1. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் – மெக்டொனால்டில் பர்கர் செய்தவர்:
அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கும் ஜெஃப் பெஸோஸ், தனது இளமைப் பருவத்தில் மெக்டொனால்டில் பர்கர் செய்யும் சமையலறை வேலை செய்தவர். இது பற்றி அவர் கூறும்போது, “முதன் முதலில் நான் வேலைக்கு சென்றபோது நான் புதிது என்பதால் எனக்கு அந்த இடத்தினை சுத்தம் செய்யும் வேலை மட்டுமே கிடைத்தது, அங்கிருந்துதான் நான் படிப்படியாக சமையலறை வேலைக்கு வந்தேன். ஆனால் இறுதிவரை நான் பணம் வாங்கும் அக்கவுண்ட்ஸ் வேலையில் இருந்ததே இல்லை” என்றார்.2. கோடீஸ்வரன் வாரன் பஃபெட் – குறுங்கால வியாபாரி:
தனது பட்டப்படிப்பினை நெப்ரஸ்கா பல்கலைக்கழகத்தில் முடித்த பின்பு பஃபெட் ஒரு குறுங்கால முதலீட்டு வியாபாரியாக ஒமாஹாவில் உள்ள ‘பஃபெட்-ஃபால்க் & கோ’-வில் வேலை செய்தார். அதன் பின்பு தனது 26 வயதில் நியூயார்க் சென்று ஒரு பாதுகாப்பு ஆய்வாளராக பணியாற்றினார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்திற்கான முதுகலைப் படிப்பினை முடித்த பின்னர் ஒரு ஆய்வாளராக தனது பணியினை வால் ஸ்டீர்ட்டில் தொடர்ந்தார். பின்னர் ‘பஃபெட் பார்நெர்ஷிப் லிமிடெட்’ என்ற பெயரில் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் உதவியுடன் ஒரு சிறு நிறுவனத்தினை துவங்கினார். பின்பு அவர் ஆரம்பித்த ஜவுளிக் கடைதான் இன்று அவரை, இவ்வளவு பெரிய ஆளாக்கியுள்ளது.3. ஹிலாரி கிளின்டன் – சட்டப் பள்ளியில் நேரத்தினைக் கழித்தவர்:
ஹிலாரி ரோதம், பில் கிளின்டனை சந்திப்பதற்கு முன்னால் யேல் சட்டப்பள்ளியில் படித்தவர் மற்றும் யேல் குழந்தைகள் கல்வி மையத்தில் பணியாற்றிக் கொண்டே குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பிரச்சினைகளுக்காக போராடினார். அத்துடன் ஏழைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனைகளையும் வழங்கினார். தனது 23 வது வயதில் பில் கிளின்டனை சந்தித்தார், அத்துடன் தனது 25 வது வயதில் ‘குழந்தைகளும் சட்டமும்” என அவர் எழுதிய மிக பிரபலமாக மக்களிடையே பேசப்பட்டது.4. மார்க் கியூபன் – வேலையிலிருந்து நீக்கப்பட்டு ஐந்து நண்பர்களுடன் ஒரே அறையினைப் பகிர்ந்துகொண்டவர்:
மைக்ரோ சொல்யூஷன்ஸ் மற்றும் ப்ராட்காஸ்ட்.காம் போன்றவற்றின் முதலீட்டாளர் மற்றும் நிறுவனர், மற்றும் டாலாஸ் மாவெரிக்ஸ்ஸின் உரிமையாளர் மார்க் கியூபன் ஆவார். அவர் செய்த வேலையிலிருந்து நீக்கப்பட்ட அவர் தனியாக தங்குவதற்க்கு கூட ஒரு அறையில்லாமல் தனது ஐந்து நண்பர்களுடன் ஒரு அறையில் தங்கினார். அவருக்கென்று ஒரு தனி படுக்கை கூட கிடையாது. “எனது முந்தைய முதலாளிதான் எனக்கு ஒரு சிறந்த அறிவுரையாளர் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டவற்றைதான் இன்று நான் பிரதிபலிக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.5. பெண்களின் சின்னம் வென்டி டேவிஸ் – விவாகரத்தானவர்:
2013 ஆம் ஆண்டில் கருக்கலைப்பிற்கு எதிராக குரல்கொடுத்த வென்டி டேவிஸ் – இன் முற்கால வாழ்க்கையான அவரது 20 வது வயதில் விவகாரத்தான ஒரு தாயாக இருந்தார். தனது இரண்டாவது திருமணத்திற்கு முன்பு வரை அவர் பணிப்பெண்ணாகவும், வரவேற்பாளராகவும் பணிபுரிந்தார். அதற்கு முன்பே பொருளாதார பிரச்சினைகளின் காரணமாக டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து படிக்க முடியாமல் அவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.6. நகைச்சுவை எழுத்தாளர் டினா ஃபே – YMCA இன் குழந்தைகள் நல அமைப்பின் நிர்வாகி:
தனது கல்லூரி வாழ்க்கையில் எல்லோராலும் ‘நாடக மேதாவி’ என அழைக்கப்பட்டவர். தனது பட்டப்படிப்பினை முடித்தபின்பு நகைச்சுவை எழுத்தாளரானார். அதற்கு முன்பு, YMCA இன் குழந்தைகள் நல பதிவாளராக பணியாற்றினார். பிரபலமான நிறுவனம் ஒன்றிற்கு அவர் தொடர்ந்து தனது பதிப்புகளை அனுப்பியதன் மூலம் அந்நிறுவனத்தினால் வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார், 1997 இல் ஒரு சிறந்த நகைச்சுவை எழுத்தாளராக உருவெடுக்க ஆரம்பித்தார்.7. வடிவமைப்பாளர் ரால்ப் லாஃரன் – கழுத்து டை உருவாக்குபவராக இருந்தவர்:
பெயரினை வைத்து பலர் கிண்டல் செய்தததால், தனது 15 வது வயதில் தனது பெயரினை ‘ரால்ப் லாஃரன்’ என மாற்றிக்கொண்டார். பாரஃக் கல்லூரியில் படிப்பினை தொடர முடியாமல் வெளியேறியவர். 24 ஆவது வயதில் ஒரு ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்தார். அதன் பின்பு ஐரோப்பிய பாணியில் கழுத்து டைகளை வடிவமைத்தார். பின்பு கிடைத்த பிரபலங்களின் தொடர்புகளின் உதவியால் தற்போதைய நிலையில் உள்ளார். தற்போது “போலோ” என்ற சின்னத்துடன் வெளிவரும் டைகள் அனைத்தும் இவரின் வடிவமைப்பே.8. பாரக் ஒபாமா – சமூக அமைப்பாளர்:
1983 இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இருந்து தனது பட்டப்படிப்பினை அரசியல் அறிவியலில் முடித்தார். பின்பு சிக்காகோ சென்ற அவர் குறைந்த வருமானம் கொண்டவர்களின் அமைப்பிற்கு உதவி செய்யத் தொடங்கினார். அங்கு இயங்கி வந்த தொழிற்சாலைகளில் சில மூடப்பட்டதால் இந்த பிரச்சினை தோன்றியது. 27 வயதின் போது ஹார்வார்டு சட்டப் பள்ளியில் தனது படிப்பினை முடிந்தார்.9. ஆசிரியர் ஜே.கே. ரோவ்லிங்க் – ஹாரி பாட்டரைப் பற்றிய பகல்கனவுகளால் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டவர்:
ஜே.கே. ரோவ்லிங்க்கிற்கு தனது 25 வது வயதில் உலக பிரசித்திபெற்ற ஹாரிபாட்டார் கதைகளைப் பற்றிய சிந்தனைகள் தோன்றின. ஆனால் அவர் அந்த நேரத்தில் லண்டனின் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளராக பணியாற்றினார். அப்போது கிடைத்த நேரங்களில்தான் ஹாரிபாட்டர் கதைகளை தனது கணினியில் உருவாக்கி வந்தார். இதனால் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின்பு திருமணம், விவாகரத்து, குழந்தை பெற்றது, தாயின் இறப்பு என்று வாழ்க்கையில் வித்தியாசமான சூழல்கள் எழுந்தன. இத்தனை பிரச்சினைகளுக்கும் நடுவில் தான் அவர் அந்தக் கதைகளை உருவாக்கி தனது முதல் புத்தகத்தினை 1995 இல் வெளியிட்டார்.10. வாழ்க்கையின் குரு மார்த்தா ஸ்டுவர்ட் – பங்குத்தரகர்:
வாழ்க்கை மற்றும் வடிவமைப்பிற்கு அகராதியில் அர்த்தம் கண்டுபிடித்தால் இவர் பெயர்தான் இருக்கும் என்று அமெரிக்கர்கள் தற்போது இவரை பாராட்டலாம், ஆனால் இவர் முற்காலத்தில் வால் ஸ்டீர்ட்டில் ஐந்து ஆண்டுகள் பங்குதரகராக பணியாற்றியவர் என்பதைக் கேட்டால் கண்டிப்பாக பலரும் அதிர்ச்சியடைவர். அதன்பின்பு 1972 இல் தாயாக வீட்டிலே இருக்கலாம் என முடிவு செய்தார். பின்னர் தனது சமையலின் மூலம் வணிகத்தினை வளர்த்துக்கொண்டார்.11. ஒப்ராஹ் வின்ஃப்ரே – செய்தி வாசிப்பாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டவர்:
தொலைக்காட்சியில் தற்போது ராணியாகக் கருதப்படுபவரின் ஆரம்பகால வேலைப் பயணங்கள் எளிதாக அமையவில்லை. 1977 இல் தனது பணியான மாலை நேர 6 மணிச் செய்திகளை வாசிக்கும் பணியினை இழந்தார். 1978 இல் மற்றொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அழைத்தனர். ‘தான் அடுத்து என்ன செய்யப் போகிறோம்’ என்று பல நேரங்களில் எதிர்காலத்தினைப் பற்றி கவலைப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.இதில் கணக்கில் வராத பலர் உள்ளனர். அவர்களும் பிறவியிலேயே வெற்றியாளார்களாக பிறந்தவர்கள் அல்ல, போராடி முன்னேறியவர்கள் தான், நீங்கள் எப்போது வெற்றியாளராகப் போகிறீர்கள்?
No comments:
Post a Comment