Sep 20, 2019

அதிகாலைச் சிந்தனை

"என்னிடம் மௌனம் மட்டுமே இருக்கிறது" என்றுவிட்டு எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பவனை எப்போதும் எனக்குப் பிடிப்பதில்லை. சௌகரியத்தின் வட்டத்துக்குள் கால்நீட்டித் தூங்குகிற
கோழை அவன்.

பூமியே புரண்டாலும் தன்காரியத்தில் மட்டுமே கண்ணாயிருக்கும் 'படித்த புத்திசாலிகளை' உருவாக்குகிற இந்தக் கல்வி முறையிலும் உடன்பாடு இல்லை. எந்தவொரு விடயத்திற்கும், தங்களது வசதிக்கேற்ற நியாயங்களை உருவாக்கத் தெரிந்த 'மூளைசாலிகள்' அவர்கள்.

படித்தவர்களால் நாம் அடைந்த பயன்தான் என்ன என்ற கேள்வியை எழுப்பி விவாதிக்க வேண்டும். பலபோது 'பாமரர்கள்' என்று நாம் அழைப்போர், உன்னத மனிதர்களாக சமூகக் களத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களைத்தான் மனம் கொண்டாடுகிறது.

தனிமனிதர்களாக நம்மில் சிலர் வென்றிருப்பது கண்கூடு. ஆனால், சமூகமாக நாம் தோற்றுக் கொண்டிருக்கிறோம். இந்தப் புள்ளியில்தான் சீரியஸான சுய விமர்சனம் தேவை.

சிராஜ் மஷ்ஹூர்

No comments:

Post a Comment