வாழ்க்கையில் நாம் உயர்வதும் தாழ்வதும் நாம் மேற்கொள்ளும் அணுகுமுறை ஒன்றிலே அடங்கியிருக்கிறது.

Nov 11, 2015

முதுமையிலும் சாதனை படைத்தவர்கள்


முதுமை என்பது உடலுக்குத்தான். உள்ளத்திற்கு அல்லஎன்று உரக்கச் சொல்கிறது இந்த சாதனைப் பட்டியல்.

*
கான்ட் தனது எழுபது வயதிற்குப் பின் மிகச் சிறந்த தத்துவ நூல்களை எழுதினார்.

*
ஆண்ட்ரூ மெலன் 82 வயதில் மிகச் சிறந்த நிதி நிறுவனராக விளங்கினார்.

*
வான்ட்டன் பில்ட் தளராத சுறுசுறுப்புடன் 70 வயதிற்குப் பின்னும் இருப்புப் பாதை அமைப்பாளராக விளங்கினார்.

*
வால்டர் டாம்ராஸ்க் தனது இசை ஞானத்தால் 75 வயதிலும் மிகச் சிறந்த இசைக் குழுக்களை நடத்தினார்.

*
மோனட் என்னும் பிரான்ஸ் நாட்டுக் கலைஞர் தனது 86வது வயதில் மிகச் சிறந்த வண்ண ஓவியங்களைத் தீட்டினார்.

*
வான் ஹம்போல்ட் தனது உலக  சாதனையை   76 வயதில் தொடங்கி 90 வயது வரை நிகழ்த்தினார்.
 

* கதே தனது 80வது வயதில் தலைசிறந்த இலக்கியம் படைத்தார்.

*
திதியன் தனதுலெப்னடோ போர்என்ற நவீனத்தைத் தனது 98வது வயதில் படைத்தார்.

No comments:

Post a Comment