May 17, 2020

படித்ததில் பிடித்தது



பிடித்தவர் என்பதற்காக பிழைகளை சுட்டிக்காட்ட தவறாதீர்கள்.
பிடிக்காதவர் என்பதற்காக நல்லவற்றை தவறாக பரப்பாதீர்கள்.
இனி நீங்கள் தேவை இல்லை என சொல்பவர்கள்
விலகுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது.
உங்களிடத்திலான அவர்களின் தேவைகள் முடிந்து விட்டது.
பேசுபவற்றை தவறாக புரிந்து கொள்பவரிடம் மௌனமாய் இருங்கள்.
தவறாக பேசுவதற்காகவே வாயைத் திறப்பவர்களிடம் விலகி இருங்கள்.
கோபப்படுவது உண்மையான அன்பு அதற்காக பிரிவது
அது விலகுவதற்கான முன் எற்பாடு..!
யாராவது உங்களை வெறுக்கிறார்கள் என தெரிந்தால் நீங்களாகவே விலகிவிடுங்கள்.
அவர்கள் அதை வார்த்தைகளால் வெளிப்படுத்தும்போது
உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது.
பிடிக்கவில்லை என்றால் பொய்யாக நேசிக்காதீர்கள்.
அன்புக்கு ஏங்கிக் கொண்டிருப்பவர்களால்
ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாது.
விலகியிருக்க விரும்புபவரிடம் அன்பை திணிக்காதீர்கள்.
தற்சமயம் அதை அவர் வேறொருவரிடம் எதிர்பார்க்கிறார்.
யார் வெறுத்தாலோ விலகிப்போனாலோ - நீங்கள் நொந்து போகாதீர்கள்.
"கிளை உடைந்தாலோ மரம் சாய்ந்தாலோ - சிறு குருவியே சிறகை நம்பி பறக்கிறது"

No comments:

Post a Comment