Apr 15, 2020

காலை இழந்த பிரிட்டன், இராணுவ வீரரின் அதிசய வாக்குமூலம்..!

பிரிட்டன் இராணுவ வீரர்களில் ஒருவர் தான் நீங்கள் படத்தில் பார்க்கும் கிரீஸ்ஹார்பர்ட். இராக்கில் போர் செய்வதற்காக பிரிட்டன் அரசால் அனுப்ப பட்ட இராணுவ வீரர்களில் இவரும் ஒருவர்.

இராக்கில் நடைபெற்ற குண்டு வெடிப்பு ஒன்றில் தனது கால் ஒன்றை இழந்த இவர் தற்போது பிரிட்ன் திரும்பிவிட்டார். இவர் தனது காலை .இழந்தற்கு ஒரு முஸ்லிம் தான் காரணம் என்பதால் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் வெறுக்கும் தீவிரவாதியாக இவரை மாற்றுவதற்கு பல முஸ்லிம் விரோதிகள் முயன்றனர்.
அதற்கு கிரீஸ் அவர்களின் பதில் நேர்த்தியானதாகவும் இஸ்லாமிய எதிரிகளை சிந்திக்க வைப்பதாகவும் இருந்தது.
ஆம் அவர் சொன்னார்,

நான் எனது காலை இழந்ததற்கு ஒரு முஸ்லிம் நடத்திய குண்டுவெடிப்பு தான் காரணம் என்பதை சுட்டி காட்டி என்னை பலர்களும் திசை திருப்ப முனைகின்றனர். எனக்கு எதிராக குண்டு வெடிப்பு நடத்த படுவதற்கு நான் கிருத்துவனாக இருந்தது காரணம் அல்ல. நான் பிரிட்டீஷ் படை வீரனாக இருந்தது தான் காரணம்.
குறிப்பிட்ட குண்டு வெடிப்பில் நான் எனது காலை இழந்தது போல்பிரிட்டீஷ் இராணுவ உடையை அணிந்திருந்த ஒரு முஸ்லிமும் தனது கையை இழந்தான். எனவே குண்டிவெடிப்புக்கு கிருத்துவ முஸ்லிம் மோதல் கராணம் அல்லஎன்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
ஏதோ ஒரு முஸ்லிமின் காரணத்தால் நான் எனது காலை இழந்தது எவ்வளவு உண்மையோ அது போல் பல முஸ்லிம்கள் எனக்கு உதவியுள்ளதும் உண்மையாகும். நான் காயமுற்ற போது எனக்கு மருத்துவம் செய்ய ஓடி வந்த மருத்துவர் ஒரு முஸ்லிம். என்னை பிரிட்டன் வரையிலும் பத்திரமாக கொண்டு சேர்த்தவர் ஒரு முஸ்லிம். நான் நோயுற்றிருந்த காலத்தில் என்னை கவனித்து கொண்ட செவிலியர் ஒரு முஸ்லிம். நான் நலமுற்று எனது தந்தையுடன் வெளியேறிய போது எனக்கு உதவிய வாடகை கார் ஓட்டுனர் ஒரு முஸ்லிம்.
எனது ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு அழகான அறிவுரைகளை எனது தந்தைக்கு வழங்கியவர் ஒரு முஸ்லிம். இப்படி என்னை சுற்றியுள்ள பல முஸ்லிம்கள் என்னை நேசிக்கும் போது தவறு செய்த ஏதோ ஒரு முஸ்லிமை மட்டும் கவனத்தில் நான் ஏன் முஸ்லிம்களை எதிர்கவேண்டும்
நான் முஸ்லிம்களை நேசிக்கிறேன் அவர்களை எனது தோழர்களாக எண்ணுகிறேன் இவ்வாறு அந்த இராணுவ வீரர் தனது முகநுல் பக்கத்தில் கூறியிருக்கிறார

No comments:

Post a Comment