வாழ்க்கையில் நாம் உயர்வதும் தாழ்வதும் நாம் மேற்கொள்ளும் அணுகுமுறை ஒன்றிலே அடங்கியிருக்கிறது.

May 22, 2020

Stay_Home_Stay_Safe

 ஊரையே lockdown பண்ணியது இந்த corona
' வீட்டுல வேலை இருந்தாலும் ஒண்ணுமே ஓடவில்லை. இந்த பின்னேரம் இதமாக பக்கோடா செய்து சாப்பிட்டால் அதுவும் degree coffee யுடன்...
நினைக்கும் போதே மனம் பரவச நிலையில்.

  மனமெங்கும் அல்பத்தனமாய் " பக்கோடா with coffee "  stimulate பண்ணிக் கொண்டிருக்க....

உடனடியாக
மனைவியைக் கொஞ்சிக் கூப்பிட்டுக் கொண்டே என் அபிலாஷையை வெளியிட்டேன்...

வந்ததே கோபம் அவளுக்கு......
" என்ன நினைச்சுட்டுருக்கீங்க...
கார்த்தாலேர்ந்து மனுஷி படற பாடு என்ன தெரியுமா? சொகுசா வந்து பக்கோடாவாம் coffeeயாம்...அதல்லாம்
ஒரு மண்ணும் முடியாது... சொல்லிட்டேன்..."

எதிர்பார்த்து ஏமாந்து போனதால் வெறுப்பானேன்....

சட்டென்று தாய் ஞாபகம் வந்தது.
ஏமாந்து போனபின் தாய் ஞாபகம் வந்தது ஒரு குற்ற உணர்ச்சியை
ஏற்படுத்தியது...

தாய், தந்தை பக்கத்துத் தெருவில் தான்.

தாயே பார்த்து விட்டு வரலாம் என்று சென்றால் அங்கே தந்தையின் கெஞ்சல் குரல் கேட்டது.

தந்தைக்கும் "வடை " ரொம்ப பிடிக்கும். அதைத்தான்
தாயிடம் செய்து தரச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தார்.

நச்சரிப்பு என்பது தாயின்  பாஷை. உண்மையில் அவர் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

எனக்கு என் மனைவியிடம் என்ன திட்டு விழுந்ததோ
" Same blood " தந்தையின் காதுகளில்...

கூடுதலாக வயதையும் சுட்டிக் காட்டி வாயை அடக்கச் சொல்லி semma dose....

நான் உள்ளே நுழைந்ததும் இருவரின் முகங்களும் மலர்ச்சியில்....
" என்னப்பா நீ மட்டும் வந்துருக்கே.....பேரனை பார்த்து நாளாச்சுடா... ஏன் கூட்டிண்டுவரல்ல ?

" இல்லம்மா, அவன் தூக்கம் " என்று சமாளித்தேன்.

அது பொய்யென்று தாய்க்கு தெரிந்தாலும் சொன்னது நானென்பதால் கண்டுகொள்ளவில்லை இந்த நேரம் நான் என்ன விரும்பி சாப்பிடுவேன் என்பதெல்லாம் தாய்க்கு தெரியாத விடையமா!!

" சரி, சரி உட்காந்து பேசிட்டுரு..
இப்ப கொஞ்ச நேரத்தில உனக்குப் பிடித்த பக்கோடா செஞ்சு தரேன்..." என்று அன்பாக சொன்ன தாய்

தந்தை முகத்தில் சின்னதாய் ஏமாற்றம் தெரிந்தாலும் எனக்காக காட்டிக் கொள்ளாமல் வெறுமையாய் சிரித்தார். பாவமாயிருந்தது..‌..

" இல்லம்மா, எனக்கு பக்கோடா வேண்டாம்,
உன் கைப் பக்குவத்தில்
இன்னிக்கு " வடை " சாப்டணும் போல இருக்கு..."

" அவ்ளோதானே, இதோ பத்தே நிமிஷம்"
தந்தையின் முகத்தில் என்னைப்பார்த்து சிரிப்பதில் ஒரு சின்ன நன்றி உணர்சசி எனக்குத் தென் பட்டது.

என்னுடன் சேர்ந்து வடையே ஆசை யாக
சாப்பிட்ட தந்தை, நான் அடைந்த பக்கோடா பரவசத்தை " வடை பரவசமாக அனுபவித்தார்...

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து வீட்டுக்குத் திரும்பினேன்.....

!!!!!!
மனைவி என் மகனுக்கு மிகவும் பிடித்த வடையை ஆவலாய் செய்து கொண்டிருந்தாள்.....

எனக்காக செய்ய முடியாத பக்கோடா மகனுக்கு வாடை யாக
செய்யப் பட்டுக்கொண்டிருந்தது.

நீதி.  ;
நம் நாட்டுப் பெண்கள்
மிகச் சிறந்த " தாய்மார்கள் "

மனைவிகளல்ல !

மிகச் சிறந்த சகோதரிகள்.......

மனைவிகளல்ல.......

விதிவிலக்குகள் இருக்கலாம்..

No comments:

Post a Comment