வாழ்க்கையில் நாம் உயர்வதும் தாழ்வதும் நாம் மேற்கொள்ளும் அணுகுமுறை ஒன்றிலே அடங்கியிருக்கிறது.

May 22, 2020

வரலாற்றில் ஒரு ஏடு

அபூதர் (ரலி) கூறியதாவது: ‘நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே, நற்செயல்களில் சிலவற்றைக் கூட என்னால் செய்ய இயலவில்லையென்றால் நான் என்ன செய்வது?
 என தாங்கள் கூறுங்கள்’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,
 ‘மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இருங்கள். ஏனெனில், அதுவும் நீங்கள் உங்களுக்குச் செய்து கொள்ளும் ஒரு நல்லறம்தான்’ என பதில் கூறினார்கள்’. 
(நூல்: முஸ்லிம்)

பெரும்பாலும் பொதுமக்களுக்கு தொல்லை கிடைப்பது மனிதனின் நாவினால் ஏற்படுகிறது. சில வேளை அவனது கரத்தாலும், அவனது இன்னும் பிற செயல்களாலும் ஏற்படுகிறது. எந்தவிதத்திலும் பொதுமக்களுக்கு தொல்லைகள் கொடுப்பதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. அவ்வாறு ஈடுபடுவோர் உண்மையான இஸ்லாமியர்களாக இருக்கமுடியாது. உண்மையான இறைநம்பிக்கையாளர்களாகவும் முடியாது.

பொதுமக்களுக்கு தொல்லை தரும் அனைத்து செயல்பாடுகளிலிருந்தும் முஸ்லிம்கள் தவிர்த்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment