வாழ்க்கையில் நாம் உயர்வதும் தாழ்வதும் நாம் மேற்கொள்ளும் அணுகுமுறை ஒன்றிலே அடங்கியிருக்கிறது.

Nov 11, 2015

பொன்மொழிகள் சில



                    வாழ்க்கை பற்றிய பொன்மொழிகள்

1. வாழ்க்கை என்பது ஒரு சுமை, அதைத் தாங்கிக் கொள்; அது ஒரு முள் கிரீடம் அதை அணிந்து கொள்.- அப்ராம் ரியான்

2. நம்பிக்கையே வாழ்க்கையின் சக்தி; கவலை வாழ்க்கையின் எதிரி.- ஷேக்ஸ்பியர்

3. முட்டாளின் முழு ஆயுள் வாழ்க்கை, அறிவாளியின் ஒரு நாள் வாழ்க்கைக்கு சமம். - கோல்டன்

4. வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவனுக்குத் தன்னம்பிக்கை வேண்டும்; வாழ்க்கை முழுமை பெறக் கடவுள் நம்பிக்கை வேண்டும்.- கீட்ஸ்

5. வாழ்க்கை என்பது போர்க்களம்; இதில் ரத்தமும் ரணங்களும் தவிர்க்க முடியாதவை; ஏனெனில் இவைதாம் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.- காண்டேகர்

6. எல்லோரையும் திருப்திப்படுத்த நினைப்பவன் வாழ்க்கையில் வெற்றி பெற மாட்டான். - லெனின்

7. உலகில் எப்படி வாழ்வது என்பதையாவது தெரிந்து கொள்ளும் அளவுக்கு உன்னை நீயே அறிந்து கொள்; அதுவே வாழ்க்கையில் நீ அடையத்தக்க பெரும் பேறு. - ஜேம்ஸ் டக்ஸில்

8. நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகளை முறையாகப் பெற்றிருக்க வேண்டும்.- வில்லியம் பிளேக்

9. வாழ்க்கை என்பது ஊஞ்சலில் உட்கார்ந்து ஊசலாடுவது அல்ல; புயலுக்கு நடுவே படகைச் செலுத்துவது போன்றது.- காண்டேகர்

10. வாழ்க்கையில் எப்போதும், சமாதானத்தையும் சகிப்புத்தன்மையையும் நமது லட்சியமாக கொள்ள வேண்டும். -பாரதியார்

நண்பர்களைப் பற்றிய பல்வேறு பொன்மொழிகள் உள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கேப் பார்க்கலாம்.

நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்.

பு‌த்தக‌ங்க‌ள்தா‌ன் ந‌ம்முட‌ன் பேசு‌ம் மெளன ந‌ண்ப‌ர்க‌ள்.

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.

வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.

உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், பொறாமை‌க்கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன்.

நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.

வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.

ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.

சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.

உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.

ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.

புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரு‌ம் வரை காத்திருக்க வேண்டும்.

புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.

*நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்.

*
பு‌த்தக‌ங்க‌ள்தா‌ன் ந‌ம்முட‌ன் பேசு‌ம் மெளன ந‌ண்ப‌ர்க‌ள்.

*
எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

*
உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.

*
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.

*
உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

*
உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

*
பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், பொறாமை‌க்கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன்.

*
நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.

*
வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.

*
ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.

*
சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.

*
உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.

*
ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

*
நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.

*
புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரு‌ம் வரை காத்திருக்க வேண்டும்.

*
புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.

*
ஒரே சிந்தனையுடன் இருக்கும் இரண்டு உடல்கள் தான் நட்பு.

*
நட்பு என்றும் தோல்வி அடைவதில்லை, தவறு செய்வதும் இல்லை.

*
உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் சிறந்த பரிசுதான் நட்பு.

*
உங்களை சரியான வழியில் எடுத்துச் செல்ல வந்திருக்கும் இறைத் தூதுவன்தான் நண்பன்.

*
பிரச்சினைகளே இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் உலகத்தில் நண்பர்கள் இல்லாமல் இருக்க முடியாது.

*
சிறந்த நண்பன்தான் நமது நெருங்கிய உறவினன்.

*
புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும்.

*
காதலுக்கு கண் இல்லை. அந்த கண்களை திறந்து வைப்பது நட்புதான்.

*
நண்பர்களைக் கொண்டு இரு. நண்பனாக இரு.

*
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது பலரை அறிவாய், துக்கத்தில் மட்டுமே நண்பர்களை அறிவாய்.

*
நீ கவலையில் இருக்கும்போது, முத்தம், கடிதம், அணைத்தல் என எதுவும் தராத ஒரு நிம்மதியை உன் நண்பனது அமைதி தரும்.

*
நண்பர்களுக்குள் மன்னிப்புக்கும், நன்றிக்கும் இடமில்லை.

*
உன் மனதிற்குள் இருக்கும் பாடலை அறிந்தவனே நண்பன். எப்போது நீ ஒரு சில வார்த்தைகளை மறக்கிறாயோ அப்போது உன் நண்பன் அந்த வார்த்தையை எடுத்துக் கொடுப்பான்.

*
எனக்கு முன்னாடி நடந்து செல்லாதே, உன்னை பின்பற்றி வர நான் விரும்பவில்லை, என் பின்னாடி நடந்து வராதே, உனக்கு முன்னோடியாக இருக்க விரும்பவில்லை, என்னுடனே நடந்து வா என் நண்பனாக.

*
புதிதாக இருக்கும் நட்பு கரும்பு போன்றது. அதுவே உண்மையான நட்பாகும்போது சர்க்கரையாக இனிக்கிறது ஆனால் உனக்கொன்று தெரியுமா? அதுவே நீயாகும்போது நட்பு எனக்கு தேனாகிறது.

*
உண்மையான நண்பனை அறிவது மிகக் கடினம். உனக்கு சாமர்த்தியம் அதிகம்... நீ என்னை அறிந்துள்ளாய்.

*
நட்பு நீ நிற்கும் போது உன்னை உற்சாகப்படுத்தி இயக்க வைக்கும், தனிமையை இனிமையாக்கும், தேடும்போது வழிகாட்டியாகும், கவலையை போக்கி சிரிக்க வைக்கும், சந்தோஷத்தில் பா‌ட்டு‌ப் பாடும்.
மனிதன் வெறுப்பு கொள்வது அதிசயமல்ல. அவன் எதையாவது வெறுத்துதான் தீர வேண்டும்
.
கோபத்தோடு எழுகிறவன் நட்டத்தோடு உட்காருவான்.

விழுவது இயற்கை; எழுவதே வாழ்க்கை.

நடுக்கடலில் கப்பல் மாலுமிக்குத்தான் சொந்தம்.

அடுத்த வீட்டுக்காரனுடன் நட்பாயிரு. அதற்காக இடையில் உள்ள சுவற்றை எடுத்துவிடாதே.

பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும்.

பிறர் தவறுகளில் இருந்து கற்பவன் புத்திசாலி.பள்ளியில் போய் முட்டுவதால் படிப்பு வருவதில்லை.முடியுமானால் பிறரைவிட அறிவாளியாய் இரு. ஆனால் அவர்களிடம் மட்டும் கூறாதே.

தோல்வி என்பது அடுத்த செயலுக்கான எச்சரிக்கை.அவதூறை அடக்குவதற்கு அதை அலட்சியம் செய்வதே நல்லது.

பிறர் கவலை உன் தூக்கத்தைக் கெடுக்காது.வயதில் இளைஞனாக அறிவில் முதியவனாய் இரு.எதை நீ இழந்தாலும் உனக்கு எதிர்காலம் இருக்கிறது.தற்பெருமை மடமையின் மிகத் தெளிவான அடையாளம்.

நான் ஏன் இரண்டும்கெட்டானாய் வாழ்கிறேன்?

சிலநேரம் வாழ விரும்புகிறேன், சிலநேரம் வாழ்வையே வெறுக்கிறேன் ஏன்?இரண்டுக்கும் காரணம் ஒன்றுதான்.எது? ஆசைகள்.ஆசைகளா? ஆம்.ஆசைகள் நிறவேறும்போது, வாழ்க்கையில் விருப்பங்கொள்வீர்கள்.அவை நிறவேறாதபோது, வெறுப்புக் கொள்வீர்கள். 

1.ஒருபோதும் தவறு செய்யாதவன் ஒன்றும் செய்ய மாட்டான்.

2.எல்லா விசயங்களிலும் நல்ல அம்சத்தைக் காண முயலவேண்டும்.

3.ரோஜா செடியிலே முள் இருப்பதை நினைத்து வருத்தப்படாதே, முள் செடியில் மலர் இருக்கிறதே என்று சந்தோசப்படு.

4.உண்மையான செல்வம் பணமன்று; குணம்.

5.செல்வமும் சரி, சாமர்த்தியமும் சரி, முறையாக உபயோகித்தால்தான் பெருமை தரும்.

6.வாழ்க்கையில் மிக முக்கியமாகக் கற்றுக் கொள்ள வேண்டிய விசயம் எப்படி வாழ்வது என்பதே.

7.கற்பது கடினம், கற்றதை மறப்பது அதைவிட கடினம்.

8 கொள்கையில் நம்பிக்கை வேண்டியதுதான். ஆனால், அது குருட்டுத்தனமாய் இருக்கக் கூடாது.

9.பிறர் செய்த உபகாரம் உன் கையில் அதிகமாகி தங்கி விடாமல் பார்த்துக் கொள்.

10.யாராவது குறை கூறி னால், அது உண்மையாய் இருப்பின் திருந்தி விடு; பொய்யானால் நகைத்துவிடு.

11.உண்மை ஒரு தீவத்தி, அருகில் செல்ல பயந்து, கண்களைச் சிமிட்டிக் கொண்டே அதை கடந்து செல்கிறோம்.

12.உண்மை மனிதனுக்குச் சொந்தம், பிழை அவனுடைய காலத்துக்கு சொந்தம்.

13.எதை நாம் அறியவில்லையோ, அது நம்முடைய தவறு.

14.உன் கடமையைச் செய்ய முற்படு. அப்போதே உன் தகுதியை அறிந்து கொள்வாய்

15.முட்டாள் எல்லா விசயத்திற்கும் சிரிப்பான்.

16.வறுமையினால் பெரிய துன்பமுமில்லை; செல்வத்தினால் உயர்ந்த நன்மையுமில்லை

17.எதிரியின் கர்வத்தை மாற்ற, நாம் பயன்படுத்தக் கூடிய மருந்து அன்பு ஒன்று தான்.

18.தன்னம்பிக்கை ஒன்று-தான் மனிதனுக்கு நேரும் சகல நோய்களுக்கும் ஒரே மருந்து.

19.முடியுமானால் பிறரை விட அறிவாளியாக இரு. ஆனால், அதை அவர்களி டம் கூறாதே.

20.ஏளனம் என்பது கீழ்மக்கள் உள்ளத்தில் எழுகிற நச்சுப் புகை.


மனதை வருடிய பொன்மொழிகள்

Ø உங்களைத் தவிர வேறு எந்த மனிதரையும் கண்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லை.

Ø
உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும்.

Ø
உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.

Ø
நன்மையென்றும் தீமையென்றும் எதுவும் இல்லை. அவ்விதம் ஆக்குவது அவரவர் மனமே.

Ø
பிறரைச் சீர்திருத்தும் முயற்சியைவிட, தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை.
ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது.

Ø
தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளாத பெண்ணை வேறு யாரும் காப்பாற்ற முடியாது.

Ø
சிலர் அளவுக்கதிகமான செல்வத்தில் திளைக்க, மற்றவர்கள் வறுமையில் வாடும்படியாக இருக்கும் நாடு சீர்குலைந்து அழிந்துவிடும்.

Ø
நமக்குப் பாரமாய் இருக்கும் மனிதர்களை மன்னித்து விடலாம். நாம் பிறருக்கு பாரமாய் இருப்பதுதான் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

Ø
அதிகம் ஊக்கம் உடையவர்களாகவும் குறைந்த வேலை உடையவர்களாகவும் இருக்கும் மனிதர்களே பெரும்பாலும் சண்டைக்காரர்களாகவும் இருக்கிறார்கள்.

Ø
வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல. அது ஒரு அற்புதமான தீபம். பிரகாசமாக அதை எரிக்கச் செய்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

Ø
நல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக் கொள்ளும் நன் மதிப்பாகும்.

Ø
திட்டமோ கவனமோ இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குபவர்கள் தான் தடுமாறுகிறார்கள்.

Ø
நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மை யறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் மூலகாரணமாகவும் இருக்கிறார்.

Ø
எளிமையாகவும், இயல்பாகவும் இருப்பதையும் பேசுவதையும் மக்கள் அபூர்வமாகப் பார்க்கிறார்கள்.

Ø
நம்மையும், நமது திறமையையும் நாமே மதிப்பதும் நம்பிக்கை கொள்வதும் மிகவும் அவசியம்.

Ø
வாழ்த்தைக் கேட்டு வானத்தைத் தலைநிமிர்ந்து பார்க்கவும் வேண்டாம். வசவைக் கேட்டு தரை பார்த்துத் தலைகுனியவும் வேண்டாம்.

Ø
கோழையின் அச்சம்கூட சில சமயங்களில் அவனை வீரனாக்கிவிடுவது உண்டு.

Ø
இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.
நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள், ஒவ்வொரு கண்ணு மதங்களையே பார்ப்பதாக எண்ணுவர்.

Ø
உள்ளத்தின் ஒழுங்குமுற்றிலும் குலைந்திருந்தால், நாம் புறத்தில் ஒழுங்கை நிலை நாட்ட முடியாது.

Ø
அறியாமை, ஆண்டவனின் சாபம். அறிவோ, விண்ணை நோக்கி நாம் விரிக்கும் இறக்கை.

Ø
காலடிச் சுவடுகள் பதிகிற ஈரமணல் போல்தான் படைப்பாளியின் மனம்.

Ø
பிரபலமில்லாத மனிதனாக வாழ்வது ஒன்றும் குறைச்சலான காரியமில்லை.

Ø
உயர்வு, தாழ்வுக்கு இடமற்றதுதான் உலகம். அவ்விரண்டும் மனிதனாகக் கற்பித்துக் கொண்டவை.

Ø
சாவுக்குப் பயப்படாத ஒருவன், எதையும் சாதிக்கும் சக்தி பெற்றவனாகி விடுகிறான்.

Ø
வைராக்கியம் எங்கே தவறுகிறதோ, அப்போது துறவறம் தவறிப் போகும்.

Ø
கல்லூரிகளும் சர்வ கலாசாலைகளும் பட்டதாரி களைத் தான் உண்டாக்கும். புத்திசாலிகளை உண்டாக்கா!

Ø
ஒதுங்கிவாழ்வதே சந்நியாசம். ஊருடன் வாழ்வதே இல்லறம்.

Ø
மனிதனுடைய ஆசை மேலோங்கி விட்டால் ஆண்டவனையே ஏமாற்ற முனைந்து விடுகிறான்.

Ø
தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கமின்றி நடந்து கொள்கிறவன், பொது வாழ்வில் ஒழுக்கமுடன் நடப்பான் என்பது வடிகட்டிய புரட்டு.

Ø
தனியாக இருக்கும்போது சிந்தனையிலும் கூட்டத்தில் இருக்கும்போது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்.

Ø
நாம் எவ்வளவு அறியாமையில் இருந்தோம் என்பதை நமக்கு அளந்து கொடுக்கிற கருவிதான் அறிவு.

Ø
எல்லார் இடத்திலும் தெய்வம்உண்டு. ஆனால் எல்லாரும் தெய்வத்திடம் இல்லை.

Ø
தேசபக்தனுக்கு தேசமே குறி. அரசியல்வாதிக்கு தேர்தலே குறி.

Ø
உங்கள் எண்ணங்கள் எப்படியோ அப்படிதான் வாழ்க்கையும் அமையும். எனவே சிறந்ததையே எண்ணுங்கள்.

Ø
அதிர்ஷ்டம் வந்தாலும் வராவிட்டாலும் துரதிர்ஷ்டத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய துணிச்சலால் எதையும் சாதித்துவிடலாம்!

Ø
குஞ்சுகளுக்கு சிறகுகள் முளைத்த பிறகும் கூண்டைவிட்டுத் தாண்டக்கூடாது என்றால், அது ஆகக்கூடிய காரியமில்லை.

Ø
தன்னால் ஏற்படுகிற தவறுகளை ஒப்புக்கொள்ள ஒருவர் என்றுமே பின்வாங்கக் கூடாது!

Ø
நாளை என்பது மிகமிகத் தாமதமாகும். இன்று முதலே வாழ்க்கையைச் சிறப்பாக நடத்திக்காட்டுங்கள்.

Ø
எந்த வேலையைச் செய்யத் தனக்குத் தகுதி உள்ளது என்பதை ஒவ்வொரும் முதலில் கண்டுபிடித்தாக வேண்டும்.

Ø
காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும்.

Ø
தகுதி இல்லாதவர்களே பிறரை அவதூறு செய்து பொழுது போக்குகின்றனர்.

Ø
எப்போதும், எதற்காகவும் உங்களுடைய அக சந்தோஷத்தை விட்டுக் கொடுக்காதீர்கள்.

Ø
உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.

Ø
நன்மையென்றும் தீமையென்றும் எதுவும் இல்லை. அவ்விதம் ஆக்குவது அவரவர் மனமே.


*கோபத்துடன் செயல்படுபவனும், புயலில் கப்பல் விடுபவனும் சரிசமமானவன். - பிரெஞ்சு பழமொழி.

*மனிதனுக்கு நல்லது செய்வதுதான், நாம் கடவுளுக்கு செய்யும் மிகச் சிறந்த தொண்டாகும். - பிராங்களின்.

*அழகு, பெண்ணிற்கு பெருமை சேர்க்கிறது. கற்பு அவளுக்கு அளவற்ற மதிப்பை தருகிறது. அடக்கம் அப்பெண்ணை தெய்வமாக்குகிறது. - ஷேக்ஸ்பியர்

* உண்மை ஒளிவுமறைவு இல்லாத வெளிப்படையையே விரும்புகிறது.

* எங்கே உண்மை இருக்கிறதோ; அங்கே தன்னலம் இருப்பதில்லை.
 
*
உண்மைக்கு ஒப்பானது எதுவும் இல்லை. ===ஷேக்ஸ்பியர்

* நியாயமான வழியில் நிறைய பணம் சேர்ப்பதில் தவறில்லை. ஆனால், அதில் ஒரு பங்கை நல்ல விஷயங்களுக்கு கொடுங்கள்.'' - `இன்போசிஸ்' நாராயணமூர்த்தி.

* நீ ஏழையாக பிறந்தது தவறில்லை. ஏழையாகவே வாழ்வதுதான் மாபெரும் தவறு. - பில்கேட்ஸ்.

 *ஜால்ராக்களுக்கு செவி சாய்க்காது, காதுகளுக்கு கசப்பான வார்த்தைகளையும் கேட்க கற்று கொடுக்கவும். சரிவு ஏற்படாது சுதாரித்துக் கொள்ளலாம். 

* உலகம் ஒரு கண்ணாடி. உனது முகத்தையே திருப்பிக் காட்டும். எதைக் கொடுக்கிறோமோ அதையே பெறுவோம்.

* பிரச்சினைகள் இன்றி வாய்ப்புகள் இல்லை. தடைகள் இன்றி திறமைக்கு வேலையில்லை.


2 comments:

  1. சிந்தனைத் துளிகள் மனதில் பதிய வைக்கும் தேன் துளிகள்

    ReplyDelete
  2. சிந்தனைத் துளிகள் சிந்திக்க வைத்த சீரிய மொழிகள்

    ReplyDelete