
* கூகுள் தேடுதளத்தில் ஒவ்வொரு நாளும் 100 கோடி படங்கள் பார்வையிடப்படுகின்றன. இதைப்போல 10 மடங்கு படங்கள் பார்வைக்குத் தயாராக உள்ளன!
* உலகத்தின் மிகப்பெரிய சிறுநீரகம் வாஸிரான் மாலா என்ற பாகிஸ்தானியின் உடலிலிருந்து அகற்றப்பட்டது. எடை 1.8 கிலோ. சாதாரண சிறுநீரகத்தைப் போல 10 மடங்கு!
* சிப்ஸ் போன்ற பாக்கெட் உணவுப்பொருட்களில் ஏறக்குறைய 68% காற்றே நிரப்பப்பட்டுள்ளது.
* எந்த நேரமும் வெடிக்கலாம் என்ற நிலையில் உள்ள எரிமலைப் பகுதிகளில் கூட, பத்தில் ஒருவர் வாழ்கின்றனர்.
* புருஸ் லீயின் அடி உதைகள் மிகமிக வேகமாக இருக்கும் என்பதால், அவரது படத்தின் பல காட்சிகளை நம்பகத்தன்மைக்காக மீண்டும் ஸ்லோ மோஷனில் எடுத்திருக்கிறார்கள்
* அமெரிக்காவில் சராசரியாக ஒவ்வொருவருக்கும் 3.5 கிரெடிட் கார்டுகள் இருக்கின்றன.
* கேஎஃப்சி போலவே, சீனாவில் ஓஎஃப்சி கடைகள் நடத்துகிறார்கள். அது ஒபாமா ஃப்ரைடு சிக்கன்!
* மிக்கி மவுஸுக்கு குரல் கொடுத்தவர் (Wayne Anthony Allwine) மின்னி மவுஸுக்கு குரல் கொடுத்தவரையே (Russell Taylor) நிஜ வாழ்விலும் மணந்துகொண்டார்.
* 35 படங்களில் நடித்த ஆஸ்திரேலிய-அமெரிக்க நடிகை ஹெடி லாமர், ஒரு கணிதவியலாளரும் கூட. அது மட்டுமல்ல... அவர் மேம்படுத்திய ‘ஸ்பெரெட் ஸ்பெக்ட்ரம்’ தொழில்நுட்பமே, வைஃபை மற்றும் புளூடூத் ஆகியவற்றில் இன்றும் பயன்படுகிறது.
* இங்கிலாந்திலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஆண்டுக்கு 450 கிலோ உணவு மற்றும் அது சார்ந்த குப்பைகள் கொட்டப்படுகின்றன.
* காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் நாடு அமெரிக்கா. அங்கு மொத்த மின்சாரத்தில் 2 சதவீதம் காற்றாலை மூலம் தயாரிக்கப் படுகிறது.
* டேட்டா பரிமாற்றத்தின் அதிகபட்ச சாதனை இது... 700 டிவிடி திரைப்படங்களை உள்ளடக்கிய 26 டெராபைட் டேட்டா, ஒரே ஒரு நொடியில் ஒற்றை லேசர் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது!
* சமீபகாலம் வரை உயரமான மனிதர்களை அதிகம் கொண்டிருந்த அமெரிக்கா, இப்போது பருமனானவர்கள் பட்டியலிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
* ஐரோப்பாவில் 47 சதவீதம் பேருக்கு தங்கள் துணையின் மொபைல் எண் மனப்பாடமாகத் தெரியாது. ‘போன் புக்’ பார்த்தே டயல் செய்கிறார்கள்!
* கார்க் தயாரிக்கப் பயன்படும் கார்க் ஓக் மரங்கள் 300 முதல் 400 ஆண்டுகள் வாழும். ஆனால், 50 அடிக்கு மேல் வளராது!
* சாதாரண டீயை விட, கிரீன் டீ 10 மடங்கு ஹெல்த்தியானது!
* 64 ஜிபி மெமரி டிஸ்க்கில் 5 மணி 50 நிமிட நேர ஹெச்டி வீடியோவை பதிவு செய்ய முடியும்.
* இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளிலும் கூட, 55 சதவீதத்தினர் வாரத்தில் பாதி நாட்கள் காலை உணவு சாப்பிடாமலே வெளியில் புறப்படுகின்றனர்.
* சராசரி அமெரிக்கர் இன்சூரன்ஸுக்கு செலவழிப்பதை விட 2 மடங்கு பணத்தை மதுபானத்திலும் சிகரெட்டிலும் செலவழிக்கிறார்.
* மேற்கத்திய நாடுகளிலுள்ள பெண்கள் வாழ்நாளில் சராசரியாக இரண்டரை கிலோ லிப்ஸ்டிக் உபயோகிக்கிறார்கள்.
* அமெரிக்காவில் துரதிர்ஷ்டமாகக் கருதப்படும் கறுப்புப்பூனை, ஜப்பானில் அதிர்ஷ்டமாகக் கொண்டாடப்படுகிறது.
* மேற்கத்திய மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளில் சராசரியாக ஒவ்வொருவரும் தினம் 2 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் பயன்படுத்துகிறார்கள்.
* அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் பாதிக்கு மேலான வர்கள் தன்னந்தனியே வாழ்கிறார்கள்.
* உலகில் இன்னும் 3 நாடுகளில் மெட்ரிக் முறை அமல்படுத்தப்படவில்லை.
* சீனாவில் மற்ற நாடுகளைவிட பன்றிகளின் இனப்பெருக்கம் அதிகம்.
* அமெரிக்காவில் பத்தில் 8 மோசமான பேரழிவுகள் சூறாவளியாலேயே ஏற்படுகின்றன.
* உலக மக்களில் 10 சதவீதத்தினர் மட்டுமே பூமியின் தென்கோளப்பகுதியில் வசிக்கின்றனர்.
* உலகை 150 முறை சுற்றிவரும் அளவுக்கு நீளமான சாலைகள் அமெரிக்காவில் உள்ளன.
* சகாரா பாலைவனத்தின் சூரிய ஆற்றலில் 0.3 % மட்டுமே ஐரோப்பாவின் ஒட்டுமொத்த மின் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானது.
* அமெரிக்காவின் கெண்டகியில் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு முறையாவது குளிக்க வேண்டும் என சட்டமே உள்ளது.
* மரபியல் காரணங்களை விட, வெப்பம், தண்ணீர், மாசு, ஹேர்ஸ்டைல் போன்றவையே வழுக்கை விழுவதற்கு அதிக காரணம்.
* ஸ்போர்ட்ஸ் டிரிங்க், எனர்ஜி டிரிங்க் ஆகிய பெயர்களில் விற்கப்படும் பானங்களைவிட இளநீரில் அதிக சத்துகள் உள்ளன. பக்க விளைவுகளும் இல்லை.
* ஜம்போ ஜெட் விமானம் புறப்படுவதற்கு மட்டுமே 4 ஆயிரம் கேலன் எரிபொருள் தேவை.
No comments:
Post a Comment