Nov 12, 2015

அமெரிக்க கோடீஸ்வரர் ராக்பெல்லர் வரலாற்று பக்கத்தில் இருந்து...



அமெரிக்க கோடீஸ்வரர் ராக்பெல்லரிடம் கல்லூரியில் வகுப்பறை கட்டுவதற்காக நன்கொடை வாங்க கல்லூரி மாணவர்கள் அவருடைய இல்லத்திற்குச் சென்றனர்
அப்போது அவர் சிறு விளக்கின் ஒளியில் படித்துக் கொண்டி ருந்தார். மாணவர்களைக் கண்டதும் திரியை அணைத்து விட்டு, அவர்களிடம் பேச ஆரம்பித்தார்.
மிகக் கஞ்சனான இவர் எங்கே உதவி செய்யப் போகிறார் என்று மாணவர்கள் நினைத்தனர். ஆனால், ராக்பெல்லர் வகுப்பறை கட்ட மூன்று லட்சம் ரூபாய் கொடுத்தார்.
வியப்படைந்த மாணவர்களுள் ஒருவர், ""நாங்கள் வந்தவுடன் திரியை அணைத்ததன் நோக்கம் என்ன?'' என்று கேட்டார்.
""
படிப்பதற்கு திரி தேவை. உங்களுடன் பேசும்போது அது எரியத் தேவையில்லை. ஒரு சில காசுகள் தானே என்று அற்பமாக மதிப்பிடக் கூடாது. சிறு துளிதான் பெரு வெள்ளமாகிறது. சிக்கனம் என்பது கஞ்சத் தனமன்று. நான் சிக்கனமாய் வாழ்வதனால் தான் இந்த நன்கொடையை உங்களுக்குத் தர முடிந்தது... நல்ல காரியத்திற்கு செய்ய முடிகிறது,'' என்றார்.
மாணவர்கள் மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment