Oct 31, 2015

இளம்வயதில் சாதனை படைத்த வரலாற்று நாயகர்கள்


* வாழ்வுக்குத் தேவையான கருத்துக்களை போதிக்க ஆரம்பித்தபோது, கன்பூஷியஸின் வயது 22

* ‘
ஏழை மக்கள்என்ற முதல் நாவலை ரஷ்ய நாவலாசிரியரான தாஸ்தாவஸ்கி வெளியிட்டபோது அவருக்கு வயது 25.

* ‘
வெர்தரின் துயரங்கள்என்ற பிரசித்தி பெற்ற நாவலை ஜெர்மானிய மேதையான கதே வெளியிட்டபோது அவருக்கு வயது 25.

*
இனிய கவிதைகளை வடித்த கீட்ஸ், தம்முடைய 25 வயதிற்குள் 16,000 வரிகளைக் கவிதைகளாகப் பாடினார்.

*
வானொலியைப் படைத்த மார்கோனி வான்புகழ் பெற்றது, 27 வயதில்.

*
மாவீரன் நெப்போலியன் படைத் தளபதியானது தன்னுடைய 24வது வயதில்தான்.

*
காரல் மார்க்ஸ்மூலதனம்என்ற புகழ்பெற்ற நூலை எழுதியபோது அவரது வயது 23.

*
புவிஈர்ப்பு விசையைக் கண்டறிந்து உலகுக்கு அறிவித்த போது நியூட்டனுக்கு வயது 24.
 

* அலெக்சாண்டர் கிரஹாம் பெல் டெலிபோனைக் கண்டுபிடித்தபோது அவருக்கு வயது 29.
 

* வில்லியம் பிட் இங்கிலாந்தின் பிரதமராக பதவி ஏற்றபோது அவருக்கு வயது 24.

*
முதல் விண்வெளி வீரரான யூரி காகரின் தன் சாதனையைச் செய்தபோது அவருக்கு வயது 27.

No comments:

Post a Comment