Nov 4, 2015

பொதுஅறிவு துளிகள்



* பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை, சுமார் 3400 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றது.

*
வானிலை இயல் _Meteorology) என்பது வளிமண்டலமும் அதன் மழை தட்பவெப்பம் காற்றோட்டம் தொடர்பான பண்புகள் பற்றிய அறிவியல்

*
உயர்ந்த ஒலி கவரும் பொருள் இழைக்கண்ணாடி

*
குளிர் காலத்தில் குயில் கூவுவது இல்லை
*தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)

.*முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.

*தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு

*பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.

*சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

*.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.

*காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.

*அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.

*கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.

*உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.

*உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.

*திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.

*உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.

*உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.

*உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.

* இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.

*உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.

*முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.

*முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.

*ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.

*உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).

*உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).

*விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.

*உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.

*பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.

*ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.

*கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.

*நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.

*மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்


* சிங்கப்பூரின் முந்தைய பெயர், டெமாஸெக்.

*
பிரபல இசைமேதையான பீத்தோவன், ஜெர்மனியில் உள்ள `பான்' நகரில் பிறந்தார்.

* `
சீனக்குடியரசின் தந்தை' என்று போற்றப்படுபவர், சன்யாட்சன்.

*
ஒருசெல் உயிரியான அமீபாவின் உடல், புரோட்டோபிளாசத்தால் ஆனது.

* `
வைட்டமின் '-ன் வேதியியல் பெயர் ரெட்டினால்.

*
சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர் நிக்கஸ்.

*
சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.

* `
உயிரியல் கோட்பாட்டின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், சார்லஸ் டார்வின்.

 *
முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன்.

* பாலில் `லாக்டிக் அமிலம்' உள்ளது.

*
இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது.

*
பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர், லிமா.

* `
பிரமிடு கோவில் நாடு' என்று அழைக்கப்படுவது, பர்மா.

* சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ தான், உலகிலேயே மிகப்பெரிய பூவாகும்.

*
ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 11/2 கிலோ எடையுடைய மூளை உள்ளது.

*
கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப்பொடியைக் கட்டியாக்கி சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது.

* நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு, சுமார் 17 நாட்கள் வரை ஆகும்.

*
ஆக்வா ரெஜியா என்ற திரவத்தில் கரைத்தால், தங்கம் கரைந்து விடும்.

*
மாலத்தீவில் விளைகிற லொடாய்சியா என்ற இரட்டைப் பனங்கொட்டை தான், உலகிலேயே மிகப்பெரிய விதையாகும்.

*
நம்முடைய தலைமுடியில் இருந்து அமினோ அமிலம் தயாரிக்கப்படுகிறது. இது மருந்து மற்றும் ரசாயனப் பொருட்கள் தயாரிப்பில் உதவுகிறது.

*
ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்த வகை, அவருடைய ஆயுள் முழுவதும் மாறாது.
* ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம். இவை குரங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும்.

*
நெருப்புக்கோழி, தனது உணவைச் செரிக்க வைப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல்.

*
நல்ல நிலையில் உள்ள மனிதரின் கண்கள், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை அறியக்கூடியது.

*
பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவர், கஸ்டவ் ஈபிள். இவர்தான் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை வடிவமைத்தவர்.

*
ஒரு மனிதனின் சராசரி உயரம், அவனுடைய தலையின் உயரத்தைப்போல் சுமார் ஏழரை மடங்கு இருக்கும்.

*
தந்தி அனுப்புவதற்கான சங்கேதக்குறியை, 1837-ம் ஆண்டு சாமுவேல் மோர்ஸ் என்ற அமெரிக்க அறிஞர் கண்டுபிடித்தார்.

*
குழந்தை பிறந்த 15 நாட்களுக்குப் பிறகே கண்ணீர்ச் சுரப்பி வளர்கிறது.

*
நெருப்புக்கோழி மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.

*
பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் 294 படிக்கட்டுகள் உள்ளன.

*
அன்னாசிப் பழத்தில் விதை கிடையாது.

*
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி, அன்னை தெரசா.
*
கலர் டி.வி.யை முதன்முதலில் உலகத்திற்கு அறிமுகம் செய்த நாடு, பிரான்சு.
*
பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் அறிவியல் துறைக்கு ஆர்னித்தாலஜி என்று பெயர்.

*
மழையின் அளவைக் கண்டறிய உதவும் கருவி, ரெயின்கேஜ்.

*
விலங்குகளில் அறிவுள்ளதாக கருதப்படுவது, டால்பின்.

*
ராணித்தேனீயின் ஆயுட்காலம், 3 முதல் 4 ஆண்டுகள்.

*
கடற்குதிரை மீன், ஒரே நேரத்தில் தனது கண்களால் இரண்டு வெவ்வேறு பொருட்களைப் பார்க்கும் தன்மை கொண்டது.

*
விதையில்லாமல் முளைக்கும் தாவரம் - தர்ப்பைப்புல்.

*
உலகின் வெண்தங்கம் - பருத்தி.

*
ஆரிய இனத்தவர்களின் தாயகம், மத்திய ஆசியா.

*
வங்கப்பிரிவினை ரத்து செய்யப்பட்ட ஆண்டு, 1911.


* சைக்கிளைக் கண்டுபிடித்தவர், மாக்மில்லன்.

*
திரவ நிலையில் உள்ள உலோகம், பாதரசம்.

* `
தாவர வகைப்பாட்டியலின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், லின்னேயஸ்.

*
ரத்தச் சிவப்பணுக்களின் ஆயுட்காலம், 120 நாட்கள்.

*
நீண்ட தொலைவு பறக்கும் ஆற்றலும், நீண்ட நேரம் வானில் வட்டமிடும் திறனும் கொண்ட பறவை, புறா.

*
உயிரினங்களில் நெடுநேரம் மூச்சை அடக்கும் சக்தி பெற்றது, முதலை.

*
பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது, மரங்கொத்தி.

*
தவளை, தன்னுடைய கண்கள் மூலம் ஒலியைக் கேட்கிறது.

* `
விவசாயிகளின் எதிரி' என்று அழைக்கப்படுவது, எலி.* பூனையின் விலங்கியல் பெயர், பெலிஸ்கேடால்.

*
பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது, எறும்பு.

*
நேருவுக்கு 84 பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

* `
ஸ்காலிப்' என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன.

*
ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம், உஜ்ஜைனி.

*
வாயுக்களின் அழுத்தத்தை அளவிடும் கருவி, மானோ மீட்டர்.

*
உலகத் தொழிலாளர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு, 1919.

*
பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம், சூரியன்.

*
பால், முட்டை, கேரட், வெண்ணை, மீன், பப்பாளி ஆகியவற்றில் `வைட்டமின் ' அதிகமாக உள்ளது.

* `
உயிரின் ஆறு' என அழைக்கப்படுவது, ரத்தம்.

*
ஒரு உணவு நிலையில் இருந்து மற்றொரு உணவு நிலைக்கு சக்தி கடத்தப்படுவதே `உணவுச்சங்கிலி' எனப்படும்.

*
பூனையின் ஆயுட்காலம், 12 வருடங்கள்.

*
ராக்கெட்டுகளில் எரிபொருளாகப் பயன்படும் சேர்மம், ஹைட்ரஜன்.



No comments:

Post a Comment