மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகளவில் பிரபலமான மென்பொருள் நிறுவனம் என்பது
அனைவரும் அறிந்த ஒன்றே. மென்பொருள் இல்லாமல் அந்நிறுவனம் லூமியா பிரான்டிங்
கொண்டு ஸ்மார்ட்போன் மற்றும் சர்ஃபேஸ் டேப்ளெட் என அந்நிறுவனம் ஹார்டுவேர்
சார்ந்த கருவிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றது.
இந்த வரிசையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட சில தொழில்நுட்ப கருவிகள்
இன்றளவும் பலரும் அறிந்திடாத ஒன்ராகவே இருக்கின்றது. இதனை தொடர்ந்து
பலரும் அறிந்திடாத மைக்ரோசாப்ட் ஏனைய கருவிகளின் பட்டியலை பாருங்கள்..

*வை-பை ரவுட்டர் 2002 முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டது. அமெரிக்காவில் அதிக பரிபலமானதும் குறிப்பிடத்தக்கது.

*கார்டுலெஸ் போன் லூமியா கருவிகளுக்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனம் 1988 ஆம் ஆண்டு கார்டுலெஸ் போன்களை அறிமுகம் செய்திருந்தது. இந்த கருவியில் பிசி இன்டிகிரேஷன், ஸ்பீச் ரெகக்னீஷன், காலர் ஐடி மற்றும் பல அம்சங்களை வழங்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
*டிஜிட்டல் சவுன்டு சிஸ்டம் 80
1998 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் மற்றும் பிலிப்ஸ் நிறுவனங்கள் இணைந்து
டிஜிட்டல் சவுன்டு சிஸ்டம் 80 கருவியை அறிமுகம் செய்தன. மைக்ரோசாப்ட்
நிறுவனத்தின் முதல் ஸ்பீக்கர் கருவி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
*ஃபிங்கர் ப்ரின்ட் ரீடர்
செப்டம்பர் 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த கருவியானது விண்டோஸ் எக்ஸ்பி
மற்றும் விஸ்டா இயங்குதளங்களிலும் பொருந்தும் திறன் கொண்டிருந்தது. இவை
பெரும்பாலும் இயங்குதளங்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில்
கண்டறியப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
*சர்ஃபேஸ் ஹப்
சுவற்றில் பொருத்த கூடிய இந்த கருவியானது பார்க்க தொலைகாட்சி போன்றே
இருக்கும், ஆனால் இதன் திரை முழுவதும் டச் ஸ்கிரீன் வசதி கொண்டிருப்பதோடு,
கணினி போன்று இது செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
*கேம்ஸ் குழந்தைகளுக்கான கேம்களை தயாரிப்பதில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 1997 முதல் 2000 ஆம் ஆண்டு வரை கவனம் செலுத்தியது. விடுமுறை காலத்தில் சரியாக வெளியிடப்பட்ட டெலிடப்பீஸ், ஆர்த்தர் மற்றும் பார்னி போன்ற கேம்கள் குழந்தைகளிடம் அதிக பிரபலமானதும் குறிப்பிடத்தக்கது.
*லைஃப்கேம்
2006 ஆம் ஆண்டு முதல் மைக்ரோசடாப்ட் நிறுவனம் லைஃப்கேம் கருவிகளை தயாரித்து
வருகின்றது. தற்சமயம் அந்நிறுவனம் தொடர்ந்து வெப் கேம் தயாரிப்புகளில்
கவனம் செலுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

*சைடுவைன்டர் 1995 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கருவி விண்டோஸ் கணினிகளில் மட்டும் பொருந்தும் படி வடிவமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த கருவியை 2003 ஆம் ஆண்டு முதல் நிறுத்தி கொண்டது.

*கேம்ஸ் குழந்தைகளுக்கான கேம்களை தயாரிப்பதில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 1997 முதல் 2000 ஆம் ஆண்டு வரை கவனம் செலுத்தியது. விடுமுறை காலத்தில் சரியாக வெளியிடப்பட்ட டெலிடப்பீஸ், ஆர்த்தர் மற்றும் பார்னி போன்ற கேம்கள் குழந்தைகளிடம் அதிக பிரபலமானதும் குறிப்பிடத்தக்கது.

*சைடுவைன்டர் 1995 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கருவி விண்டோஸ் கணினிகளில் மட்டும் பொருந்தும் படி வடிவமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த கருவியை 2003 ஆம் ஆண்டு முதல் நிறுத்தி கொண்டது.
No comments:
Post a Comment