வாழ்க்கையில் நாம் உயர்வதும் தாழ்வதும் நாம் மேற்கொள்ளும் அணுகுமுறை ஒன்றிலே அடங்கியிருக்கிறது.

May 20, 2020

“Rich Dad, Poor Dad” புத்தகம் சொல்லும் 10 பாடங்கள் - புத்தகம் ஒரு பார்வை .!




பெரும்பாலான மனிதர்கள் ஒரு நாளில் பல மணி நேரங்கள் உழைப்பார்கள். கிட்டத்தட்ட 10 மணி நேரம் உழைப்பவர்கள் கூட உண்டு. ஆனால் அவர்கள் சொல்லிக்கொள்ளும் அளவு எதையும் சாதித்திருக்கவோ, சேமித்திருக்கவோ மாட்டார்கள். ரிச் டாட், புவர் டாட் (Rich Dad, Poor Dad) என்ற நூலின் ஆசிரியர் “ராபர்ட் கியோஸ்கி”, இந்த எலிஓட்டத்திலிருந்து தப்பிக்க பல சாமர்த்தியமான வழிகளை சொல்கிறார். அவற்றிலிருந்து 20 முக்கிய பாடங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
1. பெரும்பாலான மனிதர்களுக்கு அவர்களுடைய தொழில் தான் அவர்களின் வருமானம். அவ்வேலையின் மூலம் அவர்கள் ஈட்டும் பொருளே அவர்களின் வாழ்வாதாரம். ஆனால் பணம் படைத்தவர்களுக்கு இது வேறுபடும். அவர்கள் நிர்வாகிக்கிற சொத்துக்களும் உடமைகளுமே அவர்களின் வாழ்வாதாரம். அவர்களின் முதலீடே வருமானம்.
2. நாம் எதையாவது வாங்க வேண்டுமெனில், அந்த செலவுகளை ஈடு செய்வதற்கான பணப்புழக்கத்தை முதலில் உருவாக்க வேண்டும். எப்போதும் செளகரியங்களும், ஆடம்பரங்களும் இறுதி பட்டியலிலேயே இருக்க வேண்டும்.

3. எப்போது நம் சொத்தின் மூலமாக எதிர்பார்த்ததை விட அதிகமான லாபம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அந்த அதிக லாபத்தை வேறொரு சொத்தில் முதலீடு செய்யவேண்டும்.
4. எப்போதும் வருமானத்தை இலக்காக வரிக்காதீர்கள். மதிப்புமிக்க பல சொத்துக்களை உருவாக்குங்கள். இந்த சுழற்சி தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.
5. செலவுகளை, கடன்களை குறைத்து கொள்ளுங்கள்.

6. உங்கள் சொத்துக்களை பாதுகாக்கவும், வரிச்செலவுகளை குறைக்கவும் முறையான நிறுவனத்தை அணுகுங்கள். பணியாளர் சம்பாதிப்பது, முறையாக வரி செலுத்துவது. மீதமிருப்பதை செலவு செய்வது என்பதே சரியான படிநிலை.
7. நம்மை சுற்றி விரிந்திருக்கும் பல துறை சார்ந்த சிறிய அறிவையேனும் வளர்த்துக்கொள்ளுங்கள். கணக்கியல், முதலீடு, சந்தைப்படுத்தல், சட்டம், விற்பனை, வியாபரம், தலைமைபண்பு, எழுத்தாற்றல், பேச்சாற்றல், மற்றும் தொடர்புகளை வலுப்படுத்தல். எங்கெல்லாம் சாத்தியங்கள் உள்ளனவோ அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள்.
இதே கருத்தை தான் உலகளவில் கோலோச்சும் பில் கேட்ஸ் உட்பட அனைத்து ஜாம்பவன்களும் நமக்கு சொல்லி வருகிறார்கள்.

8. எப்போதும் கற்றுக்கொள்வதற்காக வேலை செய்யுங்கள். வருமானத்திற்க்காக அல்ல. உங்களுக்கு தெரிந்த ஒன்றை விட எங்கு அதிகம கற்றுக்கொள்ளலாமோ அந்த இடத்தில் உங்கள் வேலையை தேடுங்கள். அலிபாபா நிறுவனத்தின் “ஜாக் மா” அவர்கள் சொல்வதும் இதை தான்.
9. வெறுமனே முதலீடுகளை வாங்காதீர்கள். முதலில் முதலீடுகளை எப்படி செய்ய வேணும் என்பதை கற்று கொள்ளுங்கள். உங்களை விட யாரும் சிறப்பாக செய்து விடாத வண்ணம் இருப்பதாக பார்த்து கொள்ளுங்கள்.
10. நீங்கள் எதை கற்கிறீர்களோ, அதுவாகவே ஆவீர்கள். எனவே நீங்கள் கற்க தேர்வு செய்யபவற்றில் கவனமாக இருங்கள். தொடர்ந்து வாசித்து கொண்டேயிருங்கள்

No comments:

Post a Comment