Nov 11, 2015

எதிர்காலத்தை மாற்றக்கூடிய 10 கண்டு பிடிப்புகள்


*மனிதத் தலைமுடியை விட ஒரு லட்சம் மடங்கு மெலிதான சூப்பர் மெட்டீரியலை ஸ்வீடன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதைக் கொண்டு, மிக மிக மிக எடை குறைவான வாட்டர்    புரூஃப் துணிகளைத் தயாரிக்கலாம்.

*
பெரிய அளவிலான கேஸ் கசிவைத் தடுக்க பாக்டீரியாக்களைப் பயன்படுத்தலாம் என ஈஸ்ட் ஏஞ்சலியா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

*
மனித சருமத்தின் வெளிப்புறத்தோலை (எபிடெர்மிஸ்), ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி, செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் லண்டன் கிங்ஸ் காலேஜ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ மெடிக்கல் சென்டர் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். இதன் மூலம் பல்வேறு சருமக் குறைபாடுகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

*
ஹெச்.டி., டச் ஸ்க்ரீன் தொழில்நுட்பம் எல்லாம் பழசாகும் காலம் மிக விரைவிலேயே தென்படுகிறது. பனிப் புகையிலேயே 3டி உருவங்களை விரல்களைக் கொண்டே உருவாக்கும் புதிய தொழில்நுட்பத்தை பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

*
சிக்கன் மற்றும் இறைச்சியை பாக்டீரியா தாக்குதலில் இருந்து 3 வாரங்கள் வரை பாதுகாக்கக்கூடிய ஃபிலிம் உறையை பென்சில்வேனியா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ஃபிலிமும் சாப்பிடக்கூடிய பொருள்தான்!

*
இன்டர்நெட் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் மிகச் சிறிய போட்டோன் ஸ்விட்ச் ஒன்றை ஹார்வர்டு விஞ்ஞானிகள் மேம்படுத்தியுள்ளனர். மின்சாரத்தின் துணையின்றி, ஒளியை மட்டுமே பயன்படுத்தி, பாதுகாப்பான இணைய இணைப்பை இதன் மூலம் அளிக்க முடியும்.

*
ஜீன் தெரபி மூலம் செவி நரம்புகளைப் புதுப்பிக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர் நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள். இதனால் காது கேளாமையை மட்டுமல்ல... பார்கின்சன்ஸ் நோய் மற்றும் மனச்சோர்வுப் பிரச்னைகளையும் சரி செய்ய முடியும்.

*
அதிகமாகச் சாப்பிடும் பழக்கத்தை, ‘அசிடேட்பயன்படுத்தி குறைக்கலாம் என சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதனால் விரைவிலேயே வரப்போகிறது அதிகம் சாப்பிடுகிறவர்களுக்கான மாத்திரை!

*
ஆப்டிகல் லென்ஸ் ஒளியைப் பிரதிபலிப்பது போலவே, மின்காந்த அலைகளைப் பயன்படுத்தும் முறையை சவுத் ஈஸ்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது செயல்பாட்டுக்கு வரும்போது, மொட்டை மாடிகளில் காணப்படும் அத்தனை ஆன்டெனாக்களின் அளவும் வடிவமும் மாறிவிடும்!

*
தென் ஆப்ரிக்காவில் பிறந்து, கனடா-அமெரிக்காவின் பிசினஸ் மேக்னட்டாகத் திகழும் எலோன் மஸ்க் உலகின் அதிவேக போக்குவரத்துத் திட்டத்துக்கான ஐடியா வைத்திருக்கிறார். அதன் பெயர் ஹைபர்லூப். கேப்ஸ்யூல் போன்ற ட்யூப்களில் அமர வைக்கப்படும் பயணிகள் மணிக்கு 1,223 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தப்படுவார்கள்.


No comments:

Post a Comment