Apr 15, 2020

தந்தையும் மகளும்

ஒரு தந்தையும் மகளும் ஆற்றின் பாலத்தை கடக்க முயல்கின்றனர்.
தந்தை சொல்கிறார்”
 என் கையை கெட்டியமாக பிடித்துக்கொள் மா “, ஆற்றில் தண்ணீர் நிறையப்போகிறது, பத்திரம் மா ” என்று.

உடனே, மகள் சொல்கிறாள் அப்படின்னா
 “நீங்க என் கைய புடிச்சிகிங்க பா”.
இரண்டுக்கும் என்ன மா வித்தியாசம் என்று தந்தை கேட்கிறார்.

நான் உங்கள் கையை பிடித்தால்,ஏதேனும் தவறு நடந்தால் கையை விட்டுப் பிரியவாய்ப்பிருக்கிறது. நீங்கள் பிடித்தால் எந்தகாரணத்திற்காகவும் என்கையை விடமாட்டீர்கள் பா என்றாள் மகள்.

No comments:

Post a Comment