

*மாவீரன் அலெக்சாண்டர் தன் போர் வீரர்களுடன் உலகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உலகை வலம் வந்து கொண்டு இருந்த போது பாலை வனம் ஒன்றை அடைந்தனர்.அப்போது அனைவரும் தண்ணீர் தாகத்தால் சோர்வடைந்தனர். அப்போது அந்த வழியே சில இறை தொண்டர்கள் சென்றனர்.அப்போது அலெக்சாண்டரை கண்ட அவர்கள் தங்களிடம் இருந்த குவளை தண்ணீரினை அவனுடைய தலை கவசத்தில் ஊற்றி கொடுத்து பருகுமாறு கூறினர்.அதற்கு அந்த மாவீரனோ என் தலைமையை நம்பி எனக்காகவும் தங்கள் நாட்டுக்காகவும் இவர்கள் என்னுடன் வந்து உள்ளனர்.எனவே இவர்களை விடுத்து நான் மட்டும் தண்ணீரை பருகினால் அது தலைமைக்கு அழகல்ல,என்று கூறி தண்ணீரை பருக மறுத்து நன்றி கூறி இறை தொண்டர்களிடம் இருந்து விடை பெற்றான்.இதை கண்ட போர் வீரர்கள் அட நம் மன்னர் நம்மை சிறப்பித்து விட்டார், என்று கூறி உற்சாகத்தில் தாகத்தை மறந்து போர் புரிந்து வெற்றிகளை குவித்து அலெக்ஸாண்டரின் பாதங்களில் குவித்தனர்

மேலே எறிவிட்டது என்று விமானி என்ஜின் ஐ அணைத்துவிட்டால் என்ன ஆகும் விபத்து ஏற்பட்டு விடும்.அது போல தான் வாழ்க்கையும் நாம் கடுமையாக உழைத்து மேலே வந்து விட்டு,நாம் தான் மேலே வந்து விட்டோமே என்று உழைப்பதை நிறுத்தி விட்டால் வாழ்கையிலும் விபத்து ஏற்பட்டு விடும் .உழைப்பு வருமனதுகனது மட்டும்மல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் மன மகிழ்ச்சியிற்கும் கூட என்று கூறியவர் வயதான இளைஞர் ராக்பெல்லர் ஆவார்.
No comments:
Post a Comment