*இந்தோனேஷியாவின் தென் சுலவேசி
மாகாணத்தில் உள்ள தானா டோராஜா (Tana Toraja) என்ற மலைப்பகுதியில்
வசிக்கும் டோராஜா இன மக்கள் வினோத சடங்கு ஒன்றைப் பின்பற்றி வருகின்றனர்.
இவ்வாறு செய்வதன் மூலம் இறந்த குழந்தைகள் அனைத்தும் இயற்கை அன்னையால் உட்கொள்ளப்படுகின்றன என்பது இவர்களது நம்பிக்கை.
*காகித மடிப்புகளின் மூலம் பல்வேறு உருவங்கள் செய்யும் கலை ஒரிகாமி.
லண்டனில் உள்ள ஒரு கார் நிறுவனம், காகித அட்டைகளால் செய்யப்பட்ட ஒரிகாமி
கார் ஒன்றை உருவாக்கி சாதனை செய்திருக்கிறது. இரும்பு, அலுமினியம்
சட்டங்களின் மீது அட்டைகளால் செய்யப்பட்ட ஒரிகாமி வடிவங்களைப்
பொருத்தியிருக்கிறார்கள். காரின் கூரை, கதவு, ஸ்டீரிங் அனைத்தும் அட்டைகளால் ஆனவை. இந்த காரை சாதாரண கார்களைப் போல சாலைகளில் செலுத்தியும் காட்டியிருக்கிறார்கள்.
தாய்லாந்தின் பின் தங்கிய கிராமமொன்றில் விநோதமான
உயிரினமொன்று பிறந்துள்ளது. எருதொன்றுக்கு பிறந்துள்ள போதிலும்
ஊர்வனவற்றினுடையதையொத்த
தோலினை கொண்டுள்ளது… மேலும் முதலையின் தலையின் வடிவத்தையொத்த தலையையும்
கொண்டுள்ளது.
*இங்கிலாந்தைச் சேர்ந்த டெஃபி விங்ஹாம் என்பவர் சமீபத்தில் உலகிலேயே மிக விலையுயர்ந்த ஆடையை வடிவமைத்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
தற்போது இவர் உலகிலேயே மிக விலை உயர்ந்த கேக் ஒன்றை உருவாக்கி அசத்தியிருக்கிறார்.சுமார் 6 அடி நீளமும் 450 கிலோ எடையும் கொண்ட இந்த கேக்கில் 4 ஆயிரம் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.இதில் உள்ள 17 அபூர்வ வைரக்கற்களின் விலை மட்டுமே ரூ.300 கோடி!இந்த கேக்கில் 120 கிலோ ஐஸிங்கும், 60 கிலோ சொக்லட்டும் சேர்க்கப்பட்டுள்ளன.கேக் மீது வைக்கப்பட்டு இருக்கும்
சொக்லட்பொம்மைகள் கைகளால் உருவாக்கப்பட்டவை.சுமார் 50 ற்கும் மேற்பட்ட பணியாளர்களுடன்
1,100 மணி நேரம் செலவிட்டு, ரூ.512 கோடி மதிப்புள்ள மிக விலை உயர்ந்த
இந்த கேக்கை டெஃபி உருவாக்கி அசத்தியிருக்கிறார்!*ஜப்பானைச் சேர்ந்த மீனவர் ஒருவர் பிடித்த மீன் ஒன்று, பார்க்க பயங்கரமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. ஜப்பானின் தீவான ஹொக்கைடோவுக்கும், ரஷ்ய கரைக்கும் இடையில் மீன் பிடித்து கொண்டிருந்த ஒருவரின் வலையில் சுமார் ஆறடி நீளமான பெரிய மீன் ஒன்று சிக்கியது.
இந்த
மீனின் வித்தியாசமான உருவ அமைப்பு, இது மீன்தானா? அல்லது, வேற்றுலக
வாசியா? இல்லாவிட்டால், புகுஷிமா அணு உலை வெடித்து சிதறியதால் ஏற்பட்ட
மாற்றமா? என இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோரை பீதியடைய வைத்துள்ளது.இது ‘வொல்ஃப் மீன்´ (Wolffish) வகை எனவும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.
இந்த மீனின் அதீத வளர்ச்சிக்கான காரணத்தை
தற்போது ஆய்வு செய்து கண்டறியும் முயற்சியில் ஜப்பானிய மீன்வளத்துறை
ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
*சீனாவின் ஜியாங்க்சி நகரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், வானில் மிதக்கும் நகரத்தை பார்த்துள்ளனர். கடந்த 13-ம் தேதி மேகமூட்டமாக இருந்த வானில், உயர்ந்த கட்டிடங்களை கொண்ட ஒரு மிதக்கும் நகரத்தை மக்கள் பார்த்து ஆச்சிரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். மிதக்கும் நகரத்தை பார்த்த ஒருவர் தனது செல்போனில் அதை படமாக எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை இதுவரை 40 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர்.
*சீனாவின் ஜியாங்க்சி நகரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், வானில் மிதக்கும் நகரத்தை பார்த்துள்ளனர். கடந்த 13-ம் தேதி மேகமூட்டமாக இருந்த வானில், உயர்ந்த கட்டிடங்களை கொண்ட ஒரு மிதக்கும் நகரத்தை மக்கள் பார்த்து ஆச்சிரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். மிதக்கும் நகரத்தை பார்த்த ஒருவர் தனது செல்போனில் அதை படமாக எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை இதுவரை 40 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர்.
பேரலல் யூனிவர்ஸ் என்ற அறிவியல் தியரி
படி, இதை ’இணை பிரபஞ்சத்தை’ சேர்ந்த நகரம் என்று சிலர் கூறினாலும், வானில்
தோன்றியதாக கூறப்படும் மிதக்கும் நகரம் என்பது கானல்நீர் போன்ற
பொய்தோற்றமாக இருக்கலாம் என கூறப்படுகிறது*தும்மல் என்பது ஒரு கொடிய நோய் என்றே கூற வேண்டும். ஏனெனில் ஒரு நாளின் இரண்டு, மூன்று தும்மல்கள் நம்மை எந்தளவு பாதிக்கின்றது! இருபதாயிரம் முறை ஒரே நாளில் தும்மல் ஏற்பட்டால்.. என்ன ஆவோம்!
மருத்துவர்களாலும் இது ஏன் ஏற்பட்டது? எனக் கண்டறிய முடியவில்லை!
*அடையாளம் காண முடியா நிலையில் ஒரே மாதிரியான மூன்று குழந்தைகள்
அச்சுவார்த்தாற் போல் மூன்று குழந்தைகள் பிறந்தால் அடையாளம் காண்பது
தொடர்பான ரகசியத்தை இங்கிலாந்து தம்பதி உலகுக்கு பகிர்ந்துள்ளனர்.
இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த கரேன்-இயன் கில்பர்ட்
தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், மூன்று குழந்தை
கருவில் இருப்பது கேட்டு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தனர். இரட்டைக்
குழந்தைகள் பிறக்க சொல்லப்படும் பல காரணங்களில் ஒன்று, இரண்டு கரு
முட்டைகள் கர்ப்பப் பையிலேயே தங்கி, அது தனித்தனியாக இரண்டு விந்துக்களுடன்
ஒவ்வொன்றாக இணைவது. இதுபோன்ற, பொதுவான பல கருத்துக்களை முறியடித்துவிட்டு ஒரே முட்டையில்
மூன்று விந்தணுக்கள் இணைந்து உருவான மூன்று குழந்தைகள் இத்தம்பதிக்கு
பிறந்தன. தற்போது இரண்டு வயதாகும், அந்த மூன்று பெண் குழந்தைகளும் சின்ன
மாற்றம்கூட இன்றி ஒன்றுபோல் தோன்றுவது மற்றவர்களுக்கு மட்டுமின்றி,
பெற்றோருக்கும் அவ்வப்போது குழப்பம் தருவதாக கரேன் தம்பதி கூறுகின்றனர்.*கலிபோர்னியாவில் உள்ள ஜெனரல் ஷெர்மன் என்ற மரம்தானாம் .கடந்த ஆண்டு மரங்களின் வளர்சிக் கணக்கெடுப்பின்படி படி இதுவரை இந்த மரத்தின் சாதனையை வேறு எந்த மரமும் வெற்றி கொள்ளவில்லை என்றால்
பார்த்துக்கொள்ளுங்கள் ..இறுதியான கணக்கெடுப்பின் படி அந்த மரத்தின் எடை
சுமார் 2,800 டன் என்றும் ., அடிபாகச் சுற்றளவு 135 அடியாம் . அதன் உயரமோ 260 அடி என்றால் யூகித்துக்கொள்ளுங்கள் எவளவு பெரிய மரமாக இருக்குமென்று .! 
*மனைவியரைத் தாங்கிக் கொண்டு ஓடும் வினோதமான போட்டி ஒன்று உலக சம்பியன்சிப் போட்டியாக நடாத்தப்படுகின்றது.இப்போட்டியில் பங்குபற்றும் ஆண்கள் தமது மனைவியரைத் தாங்கியபடி நீர் நிலை, நெடுஞ்சாலைகள் என்பனவற்றைத் தாண்டி ஓட வேண்டும்.முதலிடத்தைப் பெறும் ஜோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இப்போட்டியில் பங்குபற்றுபவர்கள் இதனை ஒலிம்பிக் போட்டிகளிலும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
*ஜப்பானை சேர்ந்த ஒருவர் தனது 105ஆவது வயதில் ஓட்டப் பந்தயத்தில் உலக சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஜப்பானைச் சேர்ந்தவர் டோகிசி மியாஸாகி. 105 வயதான இவர் சமீபத்தில்
நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் 100 மீட்டர் தூரத்தை 42.22 வினாடிகளில் கடந்து
உலக சாதனை படைத்துள்ளார். 105 வயதுடையவர்களுக்கான பிரிவில் உலகிலேயே அதிவேக
ஓட்டக்காரர் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.ஓட்டப் பந்தயத்தில் 105 வயதுடையவர்களுக்கான பிரிவை ஏற்படுத்திய பெருமையும் இவரையே சேரும். 105 வயதில் இவர் இவ்வாறு அதிவேகமாக ஓடுவது மருத்துவ உலகில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும், அவர் தனது வேகத்தில் திருப்தி இல்லை என்று கருதுகிறாராம்.
*




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக