வாழ்க்கையில் நாம் உயர்வதும் தாழ்வதும் நாம் மேற்கொள்ளும் அணுகுமுறை ஒன்றிலே அடங்கியிருக்கிறது.

Oct 25, 2015

சிறந்த 10 சமூக வலைத்தளங்கள்

மனிதன் தன்னுடைய வாழ்நாளை இனிமையாகவே கழிக்க விரும்புகிறான். அவன் தன்னுடைய அன்றாட வாழ்க்கையில் பல மனிதர்களை சந்தித்து தனது உணர்வுகளை வெளிப்படுத்திக்கொண்டே வருகிறான். நவீன கால மனிதர்களும் இதனையே கடைப்பிடிக்க விரும்புகின்றனர்.
இயந்திரங்களோடு பழக்கப்பட்டு வருகின்ற மனிதன் தனது அன்றாட வாழ்க்கையில் பல வலையமைப்புக்களில் தனது நேரங்களை செலவழிக்கின்றான். அவை கல்வி, கலை, கலாசாரம் என அடுக்கிக்கொண்டே செல்லலாம். இருந்தபோதிலும் தான் ஒரு குறுகிய வட்டத்தினுள்ளே இருக்கின்ற உணர்வையே அவன் உணர்கின்றான். வலையமைப்புக்கள் ஒரு திசையில் மாத்திரமே பேசிக் கொண்டிருந்த காலம் அது.
மனிதனானவன் ஒரு சமூக பிராணி என்ற வகையில் மற்ற மனிதர்களுடன் தொடர்பில்லாமல் அவனால் வாழ முடியாது.
இவற்றை ஓர் உணர்வு ரீதியிலான வலியாக உணர்ந்த மனிதன் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழும் மனிதர்களோடு மாத்திரமல்லாமல், ஆபிரிக்க பழங்குடி இன மக்களுடனும் தங்களது உணர்வுகளை இரு திசையிலும் உணரச் செய்வதற்காக சிறப்பான ஓர் வலையமைப்பை உருவாக்க வேண்டிய தேவையை உணர்ந்தான். அவையே இன்று பல பரிமாணங்களில் தோன்றி நிற்கும் சமூக வலைப்பின்னல்கள் (Social Network) ஆகும்.
கடல் கடந்து, மொழி கடந்து மக்களுடன் வலையமைப்புக்களை உருவாக்குவதற்கான உந்துதல், இணையம் எனும் நுட்பத்தின் மூலம் கிடைத்துவிட்டது. இந்த இடத்தில்தான் மக்களின் தேவைகள் சமூக வலையமைப்பு தளங்களாக உருவாக காரணமாயிற்று. அது மாத்திரமல்லாமல் இது இணைய வணிகத்திலும் ஒரு வெற்றியை பெற்றுக்கொண்டது.
இதனடிப்படையில் இன்று சமூக வலைப்பின்னல்கள் இளைஞர்களோடு மாத்திரம் நின்று விடாமல் முதியோர்களையும் இணைத்திருப்பது புதியதோர் யுகத்தையே வெளிக்காட்டுகின்றது. சமூக வலைப்பின்னல்கள் தனிப்பட்ட விபரம், நட்புக்கான வேண்டுகோள் (Friend Request), நண்பர் வலையமைப்பு(Friend Network), கோவைகளைப் பகிர்வது (File Sharing), நடப்பு விவகாரங்களை பகிர்ந்து கொள்வது (Status Update)என பல்வேறுபட்ட விடயங்களை அவர்களை அறியாமலேயே பகிர்ந்து கொள்ளும் ஒரு பின்னல்தான் சமூகவலைப் பின்னலாகும்.
இருந்த போதிலும் இச்சமூக வலையமைப்புக்களின் தொடர்புகளை ஆரோக்கியமான முறையில் பேணுவது பாவனையாளரின் பொறுப்பு ஆகும். இல்லையெனில் பாதிப்பு அவரையே சாரும்.
Facebook, Twitter என மிகப் பிரபல்யமான வலைத்தளங்களையே சிலருக்குத் தெரியலாம். இருந்த போதிலும் பல வலைப்பின்னல்கள் களமிறங்கி இருப்பது, அது மக்கள் அதன் மீது கொண்ட வசீகரத் தன்மையே காட்டுகின்றது. இன்று நாம் முதன் நிலையில் இருக்கும் 10 சமூக வலைப்பின்னல்களைப் பார்ப்போம்.
1. பேஸ்புக் (Face book)
சமூக வலைப்பின்னல்களில் எது முதலிடம் எனக் கேட்டால் சிறு குழந்தையும் பேஸ்புக் என்றே கூறுமளவுக்கு அது மிகப் பிரபல்யமாயிற்று. தமிழில் முக நூல் என்று அழைக்கப்படும் இது 2004 ஆம் ஆண்டு ஹார்வட் பல்கலைக்கழக மாணவனான மார்க் சக்கர்பேர்க் என்பவரினால் உருவாக்கப்பட்டு சுமார் 800 மில்லியனுக்கும் மேற்பட்ட பாவனையாளர்களைக் கொண்டிருக்கும் முதற்தர சமூக வலைத்தளமாகும்.
13 வயதிற்கு மேற்பட்ட எவரும் இதனை உபயோகிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது. இருந்த போதிலும் 7.5 மில்லியன் சிறுவர்களும் (13 வயதிற்கு கீழ்பட்ட) இதில் சட்ட விரோதமாக பாவனை செய்வது அதன் மீது கொண்டிருக்கும் ஆர்வத்தையே காட்டுகின்றது. 2008 ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி 100 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டிருந்த பேஸ்புக் தளமானது 2011 செப்டம்பர் 22 இல் 800 மில்லியன் பாவனையாளர்களுடன் செயற்பட்டு வருவது அதன் தனித்தன்மையைக் காட்டுகின்றது.
02. Twitter - டுவிட்டர்
டுவிட்டர் சமூக வலைப்பின்னலானது 2006 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஜெக்டோர்சி (Jack Dorsey) என்பவரால் அவ்வாண்டு ஜுலை மாதம் உருவாக்கப்பட்டது. இது ஒரு மைக்ரோ வலைப்பதிவிடல் சேவையாகும்.
இது தனது பயனாளர்களுக்கு ட்வீட்ஸ் எனப்படும் செய்திகளை அனுப்பும் மற்றும் பெறும் வசதிகளை அளிக்கிறது 140 எழுத்து ருக்கள் வரையிலான வெளியீடுகளை உரிமை யாளரின் சுயவிபரப் பக்கத்தில் காண்பிக்கும் மற்றும் பின் தொடர்பவர்கள் எனப்படும் உரிமையாளரைத் தொடர்பவர்களுக்கு அனுப் பும் உரைசார்ந்த இடுகைகள் ஆகும்.
அலெக் சாவின் விலைப்போக்குவரத்து நெரிசல் ஆய்வின்படி மிகவும் பிரபல்யமான உலகளாவிய 50 வலைத் தளங்கள் பட்டியலின் தரவரிசையில் டுவிட்டரும் ஒன்றாகக் காணப்படுகிறது. மேலும் 200 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டி ருக்கும் டுவிட்டர் இணையத்தளத்தில் பல Vயிஜிகளும் சினிமா நட்சத்திரங் களும் காணப்படுகின்றனர்.
03. Linked in லிங்க்ட்கின்
சமூக வலையமைப்புக்களில் லிங்க்ட்இன் சற்று வித்தியாசமானதாகும். ஏனைய வலைய மைப்புக்கள் நட்பு, கலாட்டா என சுவாரஸ்ய மானதாய் இருக்க இந்த தளம் கொஞ்சம் வியாபாரத் தேவைகளை முன்னிறுத்தி இயங்கு கின்றது.
இது 2003 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் ரெய்ட் ஹொப் மேன் (Reid Hoffman) மற்றும் அவரது நண்பர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. இத்தளத்தின் வருமானம் 4.5 மில்லியன் அமெரிக்க டொலராகும். இதில் 1000 இற்கு மேற்பட்ட தொழிலாளர்களும் வேலை செய்கின்றனர். இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 120 மில்லியன் பயனாளர்கள் காணப்படுகின்றனர். இதில் இணைகின்ற நபர்கள் தங்களுக்கு தெரிந்த நம்பிக்கைக்குரிய வேலையில் கெட்டிக்காரர்களை இணைத்துக் கொள்கிறார்கள்.
படிப்பு, அனுபவம், தகுதி போன்ற விடயங்கள் இங்கே கவனிக்கப்படுகின்றன. இதிலுள்ள பயன்பாட்டாளர்கள் பிரபல நிறுவனங்களுடனும் இணைய இணைப்பை உருவாக்கிக் கொள்ள முடியும். இதனால் அந்த நிறுவனங்களில் ஆட்கள் தேவைப்படும் பொழுதெல் லாம் தகவல் நமது தளத்திலும் காண்பிக்கப்படுகின்றது.
+&திரிக்காவில் மிகப் பிரபல்யமாக இருக்கும் இந்த வலை அமைப்பிலுள்ள திறமைசாலிகளுக்கு ஏகப்பட்ட வேலை வாய்ப்புக்கள் தானாகவே வந்து சேர்கின்றன. சுமார் 20 மில்லியன் லாபக் கணக்குடனும் 75 மில்லியன் உறுப்பினர்களுடனும் வலுவாக்கப் பயணிக்கிறது. இதில் இணைய www.Linked in.com என்ற தளம் செல்லவும்.
04. My Space  மைஸ்பேஸ்
மைஸ்பேஸ் சமூக வலைத்தளமானது 2003 இல் உருவாக்கப்பட்டதாகும். 2003 இல் டொம் அன்டர் சனால் (Tom anderson) உருவாக்கப் பட்ட இந்நிறுவனம் ஏப்ரல் 2008 வரை அமெரிக்காவின் மிகப்பிரபலமான இணைய வழி சமூக சேவை வலைத்தளமாக இருந்தது.
இந் நிறுவனத்தின் பயனாளர் களால் புதிய நட்புறவு வளர்க்கப்பட்டு இன்று பல இசைக்கலைஞர்களும் மைஸ்பேசில் வலைத்தளங்களை படைத்து அங்கே தனது பாடல்களை பதிவேற்றுகின்றனர். ஜூலை 2005 இல் நியுஸ் கோப்ரேசனின் துணை நிறுவனம் போக்ஸ் மைஸ்பேஸை 580 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுத்து வாங்கியுள்ளது. இதில் 80 மில்லியன்களுக்கு மேற்பட்ட பாவனையாளர்கள் காணப்படுகின்றனர். இதில் இணைய www.Myspace.com செல்லவும்.
05. Ning
இதுவும் face book. Twiter சமூக வலைத்தள இணையமேயாகும். 60 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டிருக்கிறது.
06. Google +
கூகுள் நிறுவனம் தயாரித்து வழங்கும் சமூக வலையமைப்பு தளம் இதுவாகும். பிaணீலீ book இற்கு இணையாக நிறுவப்பட்ட தளம் என்று கூறப்படுகின்ற போதிலும் இதனால் அதற்கு இணையாக வர முடியாதிருப்பது துரதிஷ்டமே.
2011 ஜுன் 28 இல் உருவாக்கப்பட்ட இது வணிக நோக்கம் கொண்டதாகவும் காணப்படு கின்றது. இதன் மூலம் நாம் நமது கருத்துக்கள், புகைப்படங்கள், காணொளிகள் இணையத்தள உரலிகள் ஆகியவற்றை நமது வட்டத்தில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். அரட்டை மற்றும் காணொளி அரட்டை ஆகிய வசதிகளும் இதில் காணப்படுகிறது +1 பொத்தான் கூகுள் + இன் சிறப்பம்சமாகும்.
இதன் பிரத்தியேக வசதிகளான பிகாசா அல்பத்தினை இணைத் திருப்பதாகும். மேலும் ஜியோ என்ற புகைப்படம் எடுக்கப்பட்ட இடத்தி னைக் குறிக்கும் வசதிகள் போன்ற ஏராளமான வசதிகள் சிறப்பாக உள்ளன. இதன் அமைப்பு மற்ற வலையமைப்பு சேவைகளை விட சற்று மிகுதியாகக் காணப்படுவதால் பேஸ் புக் உடன் போட்டி நிலவ அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகின்றது.
07. Tagged
டாக்ட் என்ற தள த்தினை 2004 ஆம் ஆண்டு கிரேக்த் செவ் என்ப வரும் அவ ரது தோழர் ஜோஹன் ச்லேயியர் ஸ்மித் என்பவ ரும் இணைந்து நிறுவினர்.
பதின்ம வயதினருக்காக மட்டுமே என்று தொடங்கிய இந்த தளத்தில் அமெரிக்காவில் மிகவும் அதிகமான 35 - 49 வயதைச் சார்ந்தவர்களே காணப்படுகின்றனர். இதில் மாதம் தோறும் 7.6 மில்லியன் அமெரிக்க பயனர்களும் பார்வை இடக்கூடிய அளவில் அமைந்துள்ளது.
08 Orkut
ஆர்குட் கூகுள் நிறுவனத்தின் இணைய வழி வழங்கும் சமூக வலையமைப்பாகும். இதனைத் தொடங்கிய கூகுள் ஊழியர் ஆர்குட் புயக்கோ க்டன் என்பவருடைய பெயராலேயே இது வழங் கப்படுகிறது. இது துருக்கி நாட்டவரால் 2004 ஜனவரி 22 இல் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வலை நண்பர்களின் தொடர்பையும், நட்புறவையும் வளர்க்க பயன்படுகிறது.
09. Hi 5
இது ராமு யலமஞ்சி (Ramu Yalamanchi)  என்பவரால் ஜுன் 21 2003 இல் உருவாக்கப் பட்டது. இது 11 மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ளது. இது கேம்ஸ் டெவலப்பர்களை அதிகம் உருவாக் குகின்றது.

10. Myyear book

இது 2005 ஆம் ஆண்டு ஜொப்குக் (Geoff cook) டேவிட்குக (david Cook), கெதரின் குக் (Catherine Cook) ஆகியோரால் டீனேஜர் களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட சமூக வலைத்தள மாகும். இதில் 7 மில்லியனுக்கும் மேற்பட்ட பாவனையாளர்கள் காணப்படுகின்றனர்.

No comments:

Post a Comment