வாழ்க்கையில் நாம் உயர்வதும் தாழ்வதும் நாம் மேற்கொள்ளும் அணுகுமுறை ஒன்றிலே அடங்கியிருக்கிறது.

Aug 12, 2022

அவலட்சணமான கலாச்சாரம் என்றால் என்ன தெரியுமா?

அவலட்சணமான கலாச்சாரம் என்றால் என்ன தெரியுமா?


*அவன் என்னை விருந்துக்கு அழைக்காவிட்டால் நானும் அழைக்கமாட்டேன்.


*அவன் எனக்கு அன்பளிப்புக்கள் கொடுக்காவிட்டால் நானும் கொடுக்கமாட்டேன். 


*அவன் என் வீட்டுக்கு வராவிட்டால் நானும் போகமாட்டேன்.


*அவன் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளாவிட்டால் நானும் தொடர்பு கொள்ளமாட்டேன்.


*அவன் ஸலாம் சொல்லாவிட்டால் நானும் ஸலாம் சொல்ல மாட்டேன்.

*எந்த அளவுக்கென்றால் அவன் எங்கள் வீட்டு மரணத்துக்கு ஆறுதல் சொல்ல வராவிட்டால் நானும் அவன் வீட்டு மரணத்துக்கு போகமாட்டேன். 


❤மனித மனங்களை, உணர்வுகளை கொடுக்கல் வாங்கல் அடிப்படையில் நடத்தாதீர்கள்!

லாப நஷ்டம் என்ற அளவுகோலில் பார்க்காதீர்கள்!


❤பெருந்தன்மையோடும், 

தாராளமனதோடும் நடந்து கொள்ளுங்கள்!

உன்னை விருந்துக்கு அழைக்காதவனை நீ அழைத்துப் பார்!

உனக்கு அன்பளிப்பு தராதவனுக்கு நீ கொடுத்துப் பார்.


❤நாங்கள் இந்த பூமியில் ஒருமுறைதான் வாழப்போகிறோம். 

தவறு செய்தால், மன்னிப்பு கேளுங்கள், சுடுமூஞ்சுடன் இருக்காதீர்கள். 


❤உன்னை காண்போர் எல்லாம் உன்னைப் போன்று இருக்க ஆசைப்படும் அளவுக்கு நீ நடந்துகொள். 


❤உன்னை தெரிந்தவர்கள் எல்லாம் உனக்காக நல்லது நடக்க வேண்டும் என்று பிரார்த்திக்கும் நிலைக்கு உன்னை நீ ஆக்கிக்கொள். 


❤உன்னை கேள்விப்படுவோர் உன்னை கண்டு சந்திக்க விரும்பும் நிலைக்கு ஆக்கிக்கொள். 


❤நன்னடத்தை என்ற நறுமணத்தை நீ பூசிக்கொண்டால் மண்ணுக்கு அடியில் நீ சென்றாலும் உன் வாசம் வீசுவதை யாராலும் தடுக்க முடியாது. 


✍ அலி அல்-தந்தாவி / மறைந்த சிரிய நீதிபதி மற்றும் எழுத்தாளர் 

வாசித்துப் பாருங்கள்... நிச்சயம் உணர்வு பெறுவீர்கள்.

இறைவா! நீயே போதுமானவன். உனக்கே எல்லா புகழும்...

விபத்தொன்றின் காரணமாக முழு உடலும் இயக்கமற்றிருக்கும் சவூதியைச் சேர்ந்த பிரபல அழைப்பாளர் அப்துல்லா Bபானிஃமா அவர்களையே படங்களில் காண்கிறீர்கள்.


தலைப்பகுதி மட்டும்தான் இயங்குகின்றது. அவரால் நடக்கவோ எழும்பவோ கை, கால்களை அசைக்கவோ முடியாது. ஆனால் சோர்ந்து விடாது தன்னம்பிக்கையுடன் மார்க்கத்தைப் போதித்து வருகின்றார்.

ஒரு பேட்டியில் கீழ்வரும் தகவலை எம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:

"வாதம் ஏற்பட்டு என்னைப் போலவே பாதிக்கப்பட்டுள்ள எனது நண்பரொருவர் என்னிடம் கூறினார்: 

"உன்னையும் என்னையும் விட மோசமான நிலையில் இருக்கும் ஒருவர் பற்றிக் கூறவா" என்று கேட்டார்.

"எம்மை விட மோசமானவரா" என்று யோசிக்கும்போதே  நண்பர் தொடர்ந்தார்: 

"பிறப்பில் இருந்தே உடல் ரீதியாகவும்,உள ரீதியாகவும் பாதிக்கப்பட்ட எனது சாச்சாவின் மகன் ஒருவர் இருக்கின்றார். பிறந்தது முதல் படுக்கையிலேயே இருக்கின்றார். பால் அல்லது ஜூஸ்,தண்ணீர் இவைதான் அவரது உணவு. அதுவும் மூக்கின் ஊடாகவே.

ஒருநாளைக்கு மூன்று நேர உணவு.  அவரது நிலையை நினைத்துப் பாருங்கள்.


வழமைபோன்று ஒருநாள் காலை உணவைக் கொடுத்து விட்டு பகல் நேர உணவைக் கொடுக்க வந்தபோது படுக்கை முழுவதும் ரத்தம் பரவியிருந்ததை வீட்டார்கள் கண்டனர்.

எங்கிருந்து இரத்தம் வருகின்றது என்று பார்த்தபோது அவரது​ இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டிருப்பதைக் கண்டனர்.

என்னதான் நடந்தது?

அவரது அறைக்குள் நுழைந்த எலியொன்று அசைவற்றிருந்த அவரின் இரு விரல்களை கடித்திருக்கின்றது!

கடிக்கும்போது அவரால் தனது இடத்தில் இருந்து எழும்பவோ,நகரவோ உதவி கேட்கவோ முடியவில்லை!

பார்த்து கண்ணீர் வடிப்பதைத் தவிர அவரால் எதுவும் செய்ய முடியவில்லை" என்று கூறி முடித்தார்.


சகோதரா...

இரு கைகள், இரு கால்களுடன் நடமாடி, சிரித்துப் பேசி ஆரோக்கியமாக வாழும் நீ உன் மீதான இறைவனின் அருளின் பெறுமதியை உணர்ந்துள்ளாயா?

எத்தனை அருள்கள்!!!

அதற்காக நன்றி கூறுகின்றாயா?

உனது ஆரோக்கியமும் நீடிக்கும் என்பதற்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளாயா?

உன் வாழ்வை எப்படி கழிக்கின்றாய்? 

விழித்துக் கொள்.. 

பாவத்தில் இருந்து விடுபட்டு இறைவனின் பக்கம் திரும்பி விடு.

சிறுசிறு துன்பங்களை விடு...

உன்னிடமுள்ள அருள்களுக்காகவும் 

உன் ஆரோக்கியத்திற்காகவும் நன்றி கூறி அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்.

குறுகிய இந்த உலக வாழ்க்கையில்...

குறுகிய இந்த உலக வாழ்க்கையில்... 

*குழப்பமும், கவலையுமான நேரத்தில் ஒரு குட்டி தூக்கம் போடுங்கள்...

*மனசு சரியில்லை என்றால் குழந்தைகளிடம் பேசுங்க...

*திருமணம் ஆகிவிட்டால் உங்கள் குடும்பத்தை நேசியுங்கள், திருமணம் ஆகவில்லை என்றால் பெண்களை நேசியுங்கள், அவர்களை மதியுங்கள்.,.

*ஆசைப்பட்டது கிடைக்க சில தியாகங்கள் செய்ய நினைத்திடுங்க...

*பொறுமை, நேர்மை, உழைப்பு, இது மூன்றும் வெற்றிக்காண வழி அதை நிலை நிறுத்துங்க...

*கிடைத்த வேலையை ஆசையுடன் செய்து பழக நினைத்திடுங்க...

*உங்களை மதிக்காத இடத்தில் உங்களின் நிழலை கூட நிற்க அனுமதிக்காதீக...

*உங்களை மதிக்கும் இடத்தில் உண்மையுடனும், நேர்மையுடன் நடந்திடுங்க...

*இவ்வுலகில் பணம்தான் எல்லாம் ஆகிவிட்டது, திருமணம் ஆகிவிட்டாலும் திருமணம் ஆகாவிட்டாலும், சேமிக்கும் பழக்கத்தை கைவிடாதீங்க...

*சேமிக்கும் பழக்கத்தை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்க...

*உதவி, மற்றும் தர்மம் செய்வதை மறக்காதீங்க...

*உதவியின் பலனையும், தர்மத்தின் சிறப்பையும் உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து வளர்த்திடுங்க...

*வறுமானத்திற்கு மீறிய செலவை விரும்பாதீங்க...

*இரண்டு வழியில் வருமானம் கிடைக்கும் வகையில் தொழில் அல்லது வேலையை செய்திடுங்க...

*உங்களுடைய ஆசையையும் உங்களின் மனைவி மக்களின் ஆசைகளையும், அவர்களின் தேவைகளையும் அவ்வப்போது நிறைவேற்றிடுங்க அதில் கஞ்சத்தனம் காட்டாதீங்க...

*மகிழ்ச்சியில் யோசிக்காமல் எந்த வாக்குகளையும் கொடுத்துடாதீங்க,

*வாக்கு கொடுத்தால், அதை கண்டிப்பாக நிறைவேற்றிவிடுங்க, அப்போதுதான் நீங்கள் அவர்களிடத்தில் மதிக்கப்படுவீங்க...

*கோபமும், பேராசையும், ஒரு கொடிய நோய், முடிந்தவரை அதை மனக்கட்டுக்குள் கொண்டு வர முயற்சியுங்கள்...

*பெண்கள் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள்...

*பெண்களிடமும், குழந்தைகளிடமும், கவனமாக பேசுங்கள்...

*உலகத்தை நேசியுங்கள், மனிதர்களை மதியுங்கள்...


"இருக்கும் இந்த ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும், வாழ பழகிக்கொள்ளுங்கள். அல்லது வாழ முயற்சி செய்யுங்கள்...

Jun 9, 2020

படித்ததில் பிடித்தது


குழந்தைகளைப் பற்றி எங்களுக்கு சொல்லுங்கள்..?
என்று தன் மார்பில் ஒரு குழந்தையை அணைத்துக் கொண்டிருந்த பெண்னொருத்தி கேட்டாள் அவர் சொன்னார் உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல அவர்கள் வாழ்க்கை தமக்கென்று வேண்டிய குழந்தைகள் அவர்கள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள் உங்களிடமி்ருந்தல்ல அவர்கள் உங்களுடன் இருந்தாலும் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல உங்கள் அன்பை அவர்களுக்கு நீங்கள் தரலாம் உங்கள் எண்ணங்களையல்ல அவர்களுக்கென்று தனிச்சிந்தனைகள் உண்டு.
கலீல் ஜிப்ரான் "தீர்க்கதரிசி" புத்தகத்தில் இருந்து