ஒரு யானை ஒன்று நன்றாக குளித்துவிட்டு சுத்தமாக வந்து கொண்டிருந்ததாம்.🐘
ஓர் ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்ததாம்.🐖
🐘யானை ஓர் ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டதாம்.
🐖அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக்கண்டு பயந்து விட்டது!” என்று சொல்லிச் சிரித்ததாம்.
🐘அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா! நீ பயந்து விட்டாயா?” என்று கேட்டதாம்.
அதற்குக் அந்த யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னதாம்.🐘
“நான் சுத்தமாக இருக்கிறேன், பன்றியின் சேறு என் மேல் விழுந்து விடக் கூடாதே என்று ஒதுங்கினேன். நான் ஏறி மிதித்தால் அது துவம்சம்மாகிவிடும்; ஆனால் என் கால் அல்லவா சேறாகி விடும்!
👇👇👇👇
-இந்தக் கதையின்படி சிறியவர்களின் ஆணவத்தைக் கண்டு, நாம் அடக்கத்தோடு ஒதுங்கி விடுவது நல்லது.
-இந்தக் கதையின்படி சிறியவர்களின் ஆணவத்தைக் கண்டு, நாம் அடக்கத்தோடு ஒதுங்கி விடுவது நல்லது.
நான்’ என்னும் எண்ணம் ஒருவனுக்குத் தோன்றுகின்றதென்றால், அவன் தோல்விகளைச சந்திக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறான்.
அறிவு குறைவானவர்களுக்கே ஆணவம் வருகிறது.
குருட்டுத்தனமாக ஏதேனும் வெற்றியோ பதவியோ கிடைத்துவிட்டால், அதை வைத்துக்கொண்டு, பலவீணமானவர்களையும் பெரியவர்களையும் அவமதிக்காதீர்கள்.
அடங்கி வாழ்ந்தால் ஆயுள் காலம் முழுவதும் ஓங்கி வாழலாம்
No comments:
Post a Comment