Labels
- படிப்பினை குறிப்புக்கள் (66)
- வரலாறு (31)
- சிந்தனை துளிகள் (27)
- விந்தை உலகம் (17)
- பொதுஅறிவு (16)
- மருத்துவம் (13)
- தொழில்நுட்பம் (10)
- இஸ்லாம் (9)
- மின் புத்தகங்கள் (7)
- தமிழ் ஆடியோ புத்தகங்கள் (3)
Nov 6, 2015
விசித்திரமான உண்மைகள்
* உலகின் 48 ஏழை நாடுகளின் மொத்த சொத்து மதிப்பை விட, உலகின் 3 பணக்காரக் குடும்பங்களின் சொத்து மதிப்பு அதிகம்!
*உலகில் ஒவ்வொரு நாளும் விமானப் பயணங்களின்போது 70 ஆயிரம் பேக்கேஜ்கள் தொலைகின்றன.
*தன் வாழ்நாளில் வால்டர் சம்மர்ஃபோர்டு என்பவர் மும்முறை மின்னலால் தாக்கப்பட்டார். ‘விடாது மின்னல்’ என்பது போல, அவர் இறந்த பிறகும், அவரது கல்லறையைத் தாக்கியது மின்னல்!
*வின்ஸ்டன் சர்ச்சில் ஒருமுறை சிறையிலிருந்து தப்பிப்பதற்கு முன், சிறை அதிகாரிகளுக்கு ‘வருத்தக் கடிதம்’ எழுதி வைத்திருந்தாராம்!
*அற்புதமான விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு, யூரி காகரின் ஒரு பயிற்சி விமான விபத்தில் இறந்து போனார்.
*சீனாவில் விமானப் பயணம் செய்த ஒருவர் பேக்கேஜ் கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக, 70 உடைகளை ஒரே நேரத்தில் அணிந்திருந்தார்!
*சார்லஸ் செர்விஷியோ என்பவர் ஒரே நாளில் 46,001 முறை ‘புஷ் அப்’ உடற்பயிற்சி செய்திருக்கிறார்!
*2013ல், லண்டன் கழிவுநீர் குழாய் அமைப்பில் மிகப்பெரிய அடைப்பு ஏற்பட்டது. அது என்னவென ஆராய்ந்ததில் கிடைத்தது, 15 டன் எடையுள்ள மிகப்பெரிய கொழுப்புப்பாறை! உறைந்த கொழுப்பும் இன்னபிற கழிவுகளும் சேர்ந்து, ஒரு பஸ் அளவுக்கு தடையாக உருவாகியிருந்தது.
*உலகில் ஆண்டுதோறும், 5.6 ட்ரில்லியன் சிகரெட் துண்டுகள் எறியப்படுகின்றன. இவற்றை ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், எலெக்ட்ரிக் கார், டர்பைன் ஆகியவற்றின் பாகங்களுக்குப் பயன்படுத்துவது பற்றிய விசித்திர ஆராய்ச்சியில் தென் கொரிய விஞ்ஞானிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
*44 வயது மனிதர் ஒருவர், மூளையின் 50-75 சதவீத பகுதிகளை hydrocephalus என்ற அதீத மூளைநீர் பிரச்னை காரணமாக இழந்துவிட்டார். இருப்பினும், அம்மூளை தன்னைத் தானே மறுசீரமைத்துக் கொண்டு, அவரை இன்னும் வாழ வைக்கிறது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment