வாழ்க்கையில் நாம் உயர்வதும் தாழ்வதும் நாம் மேற்கொள்ளும் அணுகுமுறை ஒன்றிலே அடங்கியிருக்கிறது.

Nov 14, 2015

விந்தையான தகவல்கள் சில அறிந்துகொள்வோம்


* மிக நீளமான மனிதச்சங்கிலி 1986 மே 25 அன்று 15 நிமிடங்களுக்கு நிகழ்த்தப்பட்டது. நியூயார்க் முதல் கலிஃபோர்னியா வரை 6682 கிலோமீட்டர் தூரத்துக்கு 65 லட்சம் பேர் கை கோர்த்து நின்றனர். ‘ஹேண்ட்ஸ் அக்ராஸ் அமெரிக்கா’ என்ற இந்நிகழ்வு, பசியால் தவிப்போருக்கும் வீடில்லாமல் வாடுவோருக்கும் நிதி திரட்டியது.

* 1930
களில் சோவியத் ரஷ்ய விஞ்ஞானி நிகோலய் வாவிலோ 2.5 லட்சம் விதைகள், வேர்கள் மற்றும் பழங்களைச் சேகரித்து, உலகின் மிகப்பெரிய விதை வங்கியை அமைத்தார்.

* 50
ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு மரம், தன் வாழ்நாளில் ரூ.16,90,937 மதிப்புள்ள ஆக்சிஜனை அளிக்கிறது. ரூ. 33,54,820 மதிப்புள்ள காற்றுமாசுத் தடுப்பு, மண் அரிப்புத் தடுப்பு ஆகிய பணிகளைச் செய்கிறது. ரூ.16,90,900 அளவுக்கு மண் வளத்தை உண்டாக்குகிறது. ரூ.20,29,125 அளவுக்கு நீர் மறுசுழற்சி செய்கிறது. ரூ.17,50,000 மதிப்புள்ள வாழும் வசதியை மற்ற உயிரினங்களுக்கு அளிக்கிறது. இப்படியாக ஒரு மரத்தின் மதிப்பு ரூ. 1 கோடிக்கும் அதிகம்.

*
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்திலுள்ள சில்வர் லேக் பகுதியில் உலகிலேயே அதிக பனிப்பொழிவு 1921ல் ஏற்பட்டது. 192.5 சென்டிமீட்டர்!

*
நெதர்லாந்து நாட்டின் 27 சதவீதப் பரப்பு, கடல்மட்டத்தை விட தாழ்வான பகுதிகளாக உள்ளது.

*
பாரா ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் 100 மீட்டர் தொலைவை 10.91 வினாடிகளில் எட்டினார். அவர் இரு கால்களையும் இழந்தவர்!

*
காண்டர் என்ற ராஜாளி பறவையானது, ஒருமுறை தென் அமெரிக்காவில் 20 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த ஒரு விமானத்தையே தாக்கியது.

* 33
நாட்களே கங்காருவின் கர்ப்ப காலம். 190 நாட்களில் அம்மாவின் பையிலேயே வளர்ச்சி. ஒரு வருடத்தில் பால்குடி மறக்கும். 27 ஆண்டுகள் வரை வாழும்!

*
தெற்கு அன்டார்க்டிக் கடலில் தொடங்கி, உருகுவே, பிரேசில் வரை 10
*
அன்டார்க்டிகாவிலுள்ள 71 ஆராய்ச்சி நிலையங்களில், மூன்றில் மட்டுமே மொபைல் போன் சிக்னல் கிடைக்கும்..

*
இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்தில் இருந்த அமெரிக்க வீரர்கள் பால் பருகுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் இங்கிலாந்தில் பால் பதப்படுத்தப்படாததே காரணம்!!.

*
சார்லஸ் ஆஸ்போர்ன் என்பவருக்கு 1922 முதல் 1990 வரை தொடர்ந்து 68 ஆண்டுகளுக்கு விக்கல் பிரச்னை இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட 43 கோடி விக்கல்கள். விக்கல் விலகிய அடுத்த ஆண்டே, 97 வயதில் இறந்து போனார் அவர். மெடிக்கல் மிராகிள்?

* 100
ஆண்டுகள் பழமையான சாக்லெட் பார், 700 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டிருக்கிறது!

*
கடல் மட்டத்தில் இயங்குவதை விடவும், உயரமான மலையில் கடிகாரம் சற்று வேகமாக ஓடும்!

*
அல்காரித கணித முறைப்படி சாலை விபத்துகளைத் தடுக்கும் முறையை ஆராய்ந்து வருகின்றனர் அமெரிக்காவிலுள்ள எம்..டி விஞ்ஞானிகள்.

*
பண்டைய கிரேக்கத்தில் ஒலிம்பிக் பந்தயங்களைப் பார்த்ததற்குக்கூட பெண்களுக்குக் கடும் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment