ஆப்பிள் நிறுவனம் கடிக்கப்பட்ட ஆப்பிளை லோகோவாக(LOGO) கொண்டிருப்பதன் காரணம் உங்களுக்கு தெரியுமா!!
பிரிட்டனைச் சேர்ந்த கணிதவியல் ஆராய்ச்சியாளர் ஆலன் டூரின் . ஆலன் கணினி பொறியியலிலும் மிகச்சிறந்து விளங்கியவர் .
சென்ற நூற்றாண்டில் கணினிகளின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு ஆராய்ச்சி செய்தவர்களுள் இவரும் ஒருவர் . இரண்டாம் உலகப்போரின் போது இவர் தான் பல லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டதற்கு முக்கியக் காரணம். ஜெர்மன் நாஜிப் படைகள் தங்களுக்குள் அனுப்பிக் கொண்டிருந்த செய்திகளை நடுவிலேயே வழிமறித்து , அதை DECODE செய்தார் ஆலன். ஆனால் DECODE செய்வதென்பது எளிதான வேலை அல்ல. அதற்கு மிகச்சிறந்த கணித , அறிவியல் அறிவு தேவை. ஆலனிடம் அது இயல்பாக இருந்தது. நாஜிக்களின் செய்தியை DECODE செய்ததன் மூலம் , அடுத்து பிரிட்டனின் எந்தப் பகுதியைத் தாக்குவதற்கு ஹிட்லர் திட்டமிடுகிறார் என்ற ரகசிய செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது. அதன்மூலம் பல பிரிட்டன் மக்களின் உயிரைப் பாதுகாக்க முடிந்தது.
ஆனால் இத்தகைய சாதனை செய்த ஆலன் டூரினுக்கு வரலாறு வேறு விதமாக வாழ்க்கையை அமைத்து விட்டது. அப்போது பிரிட்டனில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டுக் கொண்டிருந்த காலம். அப்போது ஆலனும் ஓரினச்சேர்க்கையாளர் தான் என்ற சந்தேகம் ஏற்பட்டு, பிரிட்டன் அரசு அவரை சிறையில் தள்ளியது. ஆனால் அவர் செய்த மாபெரும் சாதனைகளை மறந்து அவருக்கு தண்டனை கொடுத்தனர். அவமானத்தால் மனமுடைந்து போனார் ஆலன். நஞ்சை ஒரு ஆப்பிளுக்குள் செலுத்தி , அப்பகுதியை கடித்து உண்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால் அவருடைய சாதனையை மறக்க முடியுமா ?
ஆலனின் கம்ப்யூட்டர் திறமையினால் ஈர்க்கப்பட்டவர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ்.
அதனால் தான் தன்னுடைய ஆப்பிள் நிறுவனத்திற்கு கடிக்கப்பட்ட ஆப்பிளை லோகோவாக வைத்து , ஆலனை எப்போதும் நினைவு படுத்துகிறார்.
ஆனால் அவருடைய சாதனையை மறக்க முடியுமா ?
ஆலனின் கம்ப்யூட்டர் திறமையினால் ஈர்க்கப்பட்டவர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ்.
அதனால் தான் தன்னுடைய ஆப்பிள் நிறுவனத்திற்கு கடிக்கப்பட்ட ஆப்பிளை லோகோவாக வைத்து , ஆலனை எப்போதும் நினைவு படுத்துகிறார்.
No comments:
Post a Comment