Nov 14, 2015

விந்தை உலகம்



* கணிப்பொறி இல்லாமலே நம் கண் முன்னே சமூக வலைத்தளத் தகவல்களைக் காட்டிடும் புராஜெக்ட் கிளாஸ் ஒன்றை கூகுள் நிறுவனம் வடிவமைத்து வருகிறது!

* மணிக்கு 1000 மைல் வேகத்தில் செல்லக்கூடிய கார் ஒன்றை இங்கிலாந்திலுள்ளபிளட்ஹூவுண்ட் எஸ்எஸ்சிஎன்ற ஆராய்ச்சிக்குழு உருவாக்கியுள்ளது.



*
டியூராசெல் நிறுவனத்தின் தலைமையகக் கட்டிடம் முழுக்க முழுக்க, அந்நிறுவனத்தின் குப்பைகள் மற்றும் மறு உபயோகப் பொருட்களால் கட்டப்பட்டது
      * மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆபீஸ் 365’ பத்திரிகை விளம்பரத்திலேயே இலவச இன்டர்நெட் அளிக்கும் சிறிய வைஃபை கருவியைப் பொருத்தி புதுமை செய்துள்ளது.
* உலகின் அதிவேக ரயில் ஓடுவது சீனாவில்தான்... மணிக்கு 350 கி.மீ. ஜப்பானின் புகழ்பெற்ற புல்லட் ரயிலின் வேகம் மணிக்கு 243 கி.மீ. ஐரோப்பாவின் ஈரோஸ்டார் ரயில் அதிகபட்சமாக எட்டிய வேகம் 335 கி.மீ.                                                                                                      
* ஹோண்டா நிறுவனம் தயாரித்த அசிமோ என்ற ரோபோ, மணிக்கு 9 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது. இதுவே ஹியூமனாய்ட் ரோபோக்களில் மிக வேகமானது.
                                                                                                                                                                                          
* உலகிலேயே மிக நுட்பமான கடிகாரம் இங்கிலாந்திலுள்ள நேஷனல்
பிசிக்கல் லேபாரட்டரியில் உள்ளது. சிஎஸ்எஃப்2 என்ற இக்கடிகாரம், 13.8 கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஒரு வினாடி அளவு நேரத்தைத் தவறாகக் காட்டும்!

* கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுகிறவர்களைக் கட்டுப்படுத்தும் ஊசி மருந்து ஒன்றை பரிசோதிக்கிறார்கள் லண்டன் ஹாமர்ஸ்மித் மருத்துவமனை விஞ்ஞானிகள்!

* தென் கொரியாவில் உருவாகி வரும் சாங்டோ எனும் நவீன நகரத்தில் குப்பைத்தொட்டிகள் கிடையாது. மாறாக, அனைத்துக் குப்பைகளும் குழாய்கள் வழியே உறிஞ்சப்படும்!
* இப்போது கடற்கொள்ளையரைப் பிடிப்பதற்காக மிக அதிக ஒலி (162 டெசிபல்) எழுப்பக்கூடிய கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்ற   மனித செவியின் அதிகபட்சஒலி தாங்கு அளவு 130 டெசிபல்
* அப்போலோ 13 விண்கலத்தின் கமாண்டர் ஜிம் லோவெல் அவரிடமிருந்த மிஷன் செக்லிஸ்ட்ஆவணத்தை 1,72,11,488 ரூபாய்க்கு விற்றுவிட்டார். ‘அதை எப்படி விற்கலாம் என நாசா அமைப்பு, ஜிம்மை அதிதீவிர விசாரணைக்கு உட்படுத்தியது.
* அமெரிக்காவில் பீச் பழங்கள் விளையும் வயலில், அவை கடுங்குளிரால் பாதிப்படையாமல் இருப்பதற்காக பிரமாண்ட வைக்கோல் உருளைகளை எரித்து வெப்பக்காற்று வீசச் செய்கிறார்கள். ஆலங்கட்டி மழையால் பழங்கள் உடைவதைத் தவிர்க்க, ஒரு கருவி மூலம் மழை உருவாவதையே தடுக்கிறார்கள்!
* பால்வீதி மண்டலத்தை ஆராய்கிற ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி கேமராவின் பிக்செல்கள் - 100 கோடி!

* ஜப்பானில் ஆண்டுதோறும் 2400 கோடி
சாப்ஸ்டிக் குச்சிகள்
(ஜோடி) பயன்படுத்தப்படுகின்றன . சீனாவிலோ 4500 கோடி. இதற்கு மட்டுமே இரண்டரை கோடி மரங்கள் தேவை!




No comments:

Post a Comment