Oct 26, 2015

செல்பீ குறித்து நீங்கள் அறிந்திராத சில தகவல்கள்

இன்று பெரும்பாலும் இளம்தலைமுறையினரை ஆட்டிப்படைக்கும் ஒன்றாக இருக்கும் செல்பீ, இன்று பலரது பழக்க வழக்கமாக மாறி வருகின்றது எனலாம். அனைவரும் எங்கு சென்றாலும் செலபீ ஒன்றை எடுத்து சமுகவலைத்தலங்களில் போடுகின்றனர். அந்த வகையில் செல்பீ குறித்து உங்களுக்கு தெரியாத சில விந்தை தகவல்கள்

*OxfordDictinaries.com தளத்தில் செல்பீ என்ற வார்த்தை ஆகஸ்டு 2013 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது

*செல்பீ என்ற வார்த்தை முதன் முதலில் 2004 ஆம் ஆண்டு ப்ளிக்கரில் பயன்படுத்தப்பட்டது.

*ட்விட்டரில் அதிக செல்பீக்களை பதிவேற்றம் செய்த பிரபலம் மில்லி சைரஸ், இவர் அக்டோபர் 2013 ஆம் ஆண்டில் சுமார் 121 செல்பீக்களை பதிவேற்றம் செய்தார்

*கைளி ஜென்னர் இன்ஸ்டாகிராமில் 451 செல்பீக்களை பதிவேற்றம் செய்தார்

*டைம்ஸ் பத்திரிக்கை செல்பீ என்ற வார்த்தையை 2012 ஆம் ஆண்டில் அதிக பிரபலமான வார்த்தைகளில் ஒன்றாக தேர்வு செய்தது

*2006 - 2009 ஆம் ஆண்டுகளில் சுய புகைப்படங்கள் மைஸ்பேஸ் படங்கள் என குறிப்பிடப்பட்டன

*2005 ஆம் ஆண்டில் வடிவமைப்பாளரும் புகைப்படக்காரருமான ஜிம் க்ராஸ் செல்பீ என்ற வார்த்தையை உபயோகப்படுத்தினார்

*1880 களில் மக்கள் சுய புகைப்படங்களை எடுத்துள்ளனர், இது 1900 ஆண்டுகளில் மேலும் அதிகரித்தது.

*ஸ்மார்ட்போன் கேஜட்ஸ்' சந்தையில் புதிதாக களமிறங்கி உள்ள 'பூச் செல்பீ'
நீங்கள் நாய், பூனை, கிளி என செல்லப்பிராணிகள் மீது அதீத ஆர்வமும், பாசமும் கொண்டவர்களா..
அப்போது உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட கருவி தான் - 'பூச்' செல்பீ' (Pooch Selfie)..!


*ரஷ்யாவின் சமூக வலைதளம் ஒன்று இறந்து போனவர்களுடன் எடுக்கப்பட்ட சிறந்த ‘டெட் செல்பீ’க்கு (Dead selfie) 5000 ரூபிள் பரிசாக வழங்கப்படும் என்று அந்த சமூக வலைதளம் அறிவித்து இருக்கிறது.

செல்பீ எடுத்து கொள்ளும் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதன் மூலம் பல உயிர்களும் பறி போகின்றன

செல்ஃபி மோகத்தை போக்க ‘ஆன்டி-செல்ஃபி’ மாத்திரைகள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.
தற்போது உள்ள காலக்கட்டத்தில் செல்ஃபி எனப்படும் தன்னை தானே படமெடுக்கும் பழக்கம் பலரையும் பாடாய் படுத்துகிறது. இதனால் அதிக அளவில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
இதனால் இதனை தடுக்க ‘ஆன்டி-செல்ஃபி’ மாத்திரைகள் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘மிண்ட்ஸ் ’- புதினா வாசனையுடன் கூடிய இனிப்பு சுவையுடன் இந்த மாத்திரைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
தினமும் 2 அல்லது 3 மாத்திரைகள் எடுத்துக் கொண்டால், இது செல்ஃபி எடுக்கும் பழக்கத்தை நிறுத்த உதவும் என அந்த மாத்திரை தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.


‘ஆழகழகாய் செல்பீ எடுப்பதும் ஒரு தனி கலை தான்’ என்ற பேச்சு வழக்கை நிரூபனம் செய்யும் வகையில் அமெரிக்க பல்கலைகழகமான இன்டியானா பல்கலைகழகம் செல்பீ கோர்ஸ் (Selfie Course) ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது..! அந்த பல்கலை கழகத்தின் தொடர்பியல் பேராசிரியர் 400 லெவல்கள் (Levels) கொண்ட ஒரு செல்பீ கோர்ஸை அறிமுகம் செய்ய முடிவெடுததுள்ளாராம். இந்த கோர்ஸில் மாணவர்களுக்கு செல்பீயின் பிரபலத்தன்மை பற்றியும், செல்பீ ஒரு கலாசாரமாக உருவெடுத்து இருப்பதை பற்றியும் ஆய்வு மற்றும் பாடங்கள் எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதே போன்ற செல்பீ சார்ந்த வகுப்பு கலிஃப்போர்னியா – லாஸ் ஏன்ஜலஸ் (California-Los Angeles) பல்கலைகழகத்திலும் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. செல்பீக்கள் மூலம் பெரும்பாலான மக்கள் தங்கள் சுய அடையாளத்தை உணர்கின்றனர் என்பதும், இது போன்ற செல்பீ கோர்ஸ்களுக்கு அடித்தளமாய் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.!

No comments:

Post a Comment