருடைய நேரத்தையும் நிறுவனங்களும் கேளிக்கைகளும் செல்போன்களும் விழுங்கிவிட்டன..

தொடு திரையில் வாழ்த்துக்கள்

நகரங்கள் விரிவடைய
மனித மாண்பு வெகுவாகச் சுருங்கி விட்டது.

மூன்று வயது நிரம்பாத குழந்தைகள் 
மழலைக் காப்பகங்களுக்கும்
ப்ளே ஸ்கூல்களுக்கும் அனுப்பி வைக்கப் படுகின்றனர்..

இவர்கள் ஓட்டத்திற்கு இந்த குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி கூட தடையாக தென்படுகின்றது !..

தொடக்கத்தில் கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடும்பங்களாகின..

இப்போது தனிக்குடும்பங்களின் உறுப்பினர்கள் தனித்தனியாகப் பிரிந்து இயங்குகிறார்கள்..

இனி சொல்வதற்கு ஒன்றுமில்லையே!

மனித இனம் நிம்மதியற்ற பாதையைத் தேர்ந்தெடுத்து.ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கிறது..

இனி அதுவே.நினைத்தாலும்
நிறுத்த முடியுமா என்ன?...

அன்றும் இன்றும்

"அன்று
வீடு நிறைய குழந்தைகள்
இன்று
வீட்டுக்கொரு குழந்தை"

"அன்று
பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர்
இன்று
சிறியவர் சொல்ல பெரியவர் முழிக்கிறார்கள்"

"அன்று
குறைந்த வருமானம்
நிறைந்த நிம்மதி
இன்று
நிறைந்த வருமானம்
குறைந்த நிம்மதி"

"அன்று
படித்தால் வேலை
இன்று
படிப்பதே வேலை"

"அன்று
வீடு நிறைய உறவுகள்
இன்று
நிறைய வீடுகள் உறவுகள் இல்லை"

"அன்று
உணவே மருந்து
இன்று
மருந்துகளே உணவு"

"அன்று
முதுமையிலும் துள்ளல்
இன்று
இளமையிலேயே அல்லல்"

"அன்று
உதவிக்கு தொழில்நுட்பம்
இன்று
தொழில்நுட்பம்தான் எல்லாம்"

அன்று தொலைக்காட்சி பார்த்தல் கவலை போனது
இன்று
தொலைக்காட்சி பார்த்தால் நிம்மதி போகிறது.

"அன்று
யோக வாழ்க்கை
இன்று
எந்திர வாழ்க்கை"

"அன்று
தியாகிகள் நாட்டை காப்பாற்றினர்
இன்று
அரசியல்வாதிகள் நாட்டை விற்கின்றனர்"

"அன்று
படங்களில் ஒரு குத்து பாட்டு
இன்று
குத்து பாட்டில் தான் படமே"

"அன்று
ஓடினோம் வயிற்றை நிறைக்க
இன்று
ஓடுகின்றோம் வயிற்றை குறைக்க"

"அன்று
பெரியோர்கள் பாதையில்
இன்று
இளைஞர்கள் போதையில்"

"அன்று
ஒரே புரட்சி
இன்று
ஒரே வறட்சி"

"அன்று
சென்றார்கள் வளர்ச்சியில்
இன்று
செல்கிறது சினிமா கவர்ச்சியில்"

"அன்று
சட்டசபை
இன்று
சட்டை கிழியும் சபை"

"அன்று
மக்கள் நலன் ஆட்சி
இன்று
சிக்கல் தரும் ஆட்சி"

"அன்று
ஊரே கூட கோலாகல விழா
இன்று
ஊருக்கே போக முடியாத மூடுவிழா"

"அன்று
கைவீசி நடந்தோம்
இன்று
கைப்பேசியுடன் நடக்கிறோம்"

"அன்று
ஜனநாயகம்
இன்று
பணநாயகம்"

"அன்று
விளைச்சல் நிலம்
இன்று
விலை போன நிலம்"

"அன்று
தொட முடியாத உச்சத்தில் காதல்
இன்று
தொட்டு முடியும் எச்சம் காதல்"

"அன்று
 விடுமுறையில் உறவுகளிடம் தஞ்சம்
இன்று
 விடுமுறையில் உறவுகளிடம் அச்சம்"

"அன்று
உயிரை கொடுத்து உறவு வாழ்ந்தது
இன்று
உறவே உயிரை பறிக்கிறது"

"அன்று
நிறைந்தது மகிழ்ச்சி
இன்று
நடக்குது வெற்று நிகழ்ச்சி"

"அன்று
வாழ்ந்தது  வாழ்க்கை
இன்று
ஏதோ வாழும் வாழ்க்கை"

பேசுவதற்கு முன் யோசி

ஒரு மனிதர் சாலை ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது தெரியாமல் இன்னொரு நபர் மீது இடித்துவிட்டார்.

ஐயோ… தெரியாமல் இடித்து விட்டேன் மன்னித்து விடுங்கள் என்று இவர் சொல்ல, பரவாயில்லை என்று அவர் சொல்ல இருவருமே கண்ணியத்துடனும் புன்னகையுடனும் விடைபெற்றார்கள். அவர்களிடையே மனஸ்தாபத்துக்கான காரணமில்லாமல் போயிற்று.

அன்று அவர் வீட்டுக்கு வந்தார்.
இரவு உணவு முடித்து திரும்புகையில் அவருடைய மகன் அவருக்குப் பின்னால் நின்றிருந்தான், கைகளைப் பின்னால் கட்டியபடி. தந்தை திரும்புகையில் அவனைத் தெரியாமல் இடித்து விட்டார்.

‘வழியில் நிற்காதே.. ஓரமாய்ப் போ..’
அவருடைய வார்த்தையில் அனலடித்தது.
சிறுவன் முகம் வாடிப்போய் விலகினான். அவனுடைய கண்களில் சோகத்தின் நதி முளைத்தது. அது இமை ஓரங்களை இடித்து தரையிறங்கத் துவங்கியது.
இரவு தூங்குகையில் அவர் மனதுக்குள் ஒரு சிந்தனை ஓடியது.

வழியில் யாரோ ஒருவரிடம் நாகரீகமாகவும், அன்பாகவும் நடந்து கொள்ளத் தெரிந்த எனக்கு சொந்த மகனிடம் அப்படி நடந்து கொள்ளத் தெரியவில்லையே என்று மனதுக்குள் எண்ணினார்.
நேராக எழுந்து மகனின் படுக்கையறைக்குச் சென்றான்.
உள்ளே மகன் தூங்காமல் விசும்பிக் கொண்டிருந்தான்.
அவனுடைய கண்கள் சிவந்திருந்தன. அவனருகில் மண்டியிட்ட தந்தை ‘என்னை மன்னித்துவிடு நான் உன்னிடம் அப்படிப் பேசியிருக்கக் கூடாது..’ என்றார்.

சிறுவன் திரும்பினான்.
சிறுவனின் கண்களிலிருந்த கவலை சட்டென்று மறைந்தது. எழுந்து உட்கார்ந்தான்.
வேகமாக கட்டிலிலிருந்து கீழே குதித்து கட்டிலினடியில் வைத்திருந்த பூங்கொத்தை தந்தையின் கையில் வைத்தான்.
‘இதென்ன ?’ தந்தை வியந்தார்.
இன்றைக்கு வெளியே நடந்து கொண்டிருந்தபோது இந்தப் பூக்களைப் பார்த்தேன்.
பல நிறங்களில் இருந்த பூக்களைப் பொறுக்கி உங்களுக்காக ஒரு மலர்க்கொத்து செய்தேன். அதிலும் குறிப்பாக உங்களுக்கு நீல நிறம் பிடிக்கும் என்பதற்காக அதை நிறைய சேகரித்தேன்.
அதை உங்களிடம் ரகசியமாகச் சொல்வதற்காகத் தான் உங்கள் பின்னால் வந்து நின்றேன்…
சிறுவன் சொல்ல தந்தை மனம் உடைந்தார்.
சிறுவனையும் மலர்களையும் ஒருசேர அணைத்த அவருடைய கண்களில் கண்ணீர் வழிந்தது.
ஒரு மழலையின் அன்பைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் தான் இருந்ததற்காக அவர் வருந்தினார்.

குடும்பம் என்பது இறைவன் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்.
அதை சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் நம்முடைய செயல்களில் தான் இருக்கிறது.
பணத்துக்கான ஓட்டங்களில் நாம் இழந்து கொண்டிருப்பது ஆனந்தத்தின் நிமிடங்களை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு வேளை நாம் நாளை இறந்து போக நேரிட்டால் அலுவலகம் இன்னொரு திறமை சாலியை சில நாட்களில் கண்டு பிடிக்கும். குடும்பம் அப்படியல்ல.
ஏற்படும் இழப்பு ஆழமாய்த் தைத்த முள் போல நினைவுகளால் நிமிண்டும் போதெல்லாம் வலித்துக் கொண்டே இருக்கும்.
வாழ்க்கையில் எல்லாம் இருந்தாலும் அன்பினால் நிரப்பப்படாவிட்டால் அது வெறுமையாகவே இருக்கும்.
 பணமே மகிழ்ச்சியைத் தரும் என்பது தலைமுறைக்குத் தரப்பட்டிருக்கும் தவறான பாடம். மகிழ்ச்சியை சதுர அடிகளில் வாங்க முடியாது.

"குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்."
அன்பை அதிகமாய் சம்பாதியுங்கள்.

Stay_Home_Stay_Safe

 ஊரையே lockdown பண்ணியது இந்த corona
' வீட்டுல வேலை இருந்தாலும் ஒண்ணுமே ஓடவில்லை. இந்த பின்னேரம் இதமாக பக்கோடா செய்து சாப்பிட்டால் அதுவும் degree coffee யுடன்...
நினைக்கும் போதே மனம் பரவச நிலையில்.

  மனமெங்கும் அல்பத்தனமாய் " பக்கோடா with coffee "  stimulate பண்ணிக் கொண்டிருக்க....

உடனடியாக
மனைவியைக் கொஞ்சிக் கூப்பிட்டுக் கொண்டே என் அபிலாஷையை வெளியிட்டேன்...

வந்ததே கோபம் அவளுக்கு......
" என்ன நினைச்சுட்டுருக்கீங்க...
கார்த்தாலேர்ந்து மனுஷி படற பாடு என்ன தெரியுமா? சொகுசா வந்து பக்கோடாவாம் coffeeயாம்...அதல்லாம்
ஒரு மண்ணும் முடியாது... சொல்லிட்டேன்..."

எதிர்பார்த்து ஏமாந்து போனதால் வெறுப்பானேன்....

சட்டென்று தாய் ஞாபகம் வந்தது.
ஏமாந்து போனபின் தாய் ஞாபகம் வந்தது ஒரு குற்ற உணர்ச்சியை
ஏற்படுத்தியது...

தாய், தந்தை பக்கத்துத் தெருவில் தான்.

தாயே பார்த்து விட்டு வரலாம் என்று சென்றால் அங்கே தந்தையின் கெஞ்சல் குரல் கேட்டது.

தந்தைக்கும் "வடை " ரொம்ப பிடிக்கும். அதைத்தான்
தாயிடம் செய்து தரச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தார்.

நச்சரிப்பு என்பது தாயின்  பாஷை. உண்மையில் அவர் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

எனக்கு என் மனைவியிடம் என்ன திட்டு விழுந்ததோ
" Same blood " தந்தையின் காதுகளில்...

கூடுதலாக வயதையும் சுட்டிக் காட்டி வாயை அடக்கச் சொல்லி semma dose....

நான் உள்ளே நுழைந்ததும் இருவரின் முகங்களும் மலர்ச்சியில்....
" என்னப்பா நீ மட்டும் வந்துருக்கே.....பேரனை பார்த்து நாளாச்சுடா... ஏன் கூட்டிண்டுவரல்ல ?

" இல்லம்மா, அவன் தூக்கம் " என்று சமாளித்தேன்.

அது பொய்யென்று தாய்க்கு தெரிந்தாலும் சொன்னது நானென்பதால் கண்டுகொள்ளவில்லை இந்த நேரம் நான் என்ன விரும்பி சாப்பிடுவேன் என்பதெல்லாம் தாய்க்கு தெரியாத விடையமா!!

" சரி, சரி உட்காந்து பேசிட்டுரு..
இப்ப கொஞ்ச நேரத்தில உனக்குப் பிடித்த பக்கோடா செஞ்சு தரேன்..." என்று அன்பாக சொன்ன தாய்

தந்தை முகத்தில் சின்னதாய் ஏமாற்றம் தெரிந்தாலும் எனக்காக காட்டிக் கொள்ளாமல் வெறுமையாய் சிரித்தார். பாவமாயிருந்தது..‌..

" இல்லம்மா, எனக்கு பக்கோடா வேண்டாம்,
உன் கைப் பக்குவத்தில்
இன்னிக்கு " வடை " சாப்டணும் போல இருக்கு..."

" அவ்ளோதானே, இதோ பத்தே நிமிஷம்"
தந்தையின் முகத்தில் என்னைப்பார்த்து சிரிப்பதில் ஒரு சின்ன நன்றி உணர்சசி எனக்குத் தென் பட்டது.

என்னுடன் சேர்ந்து வடையே ஆசை யாக
சாப்பிட்ட தந்தை, நான் அடைந்த பக்கோடா பரவசத்தை " வடை பரவசமாக அனுபவித்தார்...

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து வீட்டுக்குத் திரும்பினேன்.....

!!!!!!
மனைவி என் மகனுக்கு மிகவும் பிடித்த வடையை ஆவலாய் செய்து கொண்டிருந்தாள்.....

எனக்காக செய்ய முடியாத பக்கோடா மகனுக்கு வாடை யாக
செய்யப் பட்டுக்கொண்டிருந்தது.

நீதி.  ;
நம் நாட்டுப் பெண்கள்
மிகச் சிறந்த " தாய்மார்கள் "

மனைவிகளல்ல !

மிகச் சிறந்த சகோதரிகள்.......

மனைவிகளல்ல.......

விதிவிலக்குகள் இருக்கலாம்..

இதைப் படியுங்கள்.... உங்கள் வாழ்க்கையே மாறலாம்...

ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது.

ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார்.

இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக் செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.
அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னா பின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.

இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார்.

அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார்.

அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது. ஆங்கிலத்தில் 
‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார். 

பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம்.

அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. 

ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்.
அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.

இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள் என்பது தான்.

அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்கள் வீசினாலோ, அல்லது கொடுமைகளை செய்தாலும்  பதிலுக்கு நீங்களும் தாக்குதல் நடத்த வேண்டாம், வார்த்தை யுத்தத்திலும் இறங்காது 

............ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.
நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம்.

அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம். இது ஒன்றே நாம் செய்யவேண்டியது.

வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது.
90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது.

வாழ்க வளமுடன்!        
வளர்க நல்ல எண்ணங்களுடன்!

சிந்தித்து செயலாற்றுங்கள்.

சில நேரம் மனம் எதை மறக்க நினைக்கிறதோ......_
_விதி அதையே அதிகம் நினைக்க வைக்கிறது.......!!_

🌷 _பேசாமல் இருந்து விட்டால் அழிந்து போவது மொழிகள் மட்டுமல்ல சில உறவுகளும் கூடத்தான்.._

🌷 _உனக்கு என்ன கொடுக்கவேண்டும் உன்னிடம் எதை பறிக்கவேண்டும் என்பதை_
_இறைவனே முடிவு செய்கிறார்...._

🌷 _வலிகளுக்கும் வலிகள் இருந்திருந்தால்.._
_கண்ணீர்வரும் வரை கத்தி அழுதிருக்கும்.._
_தாங்க முடியாமல்.._

🌷 _செய்த உதவியை சொல்லிக் காட்டாதே,_ 
_எவரும் செய்ய தயங்கும் உதவியை செய்து காட்டு....!!_

🌷 _சுமந்து செல்லும் அந்த நான்கு பேர் யாரென்று தெரிந்து விட்டால் கைமாறு ஏதாவது செய்து விடலாம்.!!_

🌷 _வாகனம் ஓட்டும் போது, மொபைலில் பேசுவதற்கு இணையான அபாயம் மிக்கது, வாகனம் ஓட்டும் கணவரிடம், மனைவி பேசிக் கொண்டே இருப்பது._

🌷 _படுத்துட்டு இருக்கும் போதே_
_மரணம் வந்தால் பரவாயில்லை,_
_மரணம் வரும் வரை படுத்துட்டு இருக்கிறது_
_கொடுமையிலும் கொடுமை..._

🌷 _லாபத்தினால் மட்டும் ஒருவன் பணக்காரனாவதில்லை, சேமிப்பதால் மட்டுமே._
_ஆக முடியும்....._

🌷 _உழைக்கும்போது எதிர்காலத்தை நோக்கி சென்ற நினைவுகள்._
_ஓய்ந்தபிறகு கடந்தகாலத்தை நோக்கி செல்லும்....._

🌷 _விதையை முழுங்கினால் வயிற்றில் மரம் வளருமென குழந்தைகளிடம் சொன்ன நாம ,_
_அதே விதையை நிலத்தில் புதைக்க சொல்லிக்கொடுக்க மறந்து விட்டோம்!!_

🌷 _நல்ல பெற்றோர், நல்ல துணை , நல்ல நட்பு என்று வாழ்ந்து கொண்டு இருந்தாலும், இவை எல்லாவற்றையும் விட பணம் தான் வாழ்க்கை என்று ஒரு தடவையாவது நினைக்க வைத்து விடுகிறது இந்த வாழ்க்கை._

🌷 _பறவை கூண்டு வாங்கி அடைக்காதீங்க,அதுங்க நல்லாவே கூடு கட்டும். அந்த காசுல ஒரு மரம் நடுங்க அதுகளுக்கும் சேர்த்து பயன்படும்..!!_

🌷 _நம் கனவுகளைப் பற்றி சிந்திப்பதை நிறுத்தி, நம் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க துவங்கும் பொழுது   முற்றுப் பெறுகிறது நம் இளமை !!!_

🌷 _இதுவும் கடந்து போகும் என்பதை விட.._
_இதுவும் பழகி விடும் என்பதே பொருத்தமாகி விடுகின்றது  வாழ்க்கைக்கு..._

🌷 _#பொறந்தா... எத்த வருஷம் பொறந்தான்னு கேப்பானுங்க..!_
_#செத்தா... எத்தனை மணிக்கு  எடுக்க போறாங்கனு கேப்பானுங்க.!_

_"எல்லாமே #டைமிங் தான்"_

🌷 _சொந்த "கால்ல" நிக்கும் போதுதான்.._
_புது "செருப்பு" வாங்க கூட யோசிப்போம்..!!_

🌷 _ஒரே வயிறு னு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்க்காதீங்க ..._
_அப்புறம் தொப்பைனு பேர் வாங்கிட்டு வந்து நிக்கும் ..._
.
🌷 _எந்த உறவிலும் பிரிவின் வலி தீருவதற்குள் பேசி விடுங்கள்!!_
_வலி பழகிடுச்சுன்னா உறவு முறிஞ்சுடும்!!!_

🌷 _சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள்,_
_அன்புக்காக ஏங்குபவர்கள்._

🌷 _இரக்கமும்_ _உறக்கமும் ஒன்று தான்._
_இரண்டையுமே அளவோடு தான் பயன்படுத்த வேண்டும்._

_அதிகம் உறங்குபவன் சோம்பேறி ஆகிறான்._
_அதிகம் இரக்கம் காட்டுகிறவன் ஏமாளி ஆகிறான்._

🌷 _ஆங்கிலத்தில் பேசவில்லை  என்றால்  படிக்கவில்லை  என்று  எண்ணும்  விசித்திரமான சமூகம்_ .....

*சிந்தித்து செயலாற்றுங்கள்*

20 மே, 2020

படித்ததில் பிடித்தது

நடிகர் விவேக் தனது மகனின் நினைவாக பெற்றோர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்... அருமைப் பெற்றோரே... உங்களுக்கு சில வார்த்தைகள்..!
குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட. குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள்.

உங்கள் நிறைவேறா கனவுகளை உங்கள் குழந்தைகளுக்குள் வலுக்காட்டாயமாக விதைக்க வேண்டாம். கார் மெக்கானிஸத்தில் காதல்கொண்ட மகனை டாக்டர் ஆக்கப் போராடாதீர்கள். ஆட்டோமொபைல் என்ஜினீயரிங்க்குப் பச்சைக்கொடி காட்டி, தொடர்ந்து பக்கபலமாக இருங்கள். அவன் வாழ்வு ஒரு மகிழ்ச்சிப் பூங்கா ஆவதைப் பார்ப்பீர்கள். தோனியைப் பார்த்துவிட்டு, பையனை கிரிக்கெட் கோச்சிங் அனுப்பாதீர்கள். அவனுக்கு ஓவியத்தில் விருப்பம் இருக்கலாம். டென்னிஸில் காதல்கொண்ட மகளை பரதநாட்டியத்துக்கு அனுப்பி டார்ச்சர் செய்ய வேண்டாம்.
அவர்கள் ஆன்மிகமும் படிக்கட்டும்; அனிருத்தும் கேட்கட்டும். வீட்டுக்குள் அடைத்து, ஏ.சி. ரூமில் டிவி பார்த்துக்கொண்டே சிப்ஸ் கொறிக்க வைக்க வேண்டாம். தெருவில் இறங்கி, புழுதியில் விளையாடி, வேர்த்து விறுவிறுத்து வீடுவந்து சேரட்டும். அவர்களுக்கு கம்யூனிட்டி தெரிகிறதோ இல்லையோ இம்யூனிட்டி அதிகரிக்கும். அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கட்டும், கண்கள் விசாலமானால், இதயம் விசாலம் ஆகும்!
பெண் குழந்தைகளை வீரத்தோடு வளர்த்தெடுங்கள். எதிர்காலம் புதிர்காலமாகும் சூழலில், அவர்கள் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கலாம். ‘ரேப்பிஸ்ட்’களுக்கு உதவித்தொகையும், தையல் மெஷினும் வழங்கும் ஜனநாயகம் இது. பெண்கள், அவர்களே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
பாரதியாரையும், விவேகானந்தரையும் உங்கள் வீட்டுச் சின்னஞ் சிறு மனிதர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். மனம் வளம் பெறும். மஞ்சள், வேம்பு, துளசி, நிலவேம்பு... இவை உயிர், உடல் காக்கும் நம் மண்ணின் மூலிகைகள். அதை நம் பாட்டி கொடுத்தபோது வாங்கிக் குடித்தோம். நம் பிள்ளைகளுக்குக் கொடுக்க மறந்தோம். ஃபார்மஸியில் மாத்திரைகள் வாங்கி விழுங்கினோம். இனியாவது புராதானங்களை மீட்டெடுப்போம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமூட்டுவோம், அறிவூட்டுவோம், அன்பூட்டுவோம்!
நன்றி..

17 மே, 2020

விலகி நிற்பவர்கள் வெல்லுவதில்லை


விலகி நிற்பவர்கள்

வெல்லுவதில்லை
வெல்ல நினைப்பவர்கள்
விலகுவதில்லை:
நீல் ஆம்ஸ்ட்ராங்...
இவர் தான் நிலவில்
முதன் முதலில் கால் வைத்தவர்...
ஆனால்,
முதன் முதலில் வைத்திருக்க
வேண்டியவர் யார் தெரியுமா?...
பல பேருக்கு தெரியாது...
அவர், எட்வின் சி ஆல்ட்ரின்...
இவர் தான்
நிலவுக்கு சென்ற
அப்பல்லோ விண்கலத்தின் பைலட்... அதாவது விமானி...
ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர்.
மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர்.
அதனால் அவர் பைலட்டாக
நியமிக்கப்பட்டார்...
நீல் ஆம்ஸ்ட்ராங்க்
அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர்.
மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்
பட்டார்...
அவர் கோ-பைலட் அதாவது
இணை விமானி...
இவர்கள் சென்ற
அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து,
"பைலட் பர்ஸ்ட்"... என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால்,
ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.
இடது காலை எடுத்து வைப்பதா?... வலது காலை எடுத்து வைப்பதா?
என்றல்ல...
"‘நிலவில் முதன்
முதலில்கால் எடுத்து வைக்கிறோம்.
புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம்.
கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது.
புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால்,
எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’"...
தயக்கத்தில் மணிக்கணக்காக
தாமதிக்கவில்லை...
சில நொடிகள்தான்
தாமதித்திருப்பார்...
அதற்குள் நாசாவில்
இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது,
"கோ-பைலட் நெக்ஸ்ட்..."
நீல் ஆம்ஸ்ட்ராங்
கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்...
உலக வரலாறு ஆனார்...
உலக வரலாறு,
ஒரு நொடி தயக்கத்தில்
மாற்றி எழுதப்பட்டது...
திறமையும்
தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின்
காரணமாக தாமதித்ததால்
இன்று ஆல்ட்ரினை
யாருக்கும் தெரியவில்லை.
முதலாவது வருபவரைத்தான்
இந்த உலகம் நினைவில்
வைத்திருக்கும்
என்பது மட்டுமல்ல...
தயக்கம்,
பயம் இவை எந்த அளவுக்கு
நம் வெற்றியை பாதிக்கும்
என்பதற்கு இதுவே உதாரணம்...
இனி நிலவை
பார்க்கும்போதெல்லாம்
இந்தச் சம்பவத்தை நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள்...
ஒரு நிமிடத் தயக்கம்
நம்முடைய மிகப் பெரிய
வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது...
நாம் எல்லோருமே
மிகப்பெரும் சாதனைகளை
படைக்கிற வல்லமை
உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம்,
பயம்,
கூச்சம் இவைதான்
நம் முதல் எதிரி...
பலருக்கு தன்னுடைய
தவறுகளை கலைவதில் தயக்கம்...
தவறுகளை
தட்டிக் கேட்க தயக்கம்...
அடுத்தவர்களை
பாராட்டுவதில் தயக்கம்...
ஏன்,
சிலருக்கு இந்த தகவலை
நண்பர்களுக்கு பகிர கூட தயக்கம்...
சரியானதை
செய்ய தயங்கினால்,
தவறானதை தான் செய்து
கொண்டிருப்போம்...
எனவே,
நல்ல விஷயங்களில்...
தயக்கத்தை தவிர்ப்போம்..

அழகான வரிகள் பத்து.

1} அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்..
நாம் எல்லோரும்
"சாதாரண மனிதர்கள்"
2} பொறாமைக்காரரின் பார்வையில்..நாம் அனைவரும்
"அகந்தையாளர்கள்"
3} நம்மைப் புரிந்து கொண்டோரின் பார்வையில்..நாம்
"அற்புதமானவர்கள்"
4} நேசிப்போரின் பார்வையில்.. நாம்
"தனிச் சிறப்பானவர்கள்"
5} காழ்ப்புனர்ச்சி கொண்டவர்களின் பார்வையில்.. நாம்
"கெட்டவர்கள்"
7} சுயநலவாதிகளின் பார்வையில் நாம்...
"ஒழிக்கப்பட வேண்டியவர்கள்"
8} சந்தர்ப்பவாதிகளின் பார்வையில் நாம் "ஏமாளிகள்"
9} எதையும் புரிந்து கொள்ளாதவர்கள் பார்வையில் நாம்
"குழப்பவாதிகள்"
10} கோழைகளின் பார்வையில் நாம் "அவசரக்குடுக்கைகள்"
நம்மை பற்றி ஒவ்வொருவருக்கும்
ஒரு தனியான பார்வை உண்டு.
ஆதலால் -
பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட சிரமப்படாதீர்கள்.
மற்றவர்கள் உங்களை புரிந்துகொள்ளாவிட்டாலும்......
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு...
இந்த மனிதர்களிடம் எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!
அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்...!
எப்போதும் நேர்மையும் தைரியமும் உங்கள் சொத்தாக இருக்கட்டும்.
வாழ்வோம்..
பிறரையும் வாழ வைப்போம்..

தனி மனிதர்கள் அடைந்த வெற்றிக்குப் பின்னால் 5 விஷயங்கள்


தனி மனிதர்கள் அடைந்த வெற்றிக்குப் பின்னால் இந்த 5 விஷயங்களே காரணமாக இருக்கின்றன. அவை,
1. சாதிக்க வேண்டும் என்கிற வெறி
2. வரையறுக்கப் பட்ட இலக்கு
3. விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்
4. சரியான கண்ணோட்டம்
5. தன் மீதான முழு நம்பிக்கை
1. சாதிக்க வேண்டும் என்கிற வெறி:_
நாம் எதைப் பெற வேண்டும்; எதில் ஜெயிக்க வேண்டும் என்று குறியாக இருக்கிறோமோ அதில் ஓர் ஆழமான பற்று கொள்ள வேண்டும். உண்மையான ஈடுபாடு இருக்க வேண்டும்.
மின்சார பல்பை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், பல நூறு முறை தன்னுடைய சோதனை சாவடியில் பின்னடைவு ஏற்பட்ட போதும் அவரது 'வெற்றி கண்டே தீர வேண்டும என்கிற வெறித்தனமான ஆர்வம் தான் இறுதியில் ஜெயித்தது.
2. வரையறுக்கப் பட்ட இலக்கு:_
தீர்க்கதரிசனமான குறிக்கோளை (clearly defined goal) மட்டுமே இலக்காக கொள்ள வேண்டும். 'குறிக்கோள்' அனைத்தும் நம் கட்டுப்பாடு, சம்பந்தப் பட்ட முயற்சி, திறமை, ஆர்வம், ஈடுபாடு, ஞானம், உழைப்பு மற்றும் நம்மால் எம்பக் கூடிய உயரத்திற்குள் (சாத்தியப் படுவதாக) நிர்ணயிக்கப் பட வேண்டும்.
3. விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்:_
நமக்கு ஏற்படும் தோல்விகளுக்கு பெரும் பாலும் பிறறைத் தான் குறை சொல்கிறோம். இது தவறில்லை என்று சிலருக்கு தோன்றும். அவர்கள் தயவு செய்து ஒன்று செய்யுங்களேன். ஹானஸ்டாக இன்றோ, நேற்றோ ஏற்பட்ட ஒரு சின்ன தோல்விக்கு காரணம் எதுவாக இருக்கும் என்று சுய மதிப்பீடு செய்து பார்த்து விடுங்களேன். சம்பவத்தின் முடிவு தோல்வி என்பதால், அதை வெற்றி கொண்டிருக்க நாம் என்னவெல்லாம் செய்திருக்கலாம் என்று. மாற்று வழி புலப்படும். இந்த பரிசீலனை உங்களுக்கு அடுத்த முறை உதவும்.
4. சரியான கண்ணோட்டம்:_
நாம் திட்டமிட்டு சாதிக்க வேண்டிய ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு பயணத்திற்கு சமமானது. அந்தப் பயணத்தை தொடங்கும் போதும், பயணத்தின் போதும் சில வேளைகளில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரலாம். எனவே அத்தகைய பிரச்சினைகளை எதிர் கொள்ளும் மனோதிடம் நமக்கு இருக்க வேண்டும். இப்படி பல சோதனைகளைத் தாண்டியவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
ஒவ்வொரு பிரச்சினையும் நமது முன்னேற்றத்திற்கான வாய்ப்பு என்றும், ஒவ்வொரு வாய்ப்பும் ஒரு பிரச்சினையை உள்ளடக்கியதே என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல பிரச்சினைகளின் பின் விளைவுகளை கண்டு பயப் பட்டால் ஓரடி கூட முன்னேற முடியாது. மனித சமுதாயத்தின் ஒவ்வொரு அடி வளர்ச்சிக்கும் இரண்டு அடியாவது பின்னடைவு இருந்திருக்கும் என்பதை உணருங்கள்.
5. தன் மீதான முழு நம்பிக்கை:_
வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்துடன் முன் வைக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் அசைக்க முடியாத நம்பிக்கையை அடித்தளமாக கொள்ளுங்கள். 'நம்மால் முடியும்' என்று தினசரி இரண்டு முறையாவது உங்களது குறிக்கோளை மனதில் கொண்டு வந்து மனதிற்கு கட்டளை இடுங்கள். நிச்சயம் உங்களால் முடியும்......!

நாம் சேர்ந்து பயணிக்கப்போவது ஒரு குறுகிய காலமே..

                     

இளம் வயது பெண் ஒருவர் ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் பருமனான இன்னொரு பெண் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார்.
அவரது பருத்த உடலும் பைகளும் அந்த இளம் பெண்ணை நெருக்கிக் கொண்டிருந்தன.
அந்த இளம் பெண்ணிற்கு அடுத்தப்பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி இதனைப் பார்த்து அதிருப்தி அடைந்தார்.
உடனே அந்த இளம் பெண்ணிடம்,
"பேருந்து முழுவதும் நிறைய இடம் காலியாக உள்ளதை கூறுங்கள்" என ஆதங்கப்பட்டார்.
அந்த பெண் புன்னகைத்தவாறு கூறினார்:
"நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகக் குறுகிய நேரம்தான்.
எனவே, அற்பமானதொரு விஷயத்திற்காக பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது.
நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கத்தானே போகிறேன்," என்றார்.
அப்பெண்ணின் இந்தப் பதில் பொன்னெழுத்துகளில் பதிக்கப்பட வேண்டியவை!
"அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதைக் குறைவாக பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது.
நாம் சேர்ந்து பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே"
இங்கு நாம் வாழப்போகும்
காலம் மிகவும் குறைந்தது என்பதை உணர்வோமாயின்,
வாய்ச்சண்டை போடுவது,
வீண் வாதத்தில் ஈடுபடுவது,
பிறரை மன்னிக்க மறுப்பது,
எதிலுமே அதிருப்தியும்
குற்றமும் காணும்
போக்கினைக் கொண்டிருப்பது
நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கும் செயல் என்பது புரிந்திடும்.
ஒருவர் உங்களைப் புண்படுத்திவிட்டாரா? அமைதியாக இருங்கள்,
பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே..
எவரேனும் உங்களுக்குத் துரோகம் புரிந்தாரா, உங்களை ஆக்கிரம வதை செய்தாரா(bully) ஏமாற்றினாரா,..
மட்டம் தட்டி முந்தப் பார்த்தாரா,
அவமானப்படுத்தினார?
அமைதியாக இருங்கள், பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே..
ஒருவர் நமக்கு எப்பேற்பட்ட தொல்லைகளை ஏற்படுத்தினாலும், ஒன்றை நினைவிற்கொள்ளுங்கள்,
பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே..
இப்பயணம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது. அவர்கள்பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே..
உறவையும் நட்பையும் போற்றுவோம். ஒருவரை ஒருவர் மதித்து வாழ்வோம்,
ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவோம், மன்னிப்போம் மறப்போம்.
நன்றி பாராட்டி மகிழ்ச்சியாக வாழும் வழியைப் பார்ப்போம்.
ஏனெனில்,
"நாம் சேர்ந்து பயணிக்கப்போவது ஒரு குறுகிய காலமே"

படித்ததில் பிடித்தது



பிடித்தவர் என்பதற்காக பிழைகளை சுட்டிக்காட்ட தவறாதீர்கள்.
பிடிக்காதவர் என்பதற்காக நல்லவற்றை தவறாக பரப்பாதீர்கள்.
இனி நீங்கள் தேவை இல்லை என சொல்பவர்கள்
விலகுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது.
உங்களிடத்திலான அவர்களின் தேவைகள் முடிந்து விட்டது.
பேசுபவற்றை தவறாக புரிந்து கொள்பவரிடம் மௌனமாய் இருங்கள்.
தவறாக பேசுவதற்காகவே வாயைத் திறப்பவர்களிடம் விலகி இருங்கள்.
கோபப்படுவது உண்மையான அன்பு அதற்காக பிரிவது
அது விலகுவதற்கான முன் எற்பாடு..!
யாராவது உங்களை வெறுக்கிறார்கள் என தெரிந்தால் நீங்களாகவே விலகிவிடுங்கள்.
அவர்கள் அதை வார்த்தைகளால் வெளிப்படுத்தும்போது
உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது.
பிடிக்கவில்லை என்றால் பொய்யாக நேசிக்காதீர்கள்.
அன்புக்கு ஏங்கிக் கொண்டிருப்பவர்களால்
ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாது.
விலகியிருக்க விரும்புபவரிடம் அன்பை திணிக்காதீர்கள்.
தற்சமயம் அதை அவர் வேறொருவரிடம் எதிர்பார்க்கிறார்.
யார் வெறுத்தாலோ விலகிப்போனாலோ - நீங்கள் நொந்து போகாதீர்கள்.
"கிளை உடைந்தாலோ மரம் சாய்ந்தாலோ - சிறு குருவியே சிறகை நம்பி பறக்கிறது"

15 ஏப்., 2020

’மாத்தி யோசி

கண் தெரியாத சிறுவன் ஒருவன் ஒரு கோவில் அருகில் பிச்சை எடுத்து கொண்டிருந்தான்.அவன் எதிரில்’”எனக்கு இரண்டு கண்களும் தெரியாது,தயவு செய்து தருமம் பண்ணுங்கள்” என்று எழுதி இருந்தது.
அந்த வழியில் போவோர் வருவோர் எல்லாம் அதை பார்த்து கொண்டே சென்றார்கள், யாரும் தருமம் பண்ணுவது மாதிரி தெரியவில்லை.
ஒரு நபர் தன்னுடைய பர்சில் இருந்து பணத்தை எடுத்து அவன் தட்டில் போட்டார்.பிறகு அங்கு வைத்து இருந்த போர்டின் பின் பகுதியில் ஒரு வாசகத்தை எழுதி எல்லாரும் பார்க்கும்படி வைத்து விட்டு சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் அதை படிக்கும் அனைவரும் அவன் தட்டில் சில்லரையை போட ஆரம்பித்தனர்.மாலை ஆனதும் அந்த போர்ட் எழுதி வைத்தவர் வந்து பார்த்தார்.அந்த சிறுவன் கேட்டான் ஐயா அந்த போர்டில் என்ன எழுதி வைத்தீர்கள் என்று கேட்டான் .அவர் சொன்னார் நீ என்ன எழுதி வைத்தாயோ அதையே தான் நான் வேறு விதத்தில் எழுதி வைத்தேன் என்றார்.
”இன்றைய பொழுது நன்றாக விடிந்துள்ளது ஆனால் என்னால் தான் அந்த அற்புதத்தை பார்க்க முடியவில்லை” என்று அந்த போர்டில் எழுதப்பட்டிருந்தது.
இந்த வாசகத்தை படித்த அனைவரும் உனக்கு கண் தெரியாது என்பதைவிட நல்ல வேளை நமக்கு கண் இருக்கிறது நம்மால் எல்லாவற்றையும் கண்டு ரசிக்கமுடிகின்றது என்று உனக்கு தருமம் செய்து விட்டு செல்கிறார்கள் என்று சொன்னார்.
அற்புதமானது எதுவென்றால் ஒருத்தன் மனசு விட்டு சிரிப்பது,அவன் சிரிப்புக்கு காரணம் நீ தான் என்றால் அது அதைவிட அற்புதமானது…

”பிஸ்கட் திருடன்.”

ஒரு வயதான பெண்மணி விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்து கொண்டு இருந்தார்.விமானம் வர தாமதமாகும் என்ற அறிவிப்பை கேட்டவுடன் கடைக்கு சென்று படிக்க புத்தகமும் சாப்பிட குட் டே பிஸ்கட்டும் வாங்கி வர சென்றார்.


ஒரு சேரில் அமர்ந்து தான் வங்கி வந்த புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார்.அவருக்கு ஒரு சேர் தள்ளி ஒரு வாட்டசாட்டமான நபர் உட்கார்ந்து இருந்தார்.

சிறிது நேரத்தில் அந்த நபர் குட் டே பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து ஒரு பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு காலியாக இருந்த சேரின் மீது வைத்தார்.அந்த பெண்மணி அவரை பார்த்து முறைத்து விட்டு ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
அந்த நபர்
மறுபடியும் ஒரு பிஸ்கெட் எடுத்து சாப்பிட்டார்.அந்த பெண்மணிக்கு கோபம் வந்து விட்டது இருந்தாலும் அந்த நபரின் உருவத்தை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் இவரும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
அந்த முரட்டு மனிதன் மறுபடியும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்,ச்சே பிஸ்கட் திருடி திண்கிறானே இவனுக்கு கொஞ்சம்
கூட வெட்கம் இல்லையா என்று நினைத்து கொண்டே அந்த பெண்மணி தானும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
இப்படியே இருவரும் மாறி மாறி பிஸ்கட் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.கடைசியாக ஒரே ஒரு பிஸ்கட் இருந்தது.இருவரும் அந்த பிஸ்கட்டை பார்த்தனர்,சிறிது நேரம் அமைதியாக இருந்தனர்.
அந்த முரட்டு மனிதன் அந்த பிஸ்கட்டை இரண்டாக புட்டு பாதியை அவர் சாப்பிட்டுவிட்டு மீதியை அந்த சேரில் வைத்தார்.அந்த பெண்மணி மீதி பாதி பிஸ்கட்டை சாப்பிட்டு விட்டு விமானம் ஏற கிளம்பி விட்டார்.

விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன், என்ன மோசமான மனிதன் பிஸ்கெட் வேண்டும் என்றால் கேட்டு வாங்கி சாப்பிட வேண்டியது தானே.இப்படியா திருடி திண்பது என்று சொல்லிக் கொண்டே தண்ணீர் குடிப்பதற்கு பையில் கையை விட்டார்.
அவருக்கு ஒரே ஆச்சரியம் கடையில் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் அவர் பையில் இருந்தது.அப்படின்னா நான் இவ்வளவு நேரம் அங்கு சாப்பிட்ட பிஸ்கட் அந்த முரட்டு மனிதனுடையதா…நான் தான் பிஸ்கெட் திருடி சாப்பிட்டனா…என்று சொல்லிக்கொண்டே தன் செயலுக்காக வருந்தினார்.

”எப்பவுமே ஒருவருடைய உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது.அடுத்தவர்கள் மேல் குறை காணும் முன் நாம் தகுதியானவரா என்று நினைக்க வேண்டும்”

தந்தையும் மகளும்

ஒரு தந்தையும் மகளும் ஆற்றின் பாலத்தை கடக்க முயல்கின்றனர்.
தந்தை சொல்கிறார்”
 என் கையை கெட்டியமாக பிடித்துக்கொள் மா “, ஆற்றில் தண்ணீர் நிறையப்போகிறது, பத்திரம் மா ” என்று.

உடனே, மகள் சொல்கிறாள் அப்படின்னா
 “நீங்க என் கைய புடிச்சிகிங்க பா”.
இரண்டுக்கும் என்ன மா வித்தியாசம் என்று தந்தை கேட்கிறார்.

நான் உங்கள் கையை பிடித்தால்,ஏதேனும் தவறு நடந்தால் கையை விட்டுப் பிரியவாய்ப்பிருக்கிறது. நீங்கள் பிடித்தால் எந்தகாரணத்திற்காகவும் என்கையை விடமாட்டீர்கள் பா என்றாள் மகள்.

காலங்கள் மாறினாலும் ... மனைவிகளின் மனங்கள் மாறுவதில்லை

ஒரு புடவை வாங்க முன்னூறு புடைவைகளை புரட்டிப்பார்த்த மனைவியிடம் கணவன் எரிச்சலுடன் சொன்னான்,

"ஆதி காலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி
இருந்தாள். இதுபோன்ற தொல்லைகள் நல்லவேளை ஆதாமுக்கு இல்லை"

இதற்கு மனைவி பதில் சொன்னாள்,

"அதுக்கு அவள் எத்தனை மரம் ஏறி இறங்கினாளோ.......?"

காலங்கள் மாறினாலும் ... மனைவிகளின் மனங்கள் மாறுவதில்லை

படித்ததில் பிடித்தது

இரண்டாம் வகுப்பு ஆசிரியை வாய்ப்பாடு ஒன்றை கரும்பலகையில் எழுதினார்.

இந்த வாய்ப்பாடு எழுத ஆரம்பித்தது முதல்....,
வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி தொடர்ந்தது.
காரணம்,
முதலாவது வாய்ப்பாடு பிழையாக எழுதப்பட்டிருந்தது.
1×9=7, ❌
2×9=18, ✔
3×9=27, ✔
4×9=36, ✔
5×9=45, ✔
6×9=54 ✔
7×9=63 ✔
8×9=72 ✔
9×9=81 ✔
10×9=90 ✔
மாணவர்களைச் சிரிக்கத் தூண்டியது.
சமன்பாட்டை எழுதி முடித்து மாணவர்களை நோக்கிய ஆசிரியை.....,
சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு பேசத் துவங்கினார்...
நான் முதல் வாய்ப்பாட்டை பிழையாக எழுதியிருக்கின்றேன்.
இதன் மூலம் உங்களுக்கொரு உண்மையை புரியவைக்கப் போகிறேன்.
இந்த உலகம் உங்களை எப்படி விமர்சிக்கும் என்பதை நீங்கள் இதன் மூலம் புரிந்து கொள்வீர்கள்.
நான் இங்கு 9 முறைகள் மிகச் சரியாக எழுதியிருக்கின்றேன்.
அதற்காக நீங்கள் யாரும் என்னைப் பாராட்டவில்லை.
ஆனால்,
நான் பிழையாக எழுதிய ஒரே ஒரு விஷயத்தைக் மட்டும் கவனித்து....
அனைவரும் சிரித்து கேலி செய்கிறீர்கள்.
நீங்கள் இலட்சம் தடவைகள் விஷயங்களைச் சரியாக செய்த போதிலும்......,
இந்த உலகம் உங்களை ஒரு போதும் பாராட்டப் போவதில்லை.
ஆனால் நீங்கள் செய்த ஒரு பிழையைத் தான் உலகம கவனிக்கும்.
அதையே மிகக் கீழ்த்தரமாக விமர்சிக்கும்...
இவைகளைக் கண்டு ஒரு போதும் தளர்ந்து விடாதீர்கள்.
உங்களைப் பார்த்து சிரித்தவர்கள்,
உங்களை விமர்சித்தவர்கள் முன்னால் .....
உயர்ந்து நிற்கும் முயற்சியில் உறுதியாக நில்லுங்கள்.

13 ஏப்., 2020

படித்ததில் பிடித்தது

சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது!
வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது.
நாய்கள் ஓட ஆரம்பித்தன.
ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை.
போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள்.
அதற்க்கு அவர் சொன்ன விடை -
“சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”.
சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும்.
அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை.
ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை.
அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.
தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம் நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..

ஆத்திரம்

மங்கோலிய மாவீரர் செங்கிஸ்கான் ஒருநாள் வேட்டைக்குச் சென்றார்.செங்கிஸ்கான் தனது கரத்தில் ஒரு ராஜாளி கழுகை ஏந்தி இருந்தார்.
அதிக தூரம் நடந்து சென்றதால் களைப்பு ஏற்ப்பட்டது.
தாகம் எடுத்தது. அப்போது ஒரு பாறையிலிருந்து நூல் இழைபோல் தண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்தது.
ஒரு குவளையை எடுத்துக் கொண்டு நீர் ஒழுகும் இடத்திற்கு சென்று நீரைப் பருக சென்றார்.
ராஜாளி வேகமாக பாய்ந்து சென்று குவளையைத்
தட்டிவிட்டது. மீண்டும் மீண்டும் வௌ்ளிக் குவளையை ராஜாளி தட்டி விட்டது.
ராஜாளியின் அடாவடி. இந்த இரண்டாலும்
செங்கிஸ்கானுக்கு அளவற்ற ஆத்திரம் பொங்கியது.
வாளால் ராஜாளியை வெட்டினார். ராஜாளி துடி துடித்துக் கொண்டு இருந்தது.
மீண்டும் செங்கிஸ்கான் தண்ணீரைச் சேகரித்து அதை அருந்த முற்பட்டார். துடி துடித்துக் கொண்டு இருந்த ராஜாளி மறுபடியும் பாயந்து வந்து குவளையை தட்டி விட்டது.
செங்கிஸ்கானுக்கு அடக்க முடியாத கோபம் பீறிட்டெழுந்தது. ராஜாளியின் நெஞ்சை வாளால் குத்திக் கிழித்தார்.
இப்போது மேல் இருந்து தண்ணீர் கசிவது நின்று விட்டது. கீழே தண்ணீர் கசிவு வறண்டு விட்டாலும் மேலே ஒரளவு தண்ணீர் இருக்கக் கூடும் என்று செங்கிஸ்கான் யூகித்தார்.
குன்றின் வழியே அவர் மேலே ஏறினார். அங்கே ஒரு சிறிய தடாகம் தென்பட்டது. ஆனால் அந்தத் தடாகத்தின் மத்தியில் கொடிய நாகப் பாம்புகள் செத்துக் கிடந்தது.
அந்தத் தண்ணீரை அருந்தியிருந்தால் தனது உயிர் பிரிந்திருக்கும் என்பதை செங்கிஸ்தான் உணர்ந்து கொண்டார்.
கீழே இறங்கி வநத செங்கிஸ்கான், செத்துக்கிடந்த ராஜாளியை இறுகத் தழுவிக் கொண்டார்.
இந்த ராஜாளிக்குத் தங்கச் சிலை வடிவமைக்க வேண்டும் என்று அவர் கட்டளை இட்டார்.
செங்கிஸ்கான் விருப்பதிற்கு ஏற்ப தங்க ராஜாளி சிலை வடிவு அமைக்கப்பட்டது.
அதன் ஒரு சிறகில் ஒரு நண்பன் உனக்கு விருப்பம் இல்லாததைச் செய்தாலும் கூட, அவன் தொடர்ந்து உனது நண்பனாகவே இருக்கிறான் என்று பொறிக்கப் பட்டது.
மற்றொரு சிறகில், ஆத்திரத்தோடு செய்கிற செயல் அழிவையே தரும் என்றும் பொறிக்கப்பட்டது.
ஆம்.,நண்பர்களே..
எதிலும் ஆத்திரமோ, அவசரமோ இல்லாமல் புத்திசாலிதனமாக ஈடுபட்டால் எதிலும் வெற்றிதான் .
அதே சமயம் அழிவுக்கு காரணம் அவசரமும் , ஆத்திரப்படுதலே ஆகும் .
எல்லாமே நன்றாக அமைய ஆத்திரப்படாமலும் அவசரப்படமாலும் இருந்தால்நல்லது.