Oct 31, 2015

பயன்னுள்ள Healthkart plus செயலி

நமது டாக்டர்கள் நமக்கு மருந்துகளை எழுதும்போது மருந்துகளின் "பிராண்ட்" பெயரில்தான் எழுதித் தருவார்கள். அந்த மருந்துகளில் அடங்கியுள்ள மூலப் பொருட்களைக் குறிப்பிட மாட்டார்கள்.
உதாரணத்திற்கு 
ஒரு கம்பெனி தயாரிக்கும் ஒரு மருந்தின் பிராண்ட் , பெயரைக் குறிப்பிட்டு எழுதித் தருவார்கள். அதே மூலப் பொருட்களைக் கொண்டு "இன்னொரு"கம்பெனியும் அதே வியாதிக்கு அதே மருந்தை வேறு பிராண்டு பெயரில் தயாரிப்பார்கள். இரண்டும் சிறந்த கம்பனிகள்தான்,ஆனால் ஒரு கம்பனி 54 ரூபாய்க்கு விற்கும், மற்றைய கம்பனி 5ரூபாய்க்கு விற்கும்.

இதை நீங்கள் ஹெல்த் கார்ட் பிளஸ் என்ற சாஃப்ட் வேர் ஐ உங்கள் ஆண்ட்ராய்டு செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டு மருந்தின் பெயரைத் தட்டிப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு :
பைசர் கம்பனியின் Lyrica என்ற மருந்து ஒன்று 54 ரூபாய்.ஆனால் அதே மருந்தை சிப்லா Prebaxe என்ற பெயரில் ஒன்று 6ரூபாய்க்கு விற்கிறது.இரண்டும் ஒரே தரம்தான்.

பன்னாட்டுக் கம்பனிகள்  நீதிமன்றம் வரை சென்று மூலப்பொருட்கள் பெயரைப் போடக் கூடாது என்று வாதிட்டும்  நீதிமன்றம் நமக்கு நன்மை செய்யவே அதை தள்ளுபடி செய்து ஜென்ரிக் பெயரை வெளியிடச் செய்துள்ளது.
நீங்க
1.Health Cart Plus software ல்
போய் நீங்க
வாங்கும் மருந்து பெயரைக் குறிப்பிட்டு Substitute, மாற்று என்று கேட்டால் அதே முலப் பொருள் கொண்ட இணையான
மருந்தின் பெயர் வரும்.
விலை குறைவாக இருக்கும். தரம் அதேதான்.

No comments:

Post a Comment