வாழ்க்கையில் நாம் உயர்வதும் தாழ்வதும் நாம் மேற்கொள்ளும் அணுகுமுறை ஒன்றிலே அடங்கியிருக்கிறது.

Nov 15, 2015

வினோதமான குறிப்புக்கள் சில



* அமெரிக்காவின் லாஸ் வேகாஸிலுள்ள ஒரு ஓட்டலின் பிரகாசமான விளக்கின் ஒளியை, 400 கிலோமீட்டர் தொலைவிலுள்ள விமானத்திலிருந்தும் காண  முடியும்!.

*
இங்கிலாந்திலுள்ள ஒரு நூலகத்தில் 288 ஆண்டுகள் கழித்து, அபராதம் செலுத்தி, ஒரு புத்தகம் திருப்பியளிக்கப்பட்டது. இது கின்னஸ் சாதனையாகவும் பதிவானது.

* ‘
ஸ்டார் வார்ஸ்’ படங்களில் இடம்பெறும் ‘யோடா’ கதாபாத்திரம், விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

*
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் அதிகாரபூர்வமான பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் 167 எழுத்துகள் வரும்!

*
நியூயார்க் நகரத்திலுள்ள எம்பயர் ஸ்டேட் பில்டிங் கட்டுமானத்தில் 1 கோடி செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

* 7
டிரக்குகளில் எடுத்துச் செல்லக்கூடிய அளவு எடையுள்ள ‘சாக்லெட் சிப் குக்கீ’ என்ற பிரமாண்ட பிஸ்கெட்டை, அமெரிக்காவிலுள்ள ஒரு பேக்கரி தயாரித்துள்ளது.

*
கனடாவிலுள்ள ஒரு பாட்டில் வாட்டர் கம்பெனி 12 ஆயிரம் - 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பனிப்பாறைகளிலிருந்து தண்ணீர் எடுக்கிறது.

*
ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக வெள்ளியே உள்ளது.

*
ஜப்பானின் ஒசாகாவிலுள்ள ஒரு அலுவலகக் கட்டிடத்தின் நடுவே நெடுஞ்சாலை செல்கிறது!

*
அமெரிக்க ராணுவத்தில் 2020ம் ஆண்டுக்குள் மொத்த வீரர்களில் 30% வரை ரோபோக்களைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆப்கானிஸ்தான் போரில் கூட ரோபோக்கள் களமிறக்கப்பட்டன.

*
மேப் ஓவியர்கள் தங்கள் வரைபடங்களை பிறர் காபி செய்து பயன்படுத்துவதை அறிவதற்காக, வேண்டுமென்றே சில தவறுகளைச் செய்வது வழக்கம். உதாரணமாக, கற்பனையாக சில சாலைகள்!

*
உலக மக்கள் தொகையில் 10% பேர் இடக்கை பழக்கம் உடையவர்கள்.

* நியூசிலாந்திலுள்ள ஜிஸ்போர்ன் ஏர்போர்ட் ஓடு தளத்திலேயே ஒரு ரயில் பாதையும் இயங்குகிறது!

*
ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் விலங்குகள் விமானத்தில் பறக்கின்றன.

* 7,240
கிலோமீட்டர் தொலைவுக்கு விரிந்துள்ள சீனப்பெருஞ்சுவர், கிட்டத்தட்ட ஆப்ரிக்கா கண்டம் அளவு நீளமுள்ளது.

* நீல் ஆர்ம்ஸ்ட்ராங் தனது ‘ஸ்பேஸ் பூட்ஸ்’ காலணியை நிலவிலேயே விட்டு வந்து விட்டார்!

* இங்கிலாந்தின் மக்கள்தொகையை விட, அமெரிக்காவில் டி.விக்களின் எண்ணிக்கை அதிகம்.

*
இத்தாலியிலுள்ள ஒரு எரிமலை 2 ஆயிரம் ஆண்டுகளாக புகைந்துகொண்டே இருக்கிறது.

* ஒரே ஒரு ‘டீ பேக்’ விலை 12 ஆயிரம் அமெரிக்க டாலராம்... இதைத் தயாரித்த பிரிட்டிஷ் ஜுவல்லரி 280 வைரங்களால் அதை அலங்கரித்ததே இந்த விலைக்குக் காரணம்!

* ஒரு அமெரிக்கர் 30 நிமிடங்களில் 427 ஆம்லெட்கள் தயாரித்து சாதனை படைத்திருக்கிறார். நம்ம ஊர் ரோட்டோர புரோட்டா கடைகளில் சாதனை வேகம் எவ்வளவு?

*
சராசரி குழந்தை வளரும் அதே வேகத்தில் தொடர்ந்து ஒருவர் வளர்ந்துகொண்டே இருந்தால், 10 வயதில் 1,87,469 கிலோ எடையை எட்டி விடுவார். நல்லவேளை!

* வட அமெரிக்காவின் மிக வெப்பமான பகுதி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது. அவ்விடத்துக்கு மரணப் பள்ளத்தாக்கு எனும் பொருள்படும் ‘டெத் வேலி’ என்ற பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

* உலகிலேயே மிகப்பெரிய பாறை ஆஸ்திரேலியாவில் உள்ளது. ‘உலுறு’ என்ற இப்பிரமாண்ட பாறை 114 மாடிக் கட்டிடத்தை விடவும் உயரமானது.

* ஈபிள் டவரின் 1665 படிகளில் ஒருவர் ஒருமுறை சைக்கிள் ஓட்டிச் சென்றிருக்கிறார்.

*
கடலில் இதுவரை பொங்கிய அலைகளில் மிகப்பெரியது எம்பயர் ஸ்டேட் பில்டிங்கை விட உயரமானதாக இருந்தது.

* லெபனான் நாட்டில் ஒரு விவசாயி 11 கிலோ எடையுள்ள உருளைக்கிழங்கை அறுவடை செய்திருக்கிறார்.

* உருகி வழிவது போன்ற தோற்றத்தில் இத்தாலியில் ஒரு கட்டிடம் உள்ளது
* கார்கள் தயாரிக்கப்படுவதற்கு முன்பே டிராஃபிக் லைட் கண்டறியப்பட்டு விட்டது.

* ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் செம்மழை பொழிந்திருக்கிறது.

* டீன் ஏஜிலேயே எகிப்து ராணியாகி விட்டார் கிளியோபாட்ரா.

*
பாட்டிலில் வளர்க்கப்பட்ட ஒரு கோல்டு ஃபிஷ், இங்கிலாந்தில் 43 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறது!

*
ஒரு மனிதனின் தலையை விடவும் பெரியதும் எடை அதிகமானதுமான வெங்காயம் ஒருமுறை அறுவடையாகியுள்ளது

*
ராய் சல்லிவன் என்ற அமெரிக்கரை 7 வெவ்வேறு முறைகள் மின்னல் தாக்கிய பிறகும், அவர் உயிர் பிழைத் திருந்தார்!

* பிரமாண்டமான ஹம்பர்கர் போன்ற வடிவில் இருக்கும்படிதான் ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் பைக் முதலில் வடிவமைக்கப்பட்டது..

*
துபாயில் பனை மர வடிவில் ஒரு தீவு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுவே செயற்கைத் தீவுகளில் மிகப்பெரியது..

*
ஒரு நாய் கழுத்துப்பட்டை 3 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டிருக்கிறது. காரணம் அதிலிருக்கும் வைரம்!

* நியூசிலாந்து நாட்டு மக்கள்தொகையை விட, அங்குள்ள செம்மறி ஆடுகளின் எண்ணிக்கை அதிகம்!


No comments:

Post a Comment