Sep 20, 2019

புள்ளி விபரம்தான்

ஜோஸப் ஸ்டாலின் ஆயுதக் கிடங்கு அதிகாரியாயிருந்தபோது அவர் உயர்ந்த அதிகாரிகளைக் கொண்டு ஓரு கூட்டம் கூட்டினார் அதில் அவர்கள் உக்ரைனில் எற்பட்டிருந்த பஞ்சம் பற்றி விவாதித்தார்கள்.

ஓர் அதிகாரி எழுந்து நின்று அங்கு நிலவும் பஞ்சத் துயரை உணர்ச்சியுடன் விளக்கத் துவங்கினார்.
" நூறாயிரக்கணக்கான மக்கள் பூச்சி, புழுக்களைப் போல செத்து மடிகின்றார்கள்" என்று கூறி விட்டு அவர், ஓவ்வொரு பகுதியிலும் இறந்தவர்கள் தொகையை வாசிக்க ஆரம்பித்தார்.

உடனே ஸ்டாலின்,
"ஓரு மனிதன் இறந்தால் அது பரிதாபத்துக்குறிய விஷயம், நூறாயிரக்கணக்கானவர் இறந்தால் அது வெறும் புள்ளி விபரம்தான்" என்றார்.

No comments:

Post a Comment