Oct 31, 2015

பொதுஅறிவு துளிகள்


*எடிசனின் உயிர் பிரியும்போது கடைசியாக 'விளக்கை எரியவிடுங்கள் என் ஆவி பிரியும்போது வெளிச்சமாக இருக்கட்டும்!' என்றாராம்!!.

*ஆண்களாக பிறந்து பெண்ணாக உணருபவர்கள் 'திருநங்கை' பெண்ணாக பிறந்து ஆணாக உணருபவர்கள் 'திருநம்பி'!.

*தலைவா படத்துக்காக தற்கொலை பண்ணிக்கிறது ரஜினி படத்துக்காக மண்சோறு திங்கிறது போன்றவை Celebrity Worship Syndrome என்ற மனநோய் வகை

*பறவை இனங்களில் ஆந்தை மட்டுமே கண் சிமிட்டும் போது மேல் இமையை மூடுகிறது மற்ற அனைத்து பறவைகளும் கண்களை சிமிட்டுவது கீழ் இமையால்தான்!.

*கூகுள் என்ற சொல் ஒரு கோடி பூஜ்ஜியங்களைக் கொண்ட எண்களுக்கான பொதுவான பெயர் ஆகும்!.
* தொடர்ந்து 42 கப் காப்பி குடிச்சா நீங்க செத்துப் போவிங்க!
* நீங்க இந்த வரிய படிச்சு முடிப்பதற்குள் உங்க உடலின் 25,000,000 உயிர் செல்கள் இறந்திருக்கும்!!
* உங்களுடைய கம்பியூட்டர் கீபோர்டில் கழிவறை சீட்டைக் காட்டிலும் 60 மடங்கு அதிக கிருமிகள் இருக்கலாம்!
* மனிதனின் DNA வாழைப்பழத்தின் DNAவுடன் 50% ஒத்துப்போகிறதாம்!
* 70% பெண்கள் தங்களுக்கு தெரிந்த விஷயத்தை பற்றியே கேள்வி கேட்கிறார்களாம்! (தெரியாதுன்னு நினைச்சி பொய் சொல்லி மாட்டிக்காதிங்க)
* ஒரு அன்னாசிப்பழ செடி ஒரு வருஷத்துக்கு ஒரே ஒரு அன்னாசிப் பழத்தைத் தான் காய்க்குமாம்!
* பெங்குவின் பறவைகள் ஒரே இடத்தில் 7 லட்சம் வரை எண்ணிக்கையில் கூடும்.
* கடலில் 30,000 மீன் வகைகள் உள்ளதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். உலகில் பூச்சி இனத்திற்கு அடுத்து மீன் இனங்களே அதிகம் என்று ஆராய்ச்சி வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
* விமானத்தில் பறந்தவாறே பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்சன்.
* நைலான் துணியால் கரன்சி நோட்டுகளை அச்சடிக்கும் நாடு ஜெர்மனி.
* முதல் உலகப்போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 லட்சம். இரண்டாவது உலகப் போரில் மாண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடி!
* பிளாஸ்டிக்கில் கரன்சி நோட்டுகளை முதலில் வெளியிட்ட நாடு ஆஸ்திரேலியா.
* சூரியகாந்தி வகையைச் சேர்ந்த காசினி என்ற செடியின் வேரைக் காயவைத்து வறுத்துப் பொடி செய்வதுதான் சிக்கரி பவுடர். காப்பிப் பொடியுடன் மணத்துக்காகச் சேர்க்கிறார்கள்.
* உலகிலேயே அதிக இலைகள் கொண்டது சைப்ரஸ் மரம். இதில் 4 முதல் 5 கோடி இலைகள் இருக்குமாம்


*
உங்களுடைய கை நகங்கள் 24 மணி நேரத்தில் 0.00007 அங்குலம் வளர்கின்றன!.

*ஹிட்லர் ஒரு சைவ விரும்பி! மேலும் மிருகவதையை தீவிரமாக எதிர்ப்பவர்!!

*இங்கிலாந்தைச் சேர்ந்த மாத்யூ கிரீன் என்பவர் இதயமேயில்லாமல் இயந்திரங்களின் உதவியால் 2 வருடங்கள் வரை வாழ்ந்திருக்கிறார்!.

*ஐன்ஸ்டீனின் கணிப்புப்படி உலகில் தேனீ இனம் முற்றிலும் அழிந்து போனால் அன்றிலிருந்து 4 வருடத்திற்குள் மனித இனம்அழிந்து போகுமாம்!!.

*தோல்விகளைக் கண்டு துவளாதீர்! மில்லியன் கணக்கான விந்தணுக்களின் வெற்றி பெற்றது நீங்கள் ஒருவரே! பயாலஜிப்படி சாதிக்கப் பிறந்தவர் நீங்கள்!.

*19ம் நூற்றாண்டிலேயே திட்டமிடப்பட்டாலும், ஆப்கானிஸ்தானின் ரயில் கனவு இப்போதுதான் நிறைவேறி இருக்கிறது.

*
உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

*
தேசியக்கொடியை முதன்முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க். ஆண்டு 1219.

*
வெண்மை என்பது நிறம் இல்லை. அது ஏழு வண்ணங்களின் கலவையே.

*
உலகில் 44 நாடுகளுக்கு கடற்கரை இல்லை.

*
எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் விலங்கு, நாய்.

*
இறாலின் இதயம் தலையில் இருக்கிறது.

*
கர்ப்ப காலத்தில் பெண்ணின் மூளை லேசாகச் சுருங்கும். மீண்டும் பழைய அளவை அடைய 6 மாதங்கள் ஆகும்

*குரங்குகளால் பேச முடியாவிட்டாலும், சத்தம் மற்றும் உடலசைவுகளைப் பயன்படுத்தி, தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்.

*அடிக்கடி சூயிங் கம் மெல்பவர்களுக்கு வாயுக்கோளாறுகள் அதிகம் ஏற்படும்.

பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுவர்?  - ஆடம் ஸ்மித்
ஆசியாவில் முதன் முதலாக தொழில்மயமான நாடு?
- ஜப்பான்
ஆசியாவில் கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு?
- ரஷ்யா
காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
- பென்சிலின்
சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைந்துள்ள அமிலம்?
- பாரமிக் அமிலம்
தாஸ் கேபிடல் என்றும் புத்தகத்தை எழுதியர்?
- கார்ல் மார்க்ஸ்
வௌவால் ஏற்படுத்தும் ஒலி?
- மீயொலி
மனிதன் ஒரு அரசியல் மிருகம் எனக் கூறியவர்?
- அரிஸ்டாட்டில்
வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
- கி.பி 1890
*பூமிக்குள் இதுவரை துளையிட்டதிலேயே அதிகபட்ச ஆழம் 13 கிலோ மீட்டர். பூமியின் மையப்பகுதியை அடைய வேண்டும் எனில், இதைப் போல 500 மடங்கு துளையிட வேண்டும்.

*
பூமித்தட்டுகள் எப்போதும் நகர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆண்டுக்கு சராசரியாக 2.5 சென்டிமீட்டர் தூரம். ஓராண்டில் நம் நகங்கள் வளர்வதும் ஏறத்தாழ இதே அளவுதான்!

*
வெதுவெதுப்பான, சூரிய ஒளி நிறைந்த ஆழ்கடல் பகுதிகளிலேயே பவழங்கள் காணப்படுகின்றன.

*6,690
கிலோமீட்டர் நீளம் கொண்ட, உலகின் மிக நீளமான நைல் நதியும் காலத்தின் கோலத்தில் சுருங்கி வருகிறது.

*
உலகின் மிகப்பெரிய ஆற்றுக் கழிமுகம் (டெல்டா), 77 ஆயிரத்து 700 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டது. கங்கை, பிரம்மபுத்ரா நதிகளால் உருவான இந்த டெல்டா, இந்தியாவிலும் பங்களாதேஷிலும் பரவியுள்ளது.

*
நிலவில் அமெரிக்கக் கொடி வைக்கப்பட்டிருந்தாலும், ஒரு போதும் அந்தக் கொடி பறப்பதில்லை. காரணம் காற்றின்மை!

*
கலிபோர்னியாவிலுள்ள ஒரு செம்மரத்தின் அடிமரச் சுற்றளவு 24 மீட்டர். உயரம் 83 மீட்டர். இந்த பிரமாண்டத்தைச் சிறப்பிக்கும் வகையில், இம்மரத்துக்கு ‘ஜெனரல் ஷெர்மன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

*
ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான பிளாங்க்டன் போன்ற உயிரினமாகத்தான் பிறக்கிறது, மிகப்பெரிய ஆக்டோபஸும் கூட. நண்டு, நட்சத்திர மீன் போன்றவையும் பிறப்பால் சின்னஞ்சிறு உயிரிகளே!

*Echinoderm  
என்ற கடல்வாழ் குடும்பத்தில் 6 ஆயிரத்துக்கும் அதிக இனங்கள் உண்டு. ஆனாலும், அவற்றில் 5 முக்கியப் பிரிவுகள்தான். இக்குடும்பத்தின் பிரதான உயிரினம்  நட்சத்திர மீன்!

*
டைனோசரை விடவும் பல மடங்கு மிகப்பிரமாண்டமான உயிரினமான நீலத்திமிங்கலம், 33 மீட்டர் நீளம் வரை வளரும்.



No comments:

Post a Comment