பாஸ்போர்ட் அளவு புகைப்படம் என்றால் எல்லாம் ஒரே
அளவு என்று தான் நினைத்திருப்போம் ஆனால் ஓவ்வொரு நாட்டின் பாஸ்போர்ட் அளவு
புகைப்படத்திலும் சிறிய அளவில் மாற்றம் இருக்கும். எந்த நாட்டில் நாம்
இருந்தாலும் அந்த நாட்டிற்கு தகுந்தபடி பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக ஆனலைன் மூலம் உருவாக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
ஆன்லைன் மூலம் பலவித சேவைகளை இணையதளங்கள் மூலம் நாம் பெறுகின்றோம். அந்த வகையில் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் உருவாக்க உதவும் ஒரு தளத்தைப்பற்றித்தான் இந்தப்பதிவு. இணையதள முகவரி : http:// www.makepassportphoto.com/
நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை பாஸ்போர்ட், விசா, அடையாள அட்டை என
எதற்கு தகுந்தாற்போல் வேண்டுமோ அதற்கு தகுந்தாற்போல் உருவாக்கிக்
கொள்ளலாம். இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Select your photo
type என்பதில் எதற்காக புகைப்படத்தை மாற்றப்போகிறோம் என்பதை
தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து Upload file என்பதில் Choose file
என்ற பொத்தானை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்பத்தை தேர்ந்தெடுத்து
Next என்ற பொத்தானை சொடுக்கினால் வரும் திரையில் நம் புகைப்படம் பாஸ்போர்ட்
அளவு அல்லது நாம் தேர்ந்தெடுத்த புகைப்படமாக மாற்றப்பட்டுருக்கும்.
கண்டிப்பாக புதுமை விரும்பிகளுக்கும் நம்மவர்களுக்கும் இந்தப்பதிவு
பயனுள்ளதாக இருக்கும்.
ஆன்லைன் மூலம் பலவித சேவைகளை இணையதளங்கள் மூலம் நாம் பெறுகின்றோம். அந்த வகையில் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் உருவாக்க உதவும் ஒரு தளத்தைப்பற்றித்தான் இந்தப்பதிவு. இணையதள முகவரி : http://
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக