Nov 6, 2015

பொதுஅறிவு தகவல் குறிப்புகள்

கண் பற்றி சில தகவல்கள்
* தேளுக்கு பத்து கண்கள். இருப்பினும் பார்வை தெளி விருக்காது.
*
கருடனுக்கு மனிதனை விட இரண்டு மடங்கு அதிகமான பார்வைத்திறன் உண்டு.
*
அமிட்லாஸ் என்ற மீனுக்கு 4 கண்களுண்டு. இதனால் ஒரே சமயத்தில் நீர்மட்டத்துக்கு மேலும் கீழும் பார்க்க முடியும்.
*
பிளாட் மீனின் கண்கள் வயதாக வயதாக நகரும் தன்மை கொண்டவை.
*
ஸ்காலிப் என்ற கடற் சிப்பிக்கு மொத்தம் நூறு கண்கள் உண்டு. ஒவ்வொரு கண்ணிலும் லென்சும், பார்வை நரம்புகளும் உள்ளன.
*
கண்கள் இருந்தும் பார்வை இல்லாத உயிரினம் வௌவால்.
*
தேனீயின் கண்களால் புறஊதாக் கதிர்களைப் பார்க்க முடியும்.
*
கருவில் முதன்முதலாக உருவாகும் உறுப்பு கண்கள்தான்.
*
மரவட்டைக்கு ஏழு கண்கள் உண்டு.
*
டால்பின்கள் கண்களைத் திறந்தபடியே தூங்கும்.
*
பறவைகள் எப்போதும் ஒரு கண்ணை மட்டுமே மூடித் தூங்குகின்றன.
*
வண்டுகளுக்கும், முயலுக்கும் கண் இமைகள் கிடையாது.


வெள்ளை நிறம் பற்றி சில தகவல்கள்
*
தீங்கில்லாத பொய், ‘வெள்ளைப் பொய்எனப்படும்.
*
உயிர்க்கொல்லி நோய்களுக்கு எதிரான மருந்துகள்வெள்ளை மருந்துகள்என அழைக்கப்படுகின்றன.
* 1940
களில் சீனாவில் தோன்றிய ஜப்பானிய எதிர்ப்பு இயக்கம்வெள்ளை மலர்கள்என்பதாகும்.
*
லெனின்கிராட் நகரில் ஜூலை 22 முதல் 26 வரை இரவே இருக்காது. இதைவெள்ளை இரவுகள்என்று சொல்கிறார்கள்.
*
ரத்தம் சிந்தாத போர்வெள்ளை யுத்தம்எனப்படும்.
*
அயர்லாந்தில் கோழையைவெள்ளை ஈரல்காரன்என்கிறார்கள்.
*
பெட்ரோலியம் கரைப்பானாகச் செயல்படும்போதுவெள்ளை ஸ்பிரிட்எனப்படும்.
*
கசடு நீக்கப்பட்ட சுத்தமான சர்க்கரை, வெள்ளைச் சர்க்கரையாகும்.
*
சணல், நார்த் துணிகள் விற்பனைவெள்ளை விற்பனைஎனப்படும்.
*
நன்மை செய்யும் மந்திரக்காரிக்குவெள்ளை சூனியக்காரிஎன்று பெயர்.
*
இங்கிலாந்தில் ஏலத்தின்போது விலைகளை ஏற்ற அமர்த்தப்படும் மனிதர்வெள்ளை மனிதர்என அழைக்கப் படுவார்.

ஓவியம் பற்றி சில தகவல்கள்
* மைக்கேல் ஏஞ்சலோ வரைந்த புகழ் பெற்றஇறுதித் தீர்ப்புஎன்ற ஓவியத்தில், போப் நான்காம் பாலின் உருவம் எல்லோரையும் பயமுறுத்தும் விதத்தில் ஆடையின்றி இருந்தது. இதனால் டானியல்டி வோல்ட்ரோ என்ற இன்னொரு ஓவியர் மூலம் போப்பிற்கு ஆடைகள் அணிவித்தார்கள்.

* 1902
ம் ஆண்டு பாரிஸில் ஓர் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. அதில் வைக்கப்பட்டிருந்ததூங்கச் செல்லும் சூரியன்என்னும் தலைப்பிலான மாடர்ன் ஆர்ட் எல்லோரது கவனத்தையும் கவர்ந்தது. அதற்குப் பரிசு கிடைத்தது. ஆனால் அதை வரைந்தவர் யார் என்பதை மட்டும் சொல்லவில்லை. உண்மையில் அந்த ஓவியத்தை வரைந்தது ஒரு கழுதை. ஆம், கழுதையின் வாலில் பிரஷ்ஷைக் கட்டி விட்டுவிட அது வாலை ஆட்டும்போதெல்லாம் உருவான ஓவியம் இது.  

*
பிரெஞ்சு ஓவியரான அன்னி லூயிஸ் கிரோடெட் என்பவர் தலைத் தொப்பியை சுற்றி, 40 மெழுகுவர்த்திகள் எரிய வைப்பார். அந்த  வெளிச்சத்தில் மட்டுமே ஓவியம் வரைவார். எப்பொழுதும் பகலில் ஓவியம் வரையமாட்டார். ஓவியம் வரைந்து முடிக்க செலவாகும் மெழுகுவர்த்திகளின் எண்ணிக்கைக்குத் தக்கபடி ஓவியத்திற்கான விலையையும் முடிவு செய்வார்.

*
மோனாலிசா ஓவியம் இன்றும் அழியாப் புன்னகையுடன் நீடித்து உயிர் வாழக் காரணம் என்ன என்பது அண்மையில் தெரிய வந்துள்ளது. மோனாலிசாவின் உருவப் படங்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக 30 அடுக்குகளாக வரையப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஸ்கெட்ச் செய்து வரைந்த பிறகே ஓவியத்தை வண்ணம் பூசி நிறைவு செய்துள்ளார் டாவின்சி.

செய்தித்தாள் பற்றி  சில தகவல்கள்

* 1300 ஆண்டுகளுக்கு முன்பு சீன அரசாங்கம்சிங் போஎன்ற செய்தித்தாளை விநியோகித்தது. ‘தலைநகர் செய்திஎன்பது இதன் பொருளாகும். முக்கியமான தகவல்களை அரசாங்கம் இதன் மூலம் மக்களுக்குத் தெரிவித்தது. தொன்மையான ரோம் நகரியம் அரசாங்கச் செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்கஆக்டா டையூர்னாஎன்ற செய்தித்தாளை அச்சிட்டு விநியோகித்தது. ‘தினந்தோறும் நடைபெறும் நிகழ்ச்சிகள்என்பது இதன் பொருள். பதிவு செய்யப்பட்ட தகவலின்படி இவை இரண்டும்தான் செய்தித்தாள்களாக வெளிவந்திருக்கின்றன.

*
பதினாறாம் நூற்றாண்டிலேயே செய்தித்தாளை மக்கள் காசு கொடுத்து வாங்கத் தொடங்கிவிட்டார்கள். ‘நோடிஜி ஸ்கிரிட்டிஎன்று இதற்குப் பெயர்.எழுதப்பட்ட செய்திஎன்ற பொருளில் வெனிஸ் நகரில் அரசாங்கம் ஒரு செய்தித்தாளை வெளியிட்டது. ஒரு பிரதிக்கு  ‘ஒரு கெஜட்டாகொடுத்து மக்கள் வாங்கியிருக்கிறார்கள்.

* 18
ம் நூற்றாண்டில்தான் செய்தித்தாள்கள் முறையாக வெளி வரத் தொடங்கின. அவற்றில்    செய்திகள் மட்டுமல்லாது கருத்துக்களும் இடம்பெற்றன.

*
லண்டன் நகரில் 1663ம் ஆண்டில்இன்டலிஜென்சர்என்ற பெயரில் செய்தித்தாள் ஒன்று வெளிவந்தது. அப்போதெல்லாம் செய்தித்தாள்கள் வாரம் ஒரு முறையே வெளிவந்தன. தகவல் தொடர்பில் இருந்த இடைவெளி மற்றும் செய்தித்தாளை தயாரிப்பதில் இருந்த பொறுமை... ஆகியவையே இதற்குக் காரணம் எனலாம்.

*
இதுவரை வெளியிட்ட செய்தித்தாள்களில் மிகவும் செல்வாக்கான இடத்தைப் பெற்றுள்ளதி லண்டன் டைம்ஸ்1785ல் தொடங்கப்பட்டு இன்றுவரை வெளிவந்து கொண்டிருப்பது ஒரு பெருமையான செய்திதானே!

முட்டை பற்றி சில தகவல்கள்

*உலகில் முட்டை உற்பத்தி செய்யும் நாடுகளில் முதலிடம் வகிக்கிறது, சீனா. இரண்டாவது இடம், அமெரிக்காவுக்கு *டாக்டர் வில்லியம் போமன்ட் என்பவரின் ஆய்வின்படி, நமது இரைப்பை பச்சை முட்டையை ஜீரணிக்க இரண்டு மணி நேரமும் வேக வைத்த முட்டையை ஜீரணிக்க மூன்றரை மணி நேரமும் எடுத்துக் கொள்கிறதாம்.
*அமெரிக்காவில் மேற்கு மாண்டானா பகுதியில் முட்டை மலை அமைந்துள்ளது. டைனோசர்களின் முட்டைகள் இப்பகுதி தரையில் அதிக அளவில் புதைந்திருப்பதால் இப்பகுதிக்கு முட்டை மலை என்று பெயர் வந்ததாம்.
*அமெரிக்காவின்
டெக்சாஸில் உள்ள கோழி ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு கோழிக்கு சிமென்ட் கலந்த உணவை கொடுத்தார்கள். அந்தக் கோழி மிகப் பெரிய உறுதியான, சீக்கிரம் உடையாத முட்டையை இட்டு அசத்தியதாம். *ரேவன் பறவை பச்சை நிறத்திலும், பினாமஸ் பறவை மஞ்சள் நிறத்திலும் முட்டையிடும்.


* அமெரிக்காவில் வாலில்லாத சில வகை கோழிகள் நீல நிறத்தில் முட்டையிடும்.
*
நியூகினியாவிலுள்ள காசோவரி வான்கோழிகள் பச்சை நிறத்தில் முட்டையிடும்.
*
அன்னப் பறவைகள் பசுமை கலந்த வெள்ளை நிறத்தில் முட்டையிடும்.
*
ஜப்பானில் காணப்படும் குயில்களின் முட்டை சிவப்பு நிறத்தில் இருக்கும்.
*
ஆப்ரிக்க ஜிங் கோழி முட்டைகள் சிவந்த மஞ்சள் நிறமாய் கரும்புள்ளிகளைப் பெற்றிருக்கும்.
*
கழுகுகளின் முட்டை சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடன் இருக்கும்.
*
பவழக்கால் நாரைகளின் முட்டைகளில் புள்ளிகள் மற்றும் கோடுகள் காணப்படும்.
*
வரகு கோழிகள் மஞ்சள் நிற முட்டைகள் இடும்.
*
கருடன் முட்டை சாம்பல் நிறத்தில் இருக்கும்.
*
செந்தலைக் கிளிகளின் முட்டை வெண்ணிறத்தில் வட்ட வடிவத்தில் இருக்கும்.

காலண்டர்:பற்றி சில தகவல்கள்
*
காலண்டர் என்பதற்கு லத்தீன் மொழியில்கணக்குப் புத்தகம்என்று பொருள். ரோமானிய மொழியில்மாதத்தின் முதல் நாள்என்று பொருள்.
*
பழங்காலத்தில் ரோமானியர்கள் வீடுகளில் காலண்டர் மாட்டி வைப்பதில்லை. மாதப் பிறப்பன்று ஊர்ப் பணியாளர் வீதிகளில் வந்து, புது மாதப் பிறப்பை அறிவிப்பார்.
*
நாம் கடைப்பிடிக்கும் தேசிய காலண்டரின் பெயர் விக்ர சகாப்தம். 22.3.1957 முதல் தேசிய நாட்குறிப்பு நடைமுறைக்கு வந்தது.
* 1582
ல் பதிமூன்றாவது கிரிகோரி என்கிற பாதிரியார் கிரிகோரியன் காலண்டரை உருவாக்கினார்.
*
பாபுவா நியூ கினியா நாட்டு மக்களுக்கு காலண்டர் முறை தெரியாது. ஒவ்வொரு கிறிஸ்துமஸ் சமயமும் முட்டையிட வரும் ஆமைகளை வைத்து தங்கள் வயதைக் கணக்கிடுகின்றனர்.
*
திபெத்தியர் காலண்டரில் 13 என்ற தேதி இடம் பெற்றிருக்காது. 12, 14, 14, 15 என்றே அமைந்திருக்கும்.
*
பழங்காலத்தில் கிரேக்க நாட்டவர்கள் ஒரு வாரத்திற்கு பத்து நாட்களென்றும், ஒரு மாதத்திற்கு மூன்று வாரங்களென்றும் கணக்கிட்டு வந்தனர்.
எலி பற்றி சில தகவல்கள்
*நோய்வாய்ப்பட்ட அல்லது காயமுற்ற எலியை, மற்ற எலிகள் பராமரிப்பது வழக்கம்.
*
துணையில்லாமல் இருக்கும் எலி தனிமையை உணர்வதோடு, மனச்சோர்வுக்கும் ஆளாகும்.
*
எலிகளுக்கு அபாரமான நினைவாற்றல் உண்டு. ஒருமுறை கண்டறிந்த பாதையை ஒருபோதும் மறப்பதில்லை
*
எலிகள் மகிழ்ச்சியாக இருக்கையில் ஒன்றுக்கொன்று ஒலி எழுப்பியும், பற்களைக் கடித்துக் கொண்டும் இருக்கும். அப்போது அவற்றின் கண்களும் ஒளிரும். விளையாடும் போது சிரிப்பொலியை வெளிப்படுத்தும்.
*
நமக்கு ஏற்படுவதைப் போன்ற Peer Pressure எனும் ஒருவகை மன அழுத்தப் பிரச்னைக்கு எலிகளும் ஆளாவதுண்டு. பிற எலிகள் உண்பதைக் காணும்போது, தனக்குப் பிடிக்காத உணவாக இருப்பினும், அதை உண்பது இதற்கு ஒரு உதாரணம். குறிப்பாக பழுப்பு எலிகளே இந்த அழுத்தத்துக்கு அதிகம் ஆளாகின்றன.
*
துறுதுறுவென திரிந்தாலும் கூட, எலிகளுக்கு அச்ச சுபாவம் அதிகமே. ஆபத்து எனத் தெரிந்தால் அங்கிருந்து துரிதமாக பின்வாங்குவதற்கும் இதுவே காரணம்.
*
எலிகள் மிகவும் சுத்தமான விலங்குகள். தன்னை மட்டுமின்றி குழு உறுப்பினர்களின் உடலையும் தினமும் பல மணி நேரம் தேய்த்துச் சுத்தம் செய்து கொள்ளும். பூனைகள், நாய்களோடு ஒப்பிடும்போது, எலிகளைத் தாக்கும் வைரஸ்களும் ஒட்டுண்ணிகளும் மிகக்குறைவே.
*
எலிகளால் ஒட்டகத்தை விடவும் நீண்ட தொலைவுக்கு நீர் அருந்தாமலே செல்ல முடியும்.
*
உடலையும் வெப்பத்தையும் சமநிலையில் வைத்துக் கொள்ளவும், தகவல் தொடர்புக்கும் எலிகளுக்கு அவற்றின் வால்களே உதவுகின்றன.
*
உலகின் பல ஆய்வுக்கூடங்களில் காஸ்மெடிக் பொருட்களை பரிசோதிக்க எலிகளே பயன்படுத்தப்படுகின்றன.
*
சீன ஜாதகத்தின் 12 விலங்குகளில் எலிக்கே முதலிடம். எலி ஆண்டில் பிறப்பவர்கள் கற்பனைத்திறன், புத்திசாலித்தனம், நேர்மை, இலக்கு, தாராள குணம் உடையவர்களாக இருப்பார்கள் என்பது சீன நம்பிக்கை!

டால்பின்கள் பற்றி சில தகவல்கள்

*ஒரு டால்பினுக்கு உடல்நிலை சரியில்லா விட்டால், மற்ற டால்பின்கள் அதை மேலே தள்ளி, கரைக்குக் கொண்டு வந்து சேர்த்து, எளிதாகச் சுவாசிக்க உதவி செய்யும்.
*
டால்பின் தினம் 8 மணி நேரம் வரை உறங்கும். ஆனாலும், அதன் மூளையில் பாதி மட்டுமே ஒரு நேரத்தில் உறங்கும். அதனால் டால்பின் ஒருபோதும் நினைவிழப்பதில்லை!
*
மனிதர்களுக்கும் டால்பின்களுக்கும் தகவல்தொடர்பு ஏற்படுத்த, இப்போது ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தும் பொருள், ஐபேட்!
*
சில வகை டால்பின்கள் தேங்காய்களை பந்து போல கேட்ச் பிடித்து விளையாடும்.
*
தண்ணீருக்கு அடியில் எளிதாகச் சென்று இரை தேட, டால்பின்களுக்கு ஸ்பெஷலான சூப்பர் சக்தி உண்டு. எகோலொகேஷன் என்ற சோனார் வகையை இதற்காக அவை பயன்படுத்துகின்றன.
*
டால்பின்களுக்கு வாழ்நாள் முழுக்கவே ஒரு செட் பற்கள் மட்டுமே முளைக்கும்.
*
ரிஸ்ஸோ டால்பின்களால் 30 நிமிடங்கள் வரை மூச்சு விடாமல் இருக்க முடியும்.
*‘
கில்லர் வேல்ஸ்என்று அழைக்கப்படுபவை, கொலைகாரத் திமிங்கலங்கள் அல்ல... உண்மையில் அவை ஒருவகை டால்பின்களே!
*
ஒவ்வொரு டால்பினுக்கும் தனித்து அடையாளம் காணும் வகையில், பிரத்யேக விசில் சத்தம் உண்டு










1 comment:

  1. வாழ்நாழ் முழுவதும் ஒரு முட்டை இடும் பறவை

    ReplyDelete