Labels
- படிப்பினை குறிப்புக்கள் (66)
- வரலாறு (31)
- சிந்தனை துளிகள் (27)
- விந்தை உலகம் (17)
- பொதுஅறிவு (16)
- மருத்துவம் (13)
- தொழில்நுட்பம் (10)
- இஸ்லாம் (9)
- மின் புத்தகங்கள் (7)
- தமிழ் ஆடியோ புத்தகங்கள் (3)
Nov 4, 2015
பொதுஅறிவு குறிப்புகள்
*1664ல் ஸ்வீடனில் தயாரிக்கப்பட்ட 10 டாலர் நாணயங்கள் ஒவ்வொன்றும் 19.5 கிலோ எடை இருந்தது!
*இதுவரை ஏலத்தில் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட தொப்பி நெப்போலியன் அணிந்ததுதான். 1970ல் 17 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்!
*சாக்லெட் சாப்பிடுகையில் மகிழ்ச்சி ஏற்படுவதற்குக் காரணம் அதிலுள்ள phenylethylamine எனும் ஹார்மோன். இதே ஹார்மோன்தான் காதல் வயப்படுகையிலும் சுரக்கிறது!
*தும்மல் ஏற்படும் அந்த நொடிப்பொழுதில், இதயம் உள்பட உடலின் அனைத்துப் பகுதிகளும் இயக்கத்தை நிறுத்தி விடுகின்றன.
*முத்தமிடும்போது, மூளையில் ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இதுவே இருவருக்கான பந்தத்தை உறுதிப்படுத்தும் உணர்வை அளிக்கிறது.
*இறந்த பிறகும் தலைமுடியும் நகங்களும் வளரும் என்பது மாயையே. உடல் உலர்வதால்தான் இப்படித் தோன்றுகிறது.
*மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய வெதுவெதுப்பான நிறங்களுக்குப் பசி தூண்டும் தன்மை உண்டு. அதனால்தான் பல ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் இந்த நிறங்கள் ஜொலிக்கின்றன.
*துணிகளில் படிந்துள்ள ரத்தக்கறையை கோக கோலா கொண்டு நீக்க முடியும்!
*1933ல் ‘மண்டா ரே’ எனும் அரிய வகை மீன் பிடிக்கப்பட்டது. அதன் எடையோ 2,500 கிலோவுக்கும் அதிகம். அகலமோ 20 அடி!
*நன்றாக உறங்க இயலாத சூழலிலும், நிறைவாகத் தூங்கியதாக நினைத்துக்கொண்டாலே, புத்துணர்ச்சியைப் பெற முடியும் என ஓர் ஆய்வு நிரூபித்துள்ளது.
*அதிக பயணம் செய்கிறவர்களுக்கு புத்திக்கூர்மையும் படைப்பாற்றலும் அதிகரித்து, திறந்த மனதுடன் கூடிய செயல்பாடு அமையும் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
*மழை பெய்தவுடன் எழும் மணத்துக்குக் காரணம் ஆக்டினோசைட்ஸ் என்ற பாக்டீரியாவே!
*அடிக்கடி சூயிங் கம் மெல்பவர்களுக்கு வாயுக்கோளாறுகள் அதிகம் ஏற்படும்.
*பிரய்ரி இன நாய்கள் முத்தம் இடுவதன் மூலமாகவே, ஒன்றையொன்று வாழ்த்திக் கொள்கின்றன.
*8 மாத காலத்துக்கு சில மீன்களை தரையில் நகரப் பழக்கிய பிறகு, அவை தரைக்கேற்ற தகவமைப்பைப் பெற்றுவிட்டன!
*நிலநடுக்கோட்டுப் பகுதியில் பருவ கால மாற்றமே கிடையாது. ஆண்டு முழுவதும் ஒரே வெப்பம் வெப்பம் வெப்பமே!
*சூரியனைச் சுற்றி வரும் பூமியின் வேகம் நிலையாக இருப்பதில்லை. அதன் சுற்றுப்பாதையின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வேகம்!
*சூரிய மண்டலத்தின் மிகச் சிறிய நிலவு, செவ்வாயிலுள்ள டைமோஸ். இதன் குறுக்களவு 13 கிலோமீட்டரை விடக் குறைவுதான். சில மணி நேரங்களில் நடந்தே கடந்து விடலாம்!
*கருங்கடல், மஞ்சள் கடல், செங்கடல், வெண் கடல் என் பெயர்களில் இருந்தாலும், இவை அனைத்தும் மற்ற கடல்களைப் போல நீலம் அல்லது நீலப்பச்சையாகவே காட்சியளிக்கின்றன!
*ஒரே ஒரு சூரியப்புள்ளி (சன்ஸ்பாட்) மட்டுமே 3 லட்சம் கிலோமீட்டர் நீளம் வரை இருக்கும்!
*உலகில் மிக அதிகமாகப் புழக்கத்தில் உள்ள பெயர் ‘மொஹமத்’.
*இதுவரை எடுக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய ஆம்பர் ஜெம் ஸ்டோனின் எடை 15 கிலோ!
*ஐந்தரை முதல் மூன்றரை கோடி ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தைய 379 திமிங்கலப் படிமங்கள் எகிப்தின் மேற்கு பாலைவனப் பகுதி யில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
*ஹெர்குலிஸ் பீட்டில் என்ற வண்டுதான் பூச்சிகளில் மிக நீளமானது. 170 மி.மீ. நீளம். அதன் எடையைப் போல 850 மடங்கு சுமையைத் தாங்கக் கூடியது. இந்த அளவில், பூமியின் மிக வலிமையான உயிரினம் இதுவே!
*2011ல், பச்சை லேசர் ஒளியை உமிழக்கூடிய வகையிலான மனித சிறுநீரக செல், ஜெல்லி மீன் டிஎன்ஏவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.
*கடல் உப்பை விடவும் சாதாரண உப்பே சிறந்தது. எந்த உப்பாக இருந்தாலும் அதிகபட்சம் தினம் 6 கிராம் மட்டுமே நல்லது.
*உலகில் மிக அதிகமாகப் புழக்கத்தில் உள்ள பெயர் ‘மொஹமத்’.
*இதுவரை எடுக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய ஆம்பர் ஜெம் ஸ்டோனின் எடை 15 கிலோ!
*ஐந்தரை முதல் மூன்றரை கோடி ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தைய 379 திமிங்கலப் படிமங்கள் எகிப்தின் மேற்கு பாலைவனப் பகுதி யில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
*ஹெர்குலிஸ் பீட்டில் என்ற வண்டுதான் பூச்சிகளில் மிக நீளமானது. 170 மி.மீ. நீளம். அதன் எடையைப் போல 850 மடங்கு சுமையைத் தாங்கக் கூடியது. இந்த அளவில், பூமியின் மிக வலிமையான உயிரினம் இதுவே!
*2011ல், பச்சை லேசர் ஒளியை உமிழக்கூடிய வகையிலான மனித சிறுநீரக செல், ஜெல்லி மீன் டிஎன்ஏவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.
*கடல் உப்பை விடவும் சாதாரண உப்பே சிறந்தது. எந்த உப்பாக இருந்தாலும் அதிகபட்சம் தினம் 6 கிராம் மட்டுமே நல்லது.
*பெண்களை விட ஆண்கள் சற்று உயரமாக இருப்பது பரிணாம வளர்ச்சிப்படியே ஏற்பட்டிருக்கிறது.
*ஒத்த உரு கொண்ட இரட்டையர்களுக்கு ஒன்று போலவே ஜீனோம் அமைந்திருந்தாலும், அவர்கள் 100 சதவீதம் அச்சு அசலாக இல்லாமலும் இருக்கலாம்.
*சுவையை மிகத்துல்லியமாக அறிவதில் நாக்கை விட மூக்கின் பங்கே அதிகம்.
*நமது ரத்தச் சிவப்பு அணுக்கள் தினமும் ஏறத்தாழ 15 கிலோமீட்டர் தூரம் பயணமாகின்றன.
*நீர்யானைகளின் உடலில் சுரக்கும் ரத்தம் போன்ற செம்பழுப்புத் திரவம், அதன் தோலுக்கு ஈரப்பதம் அளித்து, நீர் உட்புகாமல் தடுக்கவும் செய்வதோடு, ஆன்டிபயாடிக் ஆகவும் செயல்படுகிறது.
*அதிகமாகச் சாப்பிடும் பழக்கத்தை, ‘அசிடேட்’ பயன்படுத்தி குறைக்கலாம் என சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதனால் விரைவிலேயே வரப்போகிறது அதிகம் சாப்பிடுகிறவர்களுக்கான மாத்திரை!
*ஆப்டிகல் லென்ஸ் ஒளியைப் பிரதிபலிப்பது போலவே, மின்காந்த அலைகளைப் பயன்படுத்தும் முறையை சவுத் ஈஸ்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது செயல்பாட்டுக்கு வரும்போது, மொட்டை மாடிகளில் காணப்படும் அத்தனை ஆன்டெனாக்களின் அளவும் வடிவமும் மாறிவிடும்!
*சஹாரா பாலைவனம் ஒருமுறை 136 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை எட்டியிருக்கிறது
*29.6 காரட் எடை கொண்ட மிக அரிதான நீல வைரம், சமீபத்தில் தென் ஆப்ரிக்காவின் குல்லினன் சுரங்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு காரட் என்பது 0.2 கிராம்.
*சில சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஒரே வினாடியில் 3.6 கோடி செயல்களைச் செய்யும் திறன் கொண்டவை!
*ஜப்பானிலுள்ள ஒரு சுரங்கப்பாதையில் சாலை, ரயில் என இருவகை போக்குவரத்துமே உண்டு. மொத்த நீளம் 54 கிலோ மீட்டர்!
*சுவிட்சர்லாந்தில் பாலாடைக்கட்டிகள் துளைகளுடன் கூடிய சக்கரங்கள் போல தயாரிக்கப்படுகின்றன. இந்த சுவிஸ் சீஸ் 100 கிலோ எடையுள்ள சக்கரங்களாகவே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
*கடிகாரங்களில் உள்ள ஸ்க்ரூக்கள் மிகமிகச் சிறியவை. நம் உள்ளங்கையிலேயே 30 ஆயிரம் ஸ்க்ரூக்களை ஏந்திவிடலாம்!
*4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பீர் பானம் தயாரிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள், பாபிலோனின் பண்டைய கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
*ஒரு மியூசியத்தில் ‘கோலியாத் பீட்டில்’ என்ற வண்டுக்கு வாழைப்பழம் அளிக்கப்பட்டது. தன்னுடைய கொம்புகளாலேயே தோலை உரித்துவிட்டு, பழத்தைத் தின்று முடித்தது அவ்வண்டு!
*பாராசூட் வீரர்கள் பூமியில் குதிக்கும் அதிகபட்ச உயரம் 30.5 கிலோமீட்டர்!
*உலகின் முதல் நீராவி எஞ்சின் 1804ல் இயங்கியபோது, அதன் சராசரி வேகம் மணிக்கு 3.9 கிலோமீட்டர். இப்போதைய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அதிவேக ரயில்களின் வேகத்தோடு இதை ஒப்பிட்டுப் பாருங்கள்!
*முக்கால் லிட்டர் ஷாம்பெய்ன் பாட்டிலில் உள்ள நீர்க்குமிழிகளின் எண்ணிக்கை சுமார் 10 கோடி. ஆமாம்... அதைக் குடிக்காமல் இந்தக் கணக்கீட்டைச் செய்திருக்கிறார் ஒரு ‘நிபுணர்’!
*பெரும்பாலான மால்ட் சத்து பானங்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமாக சர்க்கரையே உள்ளது.*ஒவ்வொரு நாளும் சுமார் 7.5 கோடி எரிகற்கள் நமது வளிமண்டலத்துக்குள் நுழைகின்றன. ஆனால், ஒன்றோ, இரண்டோ மட்டும்தான் தரையை அடைகின்றன.
*கேவியர் எனும் முட்டைகள், உலகின் காஸ்ட்லி உணவுகளில் குறிப்பிடத்தக்கது. ஜெயின்ட் ஸ்டர்ஜியன் மீன் வகையானது, வாழ்நாளில் 15 ஆயிரம் ரூபாய்க்கும் அதிக கேவியர் முட்டைகளை இடும்.
*நம்பர் பூட்டுகள் ஒவ்வொன்றுக்கும், 10 லட்சத்துக்கும் அதிக காம்பினேஷன்கள் உண்டு.
*உலகின் மிகப்பெரிய ஒற்றைச் சக்கர சைக்கிளான ‘யுனி சைக்கிள்’, 32 அடி உயரம் கொண்டது.
*9 ஆயிரம் கிலோவுக்கும் அதிக எடை கொண்ட ஒற்றை மார்பிள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. இதுவே இதுவரை கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய மார்பிள்.
*உலகின் பழமையான உயிரியல் பூங்கா 1752ல், ஆஸ்திரியாவின் வியன்னாவில் தொடங்கப்பட்டு, இன்றும் செயல்படுகிறது.
*கடல் முள்ளெலிகள் (sea hedgehogs) ஒரு அடி நீளத்துக்கும் குறைவான அளவே இருந்தாலும், 20 அடி நீளமுள்ள சுறாவையும் கொல்லும் திறன் மிக்கவை.
*மத்திய காலகட்டத்தின் பிற்பகுதியில் கண் கண்ணாடிகள் ஆபரணமாகவே கருதப்பட்டன. கூடையில் சுமந்து தெருக்களில் விற்பனை செய்வதும் நடந்தது.
*1960ல் ஏற்பட்ட ஒரே ஒரு நிலநடுக்கத்தால் வெகுதொலைவில் உள்ள இரு நாடுகளில் கூட (ஜப்பான், சிலி), சுனாமி உருவானது.
*Tahltan Bear Dog... இதுதான் உலகில் மிகமிகக் குறைவான எண்ணிக்கையில் காணப்பட்ட நாய் இனம். சில ஆண்டுகளுக்கு முன் மூன்றே மூன்று என நாய்த்தொகை கொண்ட இவ்வினம் இப்போது இருப்பது ஐயமே!
*பனிப்பாறைகள் இதுவரை அதிகபட்சமாக நீர்மட்டத்திலிருந்து 550 அடி உயரம் வரை உருவாகியுள்ளது. கடல் அடிமட்டத்திலிருந்து கணக்கிட்டாலோ, 4,950 அடி உயரம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment