பயிற்சியும்,முயற்சியும்தான் பலருடைய மனங்களை ஆற்றல் பெற்ற மனங்களாக உருவாக்குகின்றன.
அடிப்படையில் அனைத்து மனிதர்களின் மனங்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
முயற்சியும், முறையான பயிற்சியும் இருந்தால் ஒருவர் தனது மனத்தையே மூலதனமாக்கலாம். வாழ்க்கையிலும் வெற்றி பெறலாம் .
மனதை வளப்படுத்துவதற்கும் மூலதனம் ஆக்குவதற்க்கும் பலவற்றை கற்றுக் கொள்வதோடு முறையான பயிற்சியும் இருக்க வேண்டும்.
புகழ் பெற்ற வயலின் இசைக் கலைஞர் படேர்வஸ்கி. அவர் புகழின் உச்சியில் இருந்த போதிலும் தினமும் 10 முதல் 12 மணி நேரம் வயலின் இசைத்து பயிற்சி செய்வார்.
ஒரு முறை அவரது நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரிடம் வாசிக்கும் கலைஞர் ஒருவர் ''உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?'' என்று கேட்டார்.
அதற்கு படேர்வஸ்கி.,
'' எனது வெற்றியின் ரகசியம் தினந்தோறும் பயிற்சி செய்வதுதான். நான் ஒரு நாள் பயிற்சி செய்யவில்லை என்றல் அதனால் ஏற்படும் மாற்றங்களை என்னால் அறிய முடியும்.
நான் இரண்டு நாட்கள் பயிற்சி செய்யவில்லை என்றால் அதை எனது விமர்சகர்கள் கண்டு பிடித்து விடுவார்கள்.
நான் மூன்று நாட்களுக்கு மேல் பயிற்சி செய்ய வில்லை என்றால் அதை இந்த உலகமே அறிந்து கொள்ளும் என்று கூறினார்.
எந்த துறையிலும் ஒருவர் வெற்றி ஆளராக திகழ வேண்டுமானால், அவர் தனது பணியில் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.
அப்போதுதான் அவரால் தனது வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
உழவுக் கருவியைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.. இல்லை என்றால் இது துருப் பிடித்து விடும்.
அது போலத்தான் தொடர்ந்து இடுபடும் கலையிலோ, விளையாட்டிலோ பயிற்சி செய்ய வேண்டும். இல்லை என்றால் அவர்கள் ஈடுபடும் செயலில் திறமை மங்கி விடும்.
உங்களுக்கு 2012 ல் நடந்த ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஒட்ட பந்தயத்தில் உலக சாதனை படைத்த உசேன் போல்ட் பற்றி தெரியுமா?
அவர் 9.63 வினாடிகளில் 100 மீட்டரை கடந்தார். அவர் ஒரு வினாடியையும் வீணடிக்காமல் தொடர்ந்து பயிற்சி செய்ததால்தான் சில நொடிகளில் அந்த சாதனையை செய்ய முடிந்தது.
ஆம்.,நண்பர்களே..,
எதிலும் முயற்சியும், முறையான பயிற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால்,ஒருவரது மன ஆற்றல் அதிகரித்து, அவரை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வது நிச்சயம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக